அசாமில் காங்., பிரியங்கா வீதி தோறும் அசத்தல்: இல்லத்தரசிகளுக்கு ரூ.2000 அறிவிப்பு

Updated : மார் 03, 2021 | Added : மார் 02, 2021 | கருத்துகள் (21+ 37)
Share
Advertisement
தேஸ்புர்:சட்டசபை தேர்தலை சந்திக்கும் வடகிழக்கு மாநிலமான அசாமில், காங்., பொதுச் செயலர் பிரியங்கா, வீதி வீதியாகச் சென்று பிரசாரம் செய்து வருகிறார். இல்லத்தரசிகளுக்கு மாதம், 2,000 ரூபாய் உதவித் தொகை, வீடுகளுக்கு, 200 யூனிட் வரை இலவச மின்சாரம் உள்ளிட்ட வாக்குறுதிகளை அறிவித்து, அசத்தியுள்ளார்.அசாமில், முதல்வர் சர்பானந்தா சோனவால் தலைமையிலான, பா.ஜ., அரசு அமைந்துள்ளது. சட்டசபையின்,
Priyanka Gandhi, Priyanka, Congress, பிரியங்கா

தேஸ்புர்:சட்டசபை தேர்தலை சந்திக்கும் வடகிழக்கு மாநிலமான அசாமில், காங்., பொதுச் செயலர் பிரியங்கா, வீதி வீதியாகச் சென்று பிரசாரம் செய்து வருகிறார். இல்லத்தரசிகளுக்கு மாதம், 2,000 ரூபாய் உதவித் தொகை, வீடுகளுக்கு, 200 யூனிட் வரை இலவச மின்சாரம் உள்ளிட்ட வாக்குறுதிகளை அறிவித்து, அசத்தியுள்ளார்.

அசாமில், முதல்வர் சர்பானந்தா சோனவால் தலைமையிலான, பா.ஜ., அரசு அமைந்துள்ளது. சட்டசபையின், 126 தொகுதிகளுக்கு, மார்ச், 27, ஏப்., 1 மற்றும் 6ம் தேதிகளில், மூன்று கட்டங்களாக தேர்தல் நடக்க உள்ளது.இங்கு, ஆளும் கட்சியான, பா.ஜ.,வுக்கும், எதிர்க்கட்சியான காங்கிரசுக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது.


அசாம் சட்டசபைக்கு வரும் 27ல் முதல்கட்ட தேர்தல் தொடங்குகிறது. பிரச்சாரம் செய்வதற்காக 2 நாட்கள் பயணமாக, அங்கு சென்று இருக்கிறார் காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா. பிரச்சாரத்திற்கு இடையே, பிஸ்வநாத் மாவட்டத்தில் தேயிலை எஸ்டேட்டிற்கு சென்று, தோட்ட தொழிலாளர்களுடன் அமர்ந்து கலந்துரையாடினார். தலையில் கூடையை மாட்டிக்கொண்டு தேயிலை பறித்துபோட்டு, தோட்டத் தொழிலாளர்களின் மனம் கவர்ந்தார்.

'ஐந்து உறுதிமொழிகள்'

'கடந்த ஐந்து ஆண்டுகளில், நாங்கள் நிறைவேற்றிய வளர்ச்சி திட்டங்கள், எங்களின் வெற்றிக்கு உதவும்' என, பா.ஜ.,வினர் கூறி வருகின்றனர். 'ஆளும் கட்சிக்கு எதிரான அலை, மாநிலம் முழுதும் வீசுகிறது. இந்த முறை வெற்றி எங்களுக்குத் தான்' என, காங்கிரஸ் கட்சியினர் தெரிவிக்கின்றனர். அரசியல் கட்சியினரின் தேர்தல் பிரசாரம் சூடு பிடித்துள்ளது.

காங்., பொதுச் செயலர் பிரியங்கா, அசாமில், கடந்த இரண்டு நாட்களாக முகாமிட்டு, வீதி வீதியாக பிரசாரம் செய்து வருகிறார். இரண்டாம் நாளான நேற்று, தேஸ்பூர் தேயிலை தோட்டங்களுக்குச் சென்று, பெண் தொழிலாளர்களைச் சந்தித்து பேசினார். அவர்களது குறைகளை கேட்டறிந்தார்; அவர்களுடன் நடனமாடினார். பிரசார கூட்டங்களிலும் பேசினார்.

