எக்ஸ்குளுசிவ் செய்தி

இந்தியா

பீஹார் புரட்சி தமிழகத்திலும் தொடரும்: ஒவைசி

Updated : மார் 03, 2021 | Added : மார் 02, 2021 | கருத்துகள் (25)
Share
Advertisement
'தமிழக தேர்தலிலும் புரட்சி செய்வோம்' என்கிறார் அகில இந்திய மஜ்லிஸ் - ஏ- இத்தேஹாதுல் முஸ்லிமீன் கட்சி (சுருக்கமாக AIMIM அல்லது மஜ்லிஸ் கட்சி) தலைவர் அசாதுதீன் ஒவைசி.அவர் அளித்த சிறப்பு பேட்டி:தமிழக சட்டசபை தேர்தலில், மஜ்லிஸ் கட்சி போட்டியிடுமா?நிச்சயம் போட்டியிடும். முஸ்லிம்கள் அதிகமாக வாழும், 25 தொகுதிகளைத் தேர்வு செய்து வைத்திருந்தோம். பிறகு அதை, 15 ஆக்கி,
பீஹார் புரட்சி, தமிழகம், ஒவைசி,  மஜ்லிஸ் கட்சி,அசாதுதீன் ஒவைசி

'தமிழக தேர்தலிலும் புரட்சி செய்வோம்' என்கிறார் அகில இந்திய மஜ்லிஸ் - ஏ- இத்தேஹாதுல் முஸ்லிமீன் கட்சி (சுருக்கமாக AIMIM அல்லது மஜ்லிஸ் கட்சி) தலைவர் அசாதுதீன் ஒவைசி.

அவர் அளித்த சிறப்பு பேட்டி:


தமிழக சட்டசபை தேர்தலில், மஜ்லிஸ் கட்சி போட்டியிடுமா?

நிச்சயம் போட்டியிடும். முஸ்லிம்கள் அதிகமாக வாழும், 25 தொகுதிகளைத் தேர்வு செய்து வைத்திருந்தோம். பிறகு அதை, 15 ஆக்கி, தற்போது வெற்றி உறுதி என்று நாங்கள் நம்பும், 10 இடங்களில் போட்டியிட முடிவு செய்துள்ளோம்.


இதனால், முஸ்லிம் ஓட்டுக்கள் பிரிந்து, அது பா.ஜ., - -அ.தி.மு.க., கூட்டணிக்கு சாதகமாக அமையாதா?அப்படி யோசித்து நாங்கள் களத்துக்கு வரவில்லை. ஆனால், பீஹாரில் என்ன நடந்ததோ, அதே தான் தமிழகத்தில் நடக்கிறது என்கிற போது, எங்களுக்கு வேறு வழியில்லை.


கொஞ்சம் விளக்கமாக சொல்லுங்கள்?

சித்தாந்த ரீதியில், பா.ஜ.,வை எதிர்க்கிறோம். ஆனால், பலமான கட்சி என்பதால் தனியாக மோத முடியாது. அதனால், மத சார்பற்ற சிந்தனை உள்ள கட்சிகளோடு இணைந்து தேர்தலை சந்திக்க விரும்பினோம்.காங்கிரஸ், ராஷ்ட்ரீய ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகளிடம் சொன்னோம். ஆனால், அவர்கள் கண்டுகொள்ளவே இல்லை. வேறு வழி இல்லாமல், 20 தொகுதிகளில் தனியாக நின்றோம். ஐந்து இடங்களில் வென்றோம். 4 சதவீத ஓட்டுகளை பெற்றோம்.
இதைத்தான், பா.ஜ.,வின், 'பி - டீமாக' நீங்கள் செயல்பட்டதாக சொல்கிறார்கள்...

