சரக்கு போக்குவரத்துக்கு 23 நீர்வழிப்பாதைகள் அமைக்க பிரதமர் மோடி இலக்கு!

Updated : மார் 02, 2021 | Added : மார் 02, 2021 | கருத்துகள் (5)
Share
Advertisement
புது டில்லி: 2021-ம் ஆண்டுக்கான கடல்சார் இந்தியா மாநாட்டை தொடங்கி வைத்த பிரதமர் மோடி, 2030-க்குள் சுற்றுச்சூழலுக்கு உகந்த 23 நீர்வழிப்பாதைகளை செயல்பாட்டுக்கு கொண்டு வர இலக்கு நிர்ணயித்திருப்பதாக கூறினார்.கடல்சார் இந்தியா மாநாட்டில் மேலும் பிரதமர் பேசியதாவது: முக்கிய துறைமுகங்களின் திறன், கடந்த 2014-ம் ஆண்டில் 870 மில்லியன் டன்களாக இருந்தது.இது தற்போது 1550 மில்லியன்

புது டில்லி: 2021-ம் ஆண்டுக்கான கடல்சார் இந்தியா மாநாட்டை தொடங்கி வைத்த பிரதமர் மோடி, 2030-க்குள் சுற்றுச்சூழலுக்கு உகந்த 23 நீர்வழிப்பாதைகளை செயல்பாட்டுக்கு கொண்டு வர இலக்கு நிர்ணயித்திருப்பதாக கூறினார்.



latest tamil news



கடல்சார் இந்தியா மாநாட்டில் மேலும் பிரதமர் பேசியதாவது: முக்கிய துறைமுகங்களின் திறன், கடந்த 2014-ம் ஆண்டில் 870 மில்லியன் டன்களாக இருந்தது.
இது தற்போது 1550 மில்லியன் டன்களாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நமது துறைமுகங்கள் சரக்கு கப்பல்களின் காத்திருப்பு நேரத்தைக் குறைத்துள்ளன. உலகத் தரத்திலான கட்டமைப்புகள் உருவாக்கப்படுகின்றன. இந்தியாவின் நீண்ட கடற்கரை உலகின் முதலீடுகளுக்கு காத்திருக்கிறது. எங்கள் துறைமுகங்களில் முதலீடு செய்யுங்கள். நீர்வழிப்பாதைகளில் நமது அரசாங்கம் இதுவரை இல்லாத வகையில் முதலீடு செய்து வருகிறது.


latest tamil news



உள்நாட்டு நீர்வழிகள் சரக்குப் போக்குவரத்துக்கு செலவு குறைந்த மற்றும் சுற்றுச்சூழலுக்கு தோதான வழி என கண்டறியப்பட்டுள்ளது. 2030-க்குள் 23 நீர்வழிகளை செயல்பாட்டுக்கு கொண்டு வர இலக்கு நிர்ணயித்துள்ளோம். என பேசினார்.

Advertisement




வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
TamilArasan - Nellai,இந்தியா
03-மார்-202111:50:44 IST Report Abuse
TamilArasan இதற்கும் ஒரு கூட்டம் வந்து அம்பானி அதானி கார்ப்பரேட் என்று ஒப்பாரி வைப்பார்கள் பாருங்க...
Rate this:
Cancel
Suman - Mayiladuthurai ,இந்தியா
03-மார்-202111:12:48 IST Report Abuse
Suman சரக்கு வித்து சாபாதிச்சவங்களைத்தான் தமிழகம் அறியும். இப்படி சரக்கு போக்குவரத்துக்கு 23 நீர்வழிப்பாதைகள் அமைத்து பொருளாதார ரீதியில் உயர்த்தி தமிழனை சிந்திக்க வைத்துவிடுவார் போலிருக்கிறது....பொதுவாக தினமும் ஜாதி பிரச்சனை என்று பேசி பழக்கப்பட்ட அறிவாளிகளும் சிந்திப்பார்கள். நன்றி மோடி ஜி.
Rate this:
Cancel
Ellamman - Chennai,இந்தியா
03-மார்-202110:54:36 IST Report Abuse
Ellamman இந்த துறைக்கு பிரதமர் ரமேஷ் ஜார்க்கோல்லி போன்ற அமைச்சர்களை நியமிக்கல் பார்த்து இருக்க வேண்டும்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X