பிரசாரத்தின்போது, பிரியங்கா பேசியதாவது: 'ஐந்து உறுதிமொழிகள்' என்ற இந்த பிரசாரத்தில், நாங்கள் உங்களுக்கு, எந்தவிதமான தேர்தல் வாக்குறுதியையும் அளிக்கப் போவதில்லை. சொல்வதை நிறைவேற்றும் உறுதிமொழிகளை மட்டும் அளிக்க உள்ளேன்.


தினக்கூலி ரூ.365

இங்கு ஆட்சி அமைக்க, எங்களுக்கு வாய்ப்பளித்தால், அனைத்து இல்லத்தரசிகளுக்கும், மாதம், 2,000 ரூபாய் உதவித் தொகை வழங்கப்படும். அனைத்து வீடுகளுக்கும், 200 யூனிட் வரை, இலவச மின்சாரம் வழங்கப்படும்.தேயிலை தொழிலாளர்களுக்கான, தினக் கூலி, 167 ரூபாயில் இருந்து, 365 ரூபாயாக உயர்த்தப்படும். குறைந்தபட்சம், 25 ஆயிரம் இளைஞர்களுக்கு, அரசு வேலை வழங்கப்படும்.


கவலை இல்லை

சி.ஏ.ஏ., எனப்படும், குடியுரிமை திருத்த சட்டத்தை ரத்து செய்வோம். ஐந்து ஆண்டுகளாக, பா.ஜ., உங்களை ஏமாற்றி வந்துள்ளது. அசாமில், 25 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பை உருவாக்குவோம் என்றனர். ஆனால், சி.ஏ.ஏ.,யை திணித்துள்ளனர்.

மத்திய அரசின் விவசாய சட்டங்களை எதிர்த்து, டில்லியில் விவசாயிகள் போராடி வருகின்றனர். அவர்களை சந்தித்து, அவர்களது பிரச்னை என்னவென்று கேட்க, பிரதமர் நரேந்திர மோடி தயாராக இல்லை. மத்திய அரசின் அனைத்து திட்டங்களும், பணக்காரர்களுக்கானது. ஏழை, எளிய மக்கள் குறித்து, அவர்கள் கவலைப்படுவது இல்லை.இவ்வாறு, அவர் பேசினார்.


'காங்கிரஸ் கூட்டணி ஏன்?'

அசாமில், 2016ல் நடந்த சட்டசபை தேர்தலின்போது, பா.ஜ.,வுடன் கூட்டணி அமைத்து, ஆட்சியில் இடம்பெற்ற, பி.பி.எப்., எனப்படும், போடோலாந்து மக்கள் முன்னணி, தற்போது, காங்கிரசுடன் கூட்டணி அமைத்துள்ளது.

தேஸ்புரில், பிரியங்கா பங்கேற்ற பிரசார கூட்டத்தில், பி.பி.எப்., தலைவர் ஹக்ராமா மொஹிலாரி பேசியதாவது: கடந்த தேர்தலின்போது, காங்கிரசில் இருந்து விலகி, பா.ஜ.,வில் இணைந்த ஹிமந்த பிஸ்வா சர்மா கூறியதால், பா.ஜ., தலைமையிலான கூட்டணிக்கு ஆதரவு அளித்தோம். ஆனால், அவர் எங்களை தவறாக வழிநடத்தியுள்ளார் என்பதை, தற்போது உணர்ந்துள்ளோம். அதனால், காங்கிரஸ் தலைமையிலான கூட்டணியில் இணைந்துள்ளோம். இந்தத் தேர்தலில், காங்., கூட்டணி வெற்றி பெறுவது உறுதி. பா.ஜ., கூட்டணி அரசுக்கு முடிவு கட்டுவோம்.இவ்வாறு, அவர் பேசினார்.

Advertisement




வாசகர் கருத்து (21+ 37)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
bal - chennai,இந்தியா
03-மார்-202123:45:57 IST Report Abuse
bal ஆட்சியிலிருந்த ஐம்பது வருடங்கள் ஒன்னும் பண்ணல...
Rate this:
Cancel
bal - chennai,இந்தியா
03-மார்-202123:45:13 IST Report Abuse
bal இவங்க பாட்டி இப்படித்தான் மக்களை ஏமாத்தினாங்க....
Rate this:
Cancel
வாரிசு குலத்தொழில் நிராகரிப்போம் மக்கள் வரிப்பணத்தை எடுத்து மக்களுக்கே லஞ்சம் கொடுப்பதை ஆரம்பித்து வைத்தது ஒரு தமிழர் என்பதில் பெருமை கொள்கிறேன் . இதே ஆரியர்களும் எங்கள் தலைவர் வழி நடக்கிறார்கள்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X