சம்பவம் செய்தி

தமிழ்நாடு

அதிகாரிகள் சோதனையில் 57 லாரிகள் பறிமுதல்; ரூ.15 லட்சம் அபராதம்

Added : மார் 02, 2021
Share
Advertisement
தேர்தலையொட்டி நடந்த வாகன சோதனையில் அனுமதியின்றி மணல், செம்மண், ஜல்லிகள் ஏற்றி வந்த 57 லாரிகளை கலெக்டர் அதிரடியாக மடக்கிப் பிடித்து பறிமுதல் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.கலெக்டர் சந்திரசேகர சகாமுரி, அதிகாரிகளுடன் சிதம்பரம் - சீர்காழி பைபாசில் நேற்று அதிகாலை சோதனை மேற்கொண்டார். அப்போது ஜல்லி, மணல், செம்மண் உள்ளிட்ட கட்டுமானப் பொருட்களை அளவுக்கு

தேர்தலையொட்டி நடந்த வாகன சோதனையில் அனுமதியின்றி மணல், செம்மண், ஜல்லிகள் ஏற்றி வந்த 57 லாரிகளை கலெக்டர் அதிரடியாக மடக்கிப் பிடித்து பறிமுதல் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கலெக்டர் சந்திரசேகர சகாமுரி, அதிகாரிகளுடன் சிதம்பரம் - சீர்காழி பைபாசில் நேற்று அதிகாலை சோதனை மேற்கொண்டார். அப்போது ஜல்லி, மணல், செம்மண் உள்ளிட்ட கட்டுமானப் பொருட்களை அளவுக்கு அதிகமாகவும், அனுமதியின்றியும் ஏற்றிச் சென்ற 57 லாரிகளை மடக்கிப் பிடித்தார். இதில், 10க்கும் மேற்பட்ட லாரி டிரைவர்கள் அதிகாரிகளைப் பார்த்ததும் லாரியை நிறுத்தி விட்டு இறங்கி தப்பியோடினர்.

ஓவர் லோடு ஏற்றி வந்த லாரிகள் பெரும்பாலும் மயிலம் பகுதியில் இருந்து சீர்காழிக்குச் சென்றது விசாரணையில் தெரியவந்தது.பிடிபட்ட 57 லாரிகளையும் பறிமுதல் செய்த கலெக்டர், சிதம்பரம் தாலுகா காவல் நிலையத்தில் ஒப்படைத்தார்.அங்கு லாரிகள் நிறுத்த இடம் இல்லாதததால் சிதம்பரம் ஆர்.டி.ஓ., முக்கண்ணனிடம் ஒப்படைக்கப்பட்டு ஆர்.டி.ஓ., அலுவலக வளாகத்தில் நிறுத்தப்பட்டன.அங்கு, 10க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

சோதனையின்போது சிதம்பரம் சப் கலெக்டர் மதுபாலன், டி.எஸ்.பி., லாமேக், தாலுகா இன்ஸ்பெக்டர் விஜி உடனிருந்தனர்.வட்டார போக்குவரத்து அலுவலர் முக்கண்ணன் கூறுகையில், 'அதிக பாரம் ஏற்றி வந்தது, சாலை வரி, மாசுகட்டுப்பாட்டு சான்று உள்ளிட்டவைகள் இல்லாததால், 39 லாரிகளுக்கு 15 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது' என்றார்.

தேர்தலால் சிக்கிய லாரிகள்

தேர்தல் தேதி அறிவிப்புக்கு முன்வரை மணல், ஜல்லிகள், செம்மண், கிராவல் உள்ளிட்டவை அனுமதியின்றி ஏற்றிச் செல்வது வழக்கம். இதனை போலீசாரும், வருவாய்த் துறையினரும் கண்டு கொள்வதில்லை. அங்கொன்றும், இங்கொன்றுமாக பிடித்து வழக்குப் பதிந்து வந்த நிலையில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில் 57 லாரிகள் ஒரே இடத்தில் பிடிபட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

-நமது நிருபர்-

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X