நாங்கள் போட்டியிட்ட, 20ல் ஆர்.ஜே.டி., - - காங்., கூட்டணி, 9 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. 6 இடங்களில் நிதிஷ் குமார் கட்சி வென்றுள்ளது. எங்களுக்கு, 5 தான் கிடைத்தது. பிறகு எப்படி, பா.ஜ., வெற்றிக்கு நாங்கள் உதவியதாக சொல்ல முடியும்? அது அபத்தம். அதை விடுங்கள். காங்கிரஸ், 70 இடங்களில் போட்டியிட்டது. 19ல் தான் வென்றது. 51 இடங்களில் தோற்றது ஏன்?
இப்படி நிறைய கேள்விகளை அடுக்கலாம். நடந்த தவறுகளை திருத்திக் கொள்வதை விட்டு, எங்கள் மீது பழி போட்டு திசை திருப்புவதால், லாபம் யாருக்கு போகக்கூடாதோ, அவர்களுக்குப் போய் சேர்ந்து கொண்டிருக்கிறது.


அங்கே, இது உங்கள் முதல் தேர்தல். எடுத்த உடனே எப்படி, 5 சீட் ஜெயிக்க முடிந்தது?என்ன நடந்தது என்று புரியாமல், ஏதோ மந்திரம் போட்டு நாங்கள் ஜெயித்து விட்டதை போல பேசுவது வேடிக்கையாக இருக்கிறது. நாங்கள் வென்ற தொகுதிகளில் முஸ்லிம்கள் அதிகம். ஆனால், அவர்கள் கொடிய வறுமையில் வாழ்கின்றனர். குழந்தைகளுக்கும், பெரியவர்களுக்கும் சரியான சாப்பாடு கிடையாது. வருடம் முழுதும் குழந்தைகள் ஒரே துணியை உடுத்துகின்றனர்.

பெரியவர்கள் இரு உடைகளை மாற்றி மாற்றி உடுத்துகிறார்கள்.மின்சார வசதி இல்லை. குடிநீர் கிடைக்கவில்லை. சாலைகள் இல்லை. மருத்துவமனை இல்லை. பள்ளி, கல்லுாரிகள் இல்லை. 15 கி.மீ., போக வேண்டும். இப்படி எந்த கட்டமைப்பும் ஏற்படுத்தாமலே இத்தனை காலமாக பெரிய கட்சிகள் அங்கே ஆட்சி செய்திருக்கின்றன. பார்த்தால் பரிதாபமாக இருந்தது.

அந்த மக்களுக்கு வேண்டியதை செய்து கொடுக்க முடிவு செய்தோம். ஆறு ஆண்டுகளாக அங்கே இருந்து, அந்த மக்களோடு மக்களாக தோள் கொடுத்து பாடுபட்டோம். அதனால், அவர்கள் எங்களை நேசித்தனர். பெரிய கட்சிகளுக்கு எதிராக நோஞ்சானாக நின்ற எங்களுக்கு ஆதரவு தந்தனர். இதுதான் வெற்றியின் ரகசியம்.


ஆறு ஆண்டாக வேலை செய்தீர்களா?ஆமாம். அதனால் தான் முதல் தடவையில், 4 சதவீதம் ஓட்டு வந்திருக்கிறது. 5 இடங்களில் வெற்றி பெற்றது எல்லோருக்கும் தெரிகிறது. 20 இடங்களிலும் கணிசமான ஓட்டு வாங்கினோம் என்பது தெரியாது.


வேறு மாநிலங்களிலும் இப்படி முன்கூட்டியே திட்டமிட்டு வேலை செய்கிறீர்களா?

ஆமாம். பல மாநிலங்களிலும் பணி செய்கிறோம். தமிழகத்திலும் சத்தமில்லாமல் நிறைய காரியங்களை செய்திருக்கிறோம்.


தி.மு.க., கூட்டணியில்இடம் கேட்டீர்கள். அவர்கள் மறுத்து விட்டதால்,தனித்துப் போட்டியா?

பீஹாரில் எங்கள் வெற்றியைப் பார்த்து, தி.மு.க., தான் எங்களை அழைத்தது. காங்கிரஸ் போன்ற மத சார்பற்ற சக்திகளுடன் அணி சேர்வதில் தவறில்லை என்பதால் சம்மதித்தோம். ஆனால், பிறகு என்ன நடந்ததோ, தி.மு.க., மவுனமாகி விட்டது. அதனால், அடுத்த கட்டத்துக்கு நகர்கிறோம்.


