பொது செய்தி

இந்தியா

வாரத்திற்கு 5 நாட்கள் மட்டுமே பள்ளிகள் திறக்க கோரிக்கை

Added : மார் 02, 2021
Share
Advertisement
புதுச்சேரி : வாரத்திற்கு 5 நாட்கள் மட்டுமே பள்ளிகள் இயங்க பள்ளி கல்வித் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என புதுச்சேரி அரசு ஆசிரியர்கள் ஒருங்கிணைப்பு குழு வலியுறுத்தியுள்ளது.ஒருங்கிணைப்பு குழு தலைவர் மனோகரன் விடுத்துள்ள அறிக்கை:புதுச்சேரி சட்டசபை தேர்தல் பணியில் 7 ஆயி ரத்திற்கும் அதிக மான ஆசிரியர்கள் ஈடுபட்டுள்ளனர்.சனி, ஞாயிறுகளில் தேர்தல் பயிற்சி வகுப்பு களில்

புதுச்சேரி : வாரத்திற்கு 5 நாட்கள் மட்டுமே பள்ளிகள் இயங்க பள்ளி கல்வித் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என புதுச்சேரி அரசு ஆசிரியர்கள் ஒருங்கிணைப்பு குழு வலியுறுத்தியுள்ளது.

ஒருங்கிணைப்பு குழு தலைவர் மனோகரன் விடுத்துள்ள அறிக்கை:புதுச்சேரி சட்டசபை தேர்தல் பணியில் 7 ஆயி ரத்திற்கும் அதிக மான ஆசிரியர்கள் ஈடுபட்டுள்ளனர்.சனி, ஞாயிறுகளில் தேர்தல் பயிற்சி வகுப்பு களில் பங்கேற்கின்றனர். வாரத்தில் ஆறு நாட்கள் பள்ளிகளில் வகுப்பு நடத் துவது ஆசிரியர்களை சோர்வடைய செய்துள்ளது.

காரைக்காலில் பணி புரியும் புதுச்சேரியை சேர்ந்த 200க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் ஒரு நாள் விடுமுறையில் வீட்டிற்கு வந்து செல்ல முடியவில்லை. மேலும் 6 நாட்கள் பள்ளிகளுக்கு வரும் மாணவர்கள், ஒரு நாளில் வீடுகளில் படிக்க முடியவில்லை.பள்ளி கல்வித் துறையில் பணி புரியும் 50 சதவீத ஆசிரியைகள் ஒரு நாளில் குடும்ப தேவைகள், குழந்தைகளை கவனிக்க முடியவில்லை. ஆசிரியர்கள் பிரச்னையை கருத்தில் கொண்டு வாரத்திற்கு 5 நாட்கள் மட்டுமே பள்ளி கள் இயக்க பள்ளி கல்வித் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X