பொது செய்தி

இந்தியா

கடல்சார் துறையில் முதலீடு: முதலீட்டாளர்களுக்கு அழைப்பு

Updated : மார் 04, 2021 | Added : மார் 02, 2021 | கருத்துகள் (6)
Share
Advertisement
புதுடில்லி:''கடல்சார் துறைகளில், நீர் வழித்தடங்களை மேம்படுத்துவது, கடல் விமான சேவைகள் துவங்குவது, கடல் சார்ந்த பகுதிகளின் சுற்றுலா வளர்ச்சியை அதிகரிப்பது உள்ளிட்ட, பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளன. ''எனவே, இந்தியாவில் முதலீடு செய்ய, சர்வதேச முதலீட்டாளர்கள் முன்னுரிமை அளிக்க வேண்டும்,'' என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார். இந்திய கடல்சார் மாநாட்டை,
கடல்சார் துறை, முதலீடு, முதலீட்டாளர், அழைப்பு

புதுடில்லி:''கடல்சார் துறைகளில், நீர் வழித்தடங்களை மேம்படுத்துவது, கடல் விமான சேவைகள் துவங்குவது, கடல் சார்ந்த பகுதிகளின் சுற்றுலா வளர்ச்சியை அதிகரிப்பது உள்ளிட்ட, பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளன. ''எனவே, இந்தியாவில் முதலீடு செய்ய, சர்வதேச முதலீட்டாளர்கள் முன்னுரிமை அளிக்க வேண்டும்,'' என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.

இந்திய கடல்சார் மாநாட்டை, டில்லியில், பிரதமர் நரேந்திர மோடி, துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது: இந்திய பொருளாதாரம், மிக வேகமாக வளர்ந்து வருகிறது. ஏற்கனவே உள்ள, உள்கட்டமைப்புகளை புதுப்பிப்பது, அடுத்த தலைமுறை கட்டமைப்புகளை உருவாக்குவது, பல்வேறு துறைகளிலும் சீர்திருத்த நடவடிக்கைகளை அதிகரிப்பது உள்ளிட்ட திட்டங்கள் உள்ளன.

முன் எப்போதும் இல்லாத அளவுக்கு, நீர்வழிப் பாதைகளை உருவாக்குவதில், இந்த அரசு, அதிக கவனம் செலுத்தி வருகிறது. இதன் வாயிலாக, சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தாமல், குறைவான செலவில், சரக்கு மற்றும் மக்கள் போக்குவரத்து சாத்தியமாகும்.வரும், 2030க்குள், 23 நீர்வழிப் பாதைகளை உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது.கடல் விமான சேவைகளுக்காக, வரும், 2023க்குள், உள்நாடு மற்றும் வெளிநாட்டு கடல் விமான முனையங்கள் உருவாக்கப்படும்.

இதுபோன்ற முனையங்கள், 16 இடங்களில் ஏற்படுத்தப்படும். மேலும், நாடு முழுதும் உள்ள, 189 கலங்கரை விளக்கங்களை சுற்றியுள்ள நிலப்பரப்புகளில், சுற்றுலா வளர்ச்சியை மேம்படுத்தவும் திட்டம் உள்ளது. முக்கிய துறைமுகங்களில், சூரிய சக்தி மற்றும் காற்றாலை வாயிலாக, மின்சார வசதி ஏற்படுத்தும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

வரும், 2030க்குள், அனைத்து துறைமுகங்களிலும், புதுப்பிக்க கூடிய சக்தியின் பயன்பாட்டை, 60 சதவீதம் வரை உயர்த்த திட்டமிடப்பட்டுள்ளது.இங்கு, 2.25 லட்சம் கோடி ரூபாய் செலவிலான, 400 முதலீடு திட்டங்களை, மத்திய போக்குவரத்து துறை அமைச்சகம் தயாராக வைத்துள்ளது. மேலும், 2030 - 35க்குள், சாகர்மாலா திட்டத்தின் கீழ், 6 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான, 574 திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளன.

துறைமுகங்களில், தனியார் முதலீடுகளை ஊக்குவிக்கிறோம். இங்கு, மிக நீண்ட கடல் பரப்பு உள்ளது. உழைக்கும் மக்கள் உள்ளனர். எனவே, வளர்ந்து வரும் இந்திய கடல்சார் துறைகளில் முதலீடு செய்ய, சர்வதேச முதலீட்டாளர்கள் முன்னுரிமை அளிக்க வேண்டும்.இவ்வாறு, அவர் பேசினார்.

Advertisement




வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
vinoth - Chennai,இந்தியா
03-மார்-202123:35:01 IST Report Abuse
vinoth மேற்கு கடலோர மாநிலங்கள் for ambani கிழக்கு கடலோர மாநிலங்கள் for adani
Rate this:
Cancel
ஜெயந்தன் - Chennai,இந்தியா
03-மார்-202111:14:00 IST Report Abuse
ஜெயந்தன் தரையில் இருப்பதை எல்லாம் வித்து காசாகிட்டாரு . ..இப்போ கடலா ??? சபாஷ்...
Rate this:
வெற்றி நமதே: தடுப்பூசி போட்டுக் கொள்வோம் - தடுப்பூசியால் எவ்வித ஆபத்தும் இல்லை” ,இஸ்ல் ஆப் மேன்
03-மார்-202113:26:37 IST Report Abuse
வெற்றி நமதே: தடுப்பூசி போட்டுக் கொள்வோம் இந்தியா திருநாட்டை காப்பாத்தணும் என்று நினைக்கிறவங்க எல்லாம் ராணுவத்தில் சேர்ந்து தான் நாட்டை காக்க வேண்டும் என்று இல்லை நீங்கள் BJP க்கு வோட்டு போடாமல் இருந்தால போதும்...
Rate this:
Cancel
Ellamman - Chennai,இந்தியா
03-மார்-202110:47:16 IST Report Abuse
Ellamman இப்படிப்பட்ட திட்டங்களுக்கு ரமேஷ் ஜாரிக்கோலி போன்ற அமைச்சர்களை நியமியுங்கள் ... அப்போ தான் திட்டம் முழு வெற்றி அடையும்...எடியூரப்பா கூட இது போன்ற செய்திகளில் அதிகம் இடம் பிடித்தார்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X