கேரளாவில் மத நல்லிணக்கத்துக்கு அச்சுறுத்தல்: சோனியா வேதனை

Updated : மார் 04, 2021 | Added : மார் 02, 2021 | கருத்துகள் (44)
Share
Advertisement
திருவனந்தபுரம்:''கேரளாவில் மத நல்லிணக்கம், சகோதரத்துவத்துக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. அதில் இருந்து மீண்டு, கேரளா வளர்ச்சி அடைய, புதிய திட்டங்கள் தேவை,'' என, காங்கிரஸ் தலைவர் சோனியா வலியுறுத்திஉள்ளார்.கேரளாவில், முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான, இடது ஜனநாயக முன்னணி அரசு அமைந்துள்ளது.விரைவில் சட்டசபை தேர்தலை சந்திக்கும் நிலையில், திருவனந்தபுரத்தில்
Sonia, Sonia Gandhi, Congress, கேரளா, மத நல்லிணக்கம், அச்சுறுத்தல்,சோனியா,வேதனை

திருவனந்தபுரம்:''கேரளாவில் மத நல்லிணக்கம், சகோதரத்துவத்துக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. அதில் இருந்து மீண்டு, கேரளா வளர்ச்சி அடைய, புதிய திட்டங்கள் தேவை,'' என, காங்கிரஸ் தலைவர் சோனியா வலியுறுத்திஉள்ளார்.

கேரளாவில், முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான, இடது ஜனநாயக முன்னணி அரசு அமைந்துள்ளது.விரைவில் சட்டசபை தேர்தலை சந்திக்கும் நிலையில், திருவனந்தபுரத்தில் உள்ள, ராஜிவ் காந்தி கல்வியியல் வளர்ச்சி மையத்தின் சார்பில், கருத்தரங்கம் நடந்தது.கேரளாவின் வளர்ச்சிக்கான திட்டமிடல் குறித்து, 'வீடியோ கான்பரன்ஸ்' முறையில் நடந்த இந்த கருத்தரங்கில், சோனியாவின் உரை வாசிக்கப்பட்டது.

அதில், சோனியா கூறியுள்ளதாவது:மத நல்லிணக்கத்தில், நம் நாட்டுக்கு மட்டுமல்ல, உலகுக்கே, மிகச் சிறந்த உதாரணமாக, கேரளா இருந்து வருகிறது. ஆனால், தற்போது அங்கு மத நல்லிணக்கம் மற்றும் சகோதரத்துவத்துக்கு, பெரும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. கொரோனா பரவல் காலத்தில், அது மேலும் அதிகரித்துள்ளது. இதில் இருந்து மீண்டு, கேரளா, பழைய பெருமையை பெறும் வகையில், வளர்ச்சி திட்டங்கள் வகுக்கப்பட வேண்டும்.

பொது சுகாதாரம், கல்வி, படிப்பறிவு, சமூக நீதி, பாலின அதிகாரத்தில், கேரளா எப்போதும் முன்னோடியாக உள்ளது. ஆனால், தற்போது கேரளாவின் முன், எதிர்பாராத சில சவால்கள் உள்ளன.இங்கு, அடுத்த, 10 ஆண்டுகளுக்கான தொலைநோக்கு திட்டங்கள் அடங்கிய ஆவணம் வெளியிடப்பட்டுள்ளது. மக்களின் நம்பிக்கையுடன், அந்த திட்டங்களை முழுமையாக செயல்படுத்த, காங்., நிச்சயம் முயற்சிக்கும்.இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.


மன்மோகன் தாக்கு

கருத்தரங்கை துவக்கி வைத்து, முன்னாள் பிரதமர், மன்மோகன் சிங் பேசியதாவது:நாடு முழுதும் வேலைவாய்ப்பு பிரச்னை மிக அதிகமாக உள்ளது. அமைப்பு சாரா துறைகள் சிதைக்கப்பட்டுள்ளன. இதற்கு முக்கிய காரணம், 2016ல் அறிமுகம் செய்யப்பட்ட, பண மதிப்பிழப்பு திட்டம் தான்.சரியாக திட்டமிடாமல், யாருடைய ஆலோசனையையும் கேட்காமல், 500 மற்றும், 1,000 ரூபாய் நோட்டுகளை செல்லாது என்று அறிவித்தது, மிகப் பெரிய தவறு.

கேரளா மற்றும் நாட்டின் அனைத்து மாநிலங்களிலும், பொது நிதியின் நிலைமை மோசமாக உள்ளது. அதிகப்படியான கடன்களை வாங்கும் நிலைக்கு, மாநிலங்கள் தள்ளப்பட்டுள்ளன. இதனால் எதிர்கால பட்ஜெட் தயாரிப்பின்போது,மாநிலங்கள் பெரிய சுமையை சந்திக்க நேரிடும்.இவ்வாறு, அவர் பேசினார்.

Advertisement




வாசகர் கருத்து (44)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
bal - chennai,இந்தியா
03-மார்-202123:48:03 IST Report Abuse
bal என்ன வேதனை என்ன்றால் இந்த கம்யூனிஸ்ட் நாடு பூரா காங்கிரஸ்க்கு நண்பன் ஆனால் இந்த கேரளாவில் மட்டும் ஒத்து போக மாட்டேங்கிறானுக..
Rate this:
Cancel
Rajagopal - Los Angeles,யூ.எஸ்.ஏ
03-மார்-202123:15:28 IST Report Abuse
Rajagopal இந்து மத நல்லிணக்கத்துக்கு அச்சுறுத்தல்னு சொல்லியிருக்கணும். அதான் உண்மை.
Rate this:
Cancel
Nallavan Nallavan - நல்லதே நினைப்போம், நல்லதே நடக்கும் ,இந்தியா
03-மார்-202121:41:53 IST Report Abuse
Nallavan Nallavan கிறித்தவர்கள் அதிகமுள்ள கன்யாகுமரியில் எப்பொழுதும் ஒரு கிறித்தவ வேட்பாளரையே நிறுத்தும் காங்கிரசின் ஒரு மூத்த தலைவர் நீங்கள் ........... இப்படி நீங்கள் பேசுவது வேடிக்கையாக இருக்கிறது .........
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X