பூச்சி மருந்து குடித்து இளம்பெண் சாவு| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பூச்சி மருந்து குடித்து இளம்பெண் சாவு

Added : மார் 02, 2021
Share
பரங்கிப்பேட்டை : பரங்கிப்பேட்டை அருகே குளிர் பானத்தில், பூச்சி மருந்து கலந்து குடித்து இளம்பெண் இறந்தார்.பரங்கிப்பேட்டை அடுத்த சேந்திரக்கிள்ளை கிராமத்தைச் சேர்ந்தவர் முருகேசன், 53; இவரது மகள் அன்பரசி, 25; இவருக்கு, கடந்த 15 ஆண்டுகளாக சர்க்கரை நோய் இருந்துள்ளது. சிகிச்சை பெற்றும் குணமாகவில்லை.இதனால், விரக்தியடைந்த அன்பரசி, கடந்த மாதம் 25ம் தேதி குளிர் பானத்தில் பூச்சி

பரங்கிப்பேட்டை : பரங்கிப்பேட்டை அருகே குளிர் பானத்தில், பூச்சி மருந்து கலந்து குடித்து இளம்பெண் இறந்தார்.

பரங்கிப்பேட்டை அடுத்த சேந்திரக்கிள்ளை கிராமத்தைச் சேர்ந்தவர் முருகேசன், 53; இவரது மகள் அன்பரசி, 25; இவருக்கு, கடந்த 15 ஆண்டுகளாக சர்க்கரை நோய் இருந்துள்ளது. சிகிச்சை பெற்றும் குணமாகவில்லை.இதனால், விரக்தியடைந்த அன்பரசி, கடந்த மாதம் 25ம் தேதி குளிர் பானத்தில் பூச்சி மருந்து கலந்து குடித்து மயங்கி விழுந்தார்.உடன், சிகிச்சைக்காக, புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு, சிகிச்சை பலனின்றி, அன்பரசி நேற்று இறந்தார்.முருகேசன் கொடுத்த புகாரின்பேரில், பரங்கிப்பேட்டை சப் இன்ஸ்பெக்டர் சங்கரன் வழக்குப் பதிந்து, விசாரணை நடத்தி வருகிறார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X