போலி நகை அடகு வைத்து மோசடி செய்தவர் கைது; ரூ. 4.35 லட்சம் பறிமுதல்

Added : மார் 02, 2021
Share
Advertisement
புதுச்சேரி : மூன்று அடகு கடையில் போலி நகை அடகு வைத்து ரூ. 4.35 லட்சம் மோசடி செய்தவரை போலீசார் கைது செய்தனர்.மூலக்குளம் குண்டு சாலையில், நேற்று முன்தினம் இரவு ரெட்டியார்பாளையம் போலீசார் நடத்திய வாகன சோதனை யின் போது, சந்தேகத்திற்கிடமாக பைக்கில் வந்த வரை மடக்கி விசாரித்தனர்.மன்னார்குடி, பறையூர், நடுத்தெருவைச் சேர்ந்த மாதவன், 40; என்பதும் சென்னை கூடுவாஞ்சேரி, நந்திவரம்,

புதுச்சேரி : மூன்று அடகு கடையில் போலி நகை அடகு வைத்து ரூ. 4.35 லட்சம் மோசடி செய்தவரை போலீசார் கைது செய்தனர்.

மூலக்குளம் குண்டு சாலையில், நேற்று முன்தினம் இரவு ரெட்டியார்பாளையம் போலீசார் நடத்திய வாகன சோதனை யின் போது, சந்தேகத்திற்கிடமாக பைக்கில் வந்த வரை மடக்கி விசாரித்தனர்.மன்னார்குடி, பறையூர், நடுத்தெருவைச் சேர்ந்த மாதவன், 40; என்பதும் சென்னை கூடுவாஞ்சேரி, நந்திவரம், காமேஸ்வரி நகர், 2வது குறுக்கு தெருவில் மாமனார் வீட்டில் வசிப்பதும் தெரிந்தது. அவரிடம் சில போலி தங்க நகைகள் இருந்தன.

விசாரணையில், கடந்த ஆண்டு மார்ச் மாதம் 3ம் தேதி ரெட்டியார்பாளையத்தில் மனோஜ் குமார் ஜெயின் அடகு கடையில் போலி தங்க நகையை அடமானம் வைத்து ரூ.1 லட்சத்து 5000; செப்., 9ம் தேதி, அதே பகுதியில் அருண்குமார் ஜெயின் கடையில் ரூ. 1.5 லட்சம்; ஒதியஞ்சாலை போலீஸ் நிலையம் அருகில் உள்ள அடகு கடையில் ரூ. 1.8 லட்சம் பெற்றுச் சென்றதை ஒப்புக் கொண்டார்.அவரை போலீசார் கைது செய்து சென்னையில் மறைத்து வைத்திருந்த ரூ. 4.35 லட்சத்தை பறிமுதல் செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

அவர் மீது சென்னை வில்லிவாக்கம், சீர்காழி, ஆலந்துார், திருவகுடி உட்பட பல போலீஸ் நிலையங்களில் மோசடி வழக்குகள் உள்ளன.குற்றவாளியை கைது செய்த ரெட்டியார்பாளை யம் இன்ஸ்பெக்டர் ஜெய்சங்கர், தனிப்படை சப்இன்ஸ்பெக்டர் சிவப்பிரகாசம், காவலர்கள் ராஜி, சசிதரன், கோவிந்தன், அரிஹரன், ஜெயக்குமார், ராஜவேல் ஆகியோரை சீனியர் எஸ்.பி. பிரதிக் ஷா கோத்ரா பாராட்டினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X