உங்களை, பா.ஜ.,வின், 'பி - டீம்' என முதலில் சொன்னதே காங்கிரஸ் தானே?

அப்படி சொல்லி, தோல்விக்கு பழி போட பார்க்கிறார்கள். நானே அங்கே, 15 நாள் தங்கி பிரசாரம் செய்திருக்கிறேன். 64 பேரணிகள் நடத்தினேன். ஆனால், பெரிய கட்சியின் தலைவரான ராகுல், பீஹாருக்கு, 'பிக்னிக்' மாதிரி வந்து போனார். மூன்று நாட்கள் மட்டுமே பிரசாரம் செய்தார். மூன்று பேரணியில் மட்டுமே கலந்து கொண்டார்.

பிறகு, 'ரெஸ்ட்' எடுக்க சிம்லா சென்று விட்டார். அதை குற்றம் சொல்லவில்லை. ஆனால், அதிக இடங்களில் போட்டியிடும் கட்சி, அதிகமாக உழைக்க வேண்டுமா இல்லையா..


மறைமுகமாக கூட, பா.ஜ.,வுக்கு உங்கள் கட்சி உதவவில்லையா?இல்லவே இல்லை. கர்நாடகாவில் என்ன நடந்தது, பார்த்தீர்கள் தானே? வழக்கம் போல காங்கிரஸ் எங்களை ஒதுக்கி வைத்தது. எனவே, மத சார்பற்ற ஜனதா தளத்துக்கு ஆதரவு அளித்து, தீவிர பிரசாரம் செய்தோம். குமாரசாமியும் உரிய மரியாதை அளித்தார்.
அப்போது, காங்., எங்களையும், குமாரசாமி கட்சியையும், பா.ஜ.,வின், 'பி - டீம்' என, விமர்சித்தது. தொங்கு சட்டசபை ஏற்பட்ட நிலையில், பா.ஜ., வரக் கூடாது என்பதற்காக, மத சார்பற்ற ஜனதா தளமும், காங்கிரசும் இணைந்து ஆட்சியைப் பிடித்தன.

ஆனால், காங்., - - எம்.எல்.ஏ.,க்கள் பலர், பா.ஜ.,வுக்கு தாவியதால் குமாரசாமி ஆட்சி கவிழ்ந்து, பா.ஜ.,வின் எடியூரப்பா முதல்வர் ஆகி விட்டார். இது எங்களாலா நடந்தது? குமாரசாமி ஆட்சி கவிழ காங்கிரஸ் தானே காரணம். பா.ஜ., ஆட்சிக்கு வர, காங்கிரஸ்தானே காரணம்.
ஆக, உள்ளேயே பா.ஜ.,வின், 'பி - டீ மாக' செயல்படும், 'ஸ்லீப்பர் செல்'களை வைத்துக் கொண்டு, நேர்மையாக செயல்படும் எங்களை பா.ஜ.,வின், 'பி - டீம்' என காங்கிரஸ் சொல்வது அபத்தம்.


காங்கிரஸ் பலவீனம் ஆகிவிட்டது என்கிறீர்கள்?

வேறென்ன? கர்நாடகா மட்டுமா... கோவா, ம.பி., புதுச்சேரி எல்லாமே காங்கிரஸ் ஆட்சி நடந்த இடங்கள். அந்த ஆட்சிகளை கவிழ்த்தது காங்கிரஸ்காரர்கள் தானே... என்னால் பட்டியலே போட முடியும்.


நீங்கள் என்னதான் சொன்னாலும், உங்கள் செயல்பாடு பா.ஜ.,வுக்கு லாபமாகத்தானே முடிகிறது?

அதை உணர வேண்டியது யார் என்பது தான் கேள்வி. பா.ஜ.,வின் வெற்றியைத் தடுக்க வேண்டும் என்றுதானே, காங்., போன்றவர்களோடு கைகோர்க்க விரும்பினோம். எங்களை அண்டவே விட மாட்டோம் என்றால், நாங்கள் என்ன செய்வது? சபைகளில் பிரதிநிதித்துவம் இல்லாமல் மக்கி மண்ணாகிப் போக வேண்டுமா?

