பொது செய்தி

இந்தியா

பயணிக்கு மாரடைப்பு; பாகிஸ்தானில் தரையிறங்கிய இந்திய விமானம்

Updated : மார் 02, 2021 | Added : மார் 02, 2021 | கருத்துகள் (4)
Share
Advertisement
லக்னோ: சார்ஜாவிலிருந்து உ.பி., மாநிலம் லக்னோவுக்கு இன்று (மார்ச் 02) காலை வந்து கொண்டிருந்த இண்டிகோ விமானத்தில், பயணி ஒருவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதால் பாகிஸ்தானின் கராச்சி விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.இது குறித்து இண்டிகோ விமான நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், தங்களின் ‛6இ 1412' என்ற விமானம் சார்ஜாவிலிருந்து லக்னோவுக்கு வந்து கொண்டிருந்தது. பயணி
IndiGo, Flight Lands, Karachi, Passenger, Ill, Dies, Sharjah, Lucknow, இண்டிகோ, விமானம், பயணி, மாரடைப்பு, பாகிஸ்தான், தரையிறக்கம்

லக்னோ: சார்ஜாவிலிருந்து உ.பி., மாநிலம் லக்னோவுக்கு இன்று (மார்ச் 02) காலை வந்து கொண்டிருந்த இண்டிகோ விமானத்தில், பயணி ஒருவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதால் பாகிஸ்தானின் கராச்சி விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.

இது குறித்து இண்டிகோ விமான நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், தங்களின் ‛6இ 1412' என்ற விமானம் சார்ஜாவிலிருந்து லக்னோவுக்கு வந்து கொண்டிருந்தது. பயணி ஒருவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் கராச்சிக்கு திருப்பப்பட்டது. துரதிர்ஷ்டவசமாக அப்பயணியை காப்பாற்ற முடியவில்லை. வரும் வழியிலே அவர் இறந்துவிட்டார் என விமான நிலைய மருத்துவ குழுவினர் அறிவித்தனர் என கூறியுள்ளது. மாரடைப்பால் இறந்த 67 வயது நபர் ஹபீப்-உர்-ரஹ்மான் என அடையாளம் கண்டுள்ளனர்.


latest tamil news


நெஞ்சு வலி என கூறியவுடன் விமானி வழியிலிருந்த கராச்சியின் ஜின்னா சர்வதேச விமான நிலையத்தை தொடர்புகொண்டுள்ளார். அவர்கள் மனிதாபிமான அடிப்படையில் தரையிறங்க அனுமதித்துள்ளனர். ஆனால் விமானம் தரையிறங்குவதற்கு முன்னரே ரஹ்மான் இறந்து போயுள்ளார். விமானத்தை கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்யும்படி கராச்சி அதிகாரிகளிடம் இந்திய விமானி கோரிக்கை வைத்துள்ளார். அதனை அவர்கள் நிராகரித்துவிட்டனர். அங்கிருந்து ஆமதாபாத்திற்கு விமானம் வந்து கிருமிநாசினி கொண்டு சுத்தப்படுத்தப்பட்டு பின்னர் லக்னோவுக்கு செல்ல அனுமதிக்கப்பட்டது.

Advertisement




வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
M.COM.N.K.K. - Vedaranyam ,இந்தியா
03-மார்-202115:16:32 IST Report Abuse
M.COM.N.K.K. தரை இறங்க அனுமதித்ததே பெரிய விஷயம் போங்க கிருமி நாசினியா ஆ ஆ ஆ அங்கே எது மனிதாபிமானம்
Rate this:
Cancel
Vena Suna - Coimbatore,இந்தியா
03-மார்-202114:55:32 IST Report Abuse
Vena Suna பாவம்..கொடுமை.....
Rate this:
Cancel
N Annamalai - PUDUKKOTTAI,இந்தியா
03-மார்-202107:58:26 IST Report Abuse
N Annamalai சோகம் .விமானிகளின் முயற்சிக்கும் விமானத்தை இறங்க அனுமதித்த கராச்சி விமான நிலைய அதிகாரிகளுக்கும் நன்றிகள் .
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X