காயிதே மில்லத் காலத்தில், பார்லிமென்டில், 57 முஸ்லிம் எம்.பி.,க்கள் இருந்தனர். எண்ணிக்கை அதிகரித்துள்ள நிலையில், இன்றைக்கு, 120 முஸ்லிம் எம்.பி.,க்கள் இருக்க வேண்டும். வெறும், ஏழு பேர்தான் உள்ளனர். அதில் ஒருவன் நான். இப்படி இருந்தால், முஸ்லிம்கள் அதிகாரத்தில் பங்கு பெறுவது எப்படி முடியும்? எல்லா கட்சிகளும் எங்களை புறக்கணிக்கின்றன. எனவே தான் தனித்துப் போட்டியிட நேர்கிறது.


மொத்த முஸ்லிம்களுக்கும் உங்கள் கட்சி தான் பிரதிநிதியா?

நாங்கள் அப்படி சொன்னதே கிடையாது. முஸ்லிம் அமைப்புகளும், தலைவர்களும் வலுவாக இல்லாத மாநிலங்களில்தான், நாங்கள் கவனம் செலுத்தி, கட்சியை வளர்க்கப் பார்க்கிறோம். காஷ்மீர், அசாம், கேரளா போன்ற மாநிலங்களில் முஸ்லிம்களுக்கு நியாயமான பிரதிநிதித்துவம் கிடைப்பதால், அங்கெல்லாம் நாங்கள் கால் வைக்கவில்லை.


தமிழகத்தில் நீங்கள் போட்டியிடும், 10 இடங்களில், தி.மு.க., - - காங்., கூட்டணி தோற்றால், அதே, 'பி டீம்' முத்திரை இங்கேயும் குத்தப்படுமே?முத்திரை குத்த சொல்லியா தர வேண்டும் இவர்களுக்கு? சொன்னால் சொல்லட்டும். நான் சொல்கிறேன், நாங்கள் நிற்கும், 10 தொகுதிகளை, தி.மு.க., - - காங்., கூட்டணி கணக்கில் எடுத்துக் கொள்ளவே வேண்டாம். மீதி உள்ள, 224ல் கவனம் செலுத்தி, 120க்கு மேல் பிடித்து, ஆட்சி அமைக்கலாமே, யார் வேண்டாம் என்றது?

நாங்களும் மற்றவர்களை விமர்சிக்க நிறைய இருக்கிறது. ஆனால், ஆரோக்கிய அரசியல் செய்யவே விரும்புகிறோம். தொட்டதுக்கும், லாவணி கச்சேரி பாட விரும்பவில்லை.
எப்படி இருந்தாலும், பீஹாரில் ஏற்படுத்திய புரட்சியை தமிழகத்திலும் ஏற்படுத்துவோம். ஏற்கனவே, கடந்த தேர்தலில் எங்கள் வேட்பாளர், வாணியம்பாடி தொகுதியில், 11 ஆயிரம் ஓட்டு வாங்கினார். அதை ஞாபகம் வைத்துக் கொள்ளுங்கள்.


முஸ்லிம்களின் ஓட்டு மட்டும் போதுமா?

அடித்தட்டில் வாழும் அத்தனை மக்களின் முன்னேற்றத்துக்காகவும் குரல் எழுப்பி பாடுபடுகிறோம். அவர்களும் ஓட்டளித்துதான் வெற்றி பெற்று வருகிறோம்.இவ்வாறு, தெளிவாகவும் நம்பிக்கையுடனும் பேசினார், ஒவைசி.

Advertisement
வாசகர் கருத்து (25)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Dr. Suriya - Adis Ababa,எத்தியோப்பியா
04-மார்-202115:33:44 IST Report Abuse
Dr. Suriya ம்ம்... சொடலையை போல ஈகை திருளால் வாழ்த்து சொல்றது... கஞ்சி குடிக்கிறது.....இயேசு .பிரான் பிறந்த தினத்துக்கு வாழ்த்து சொல்லறது.... கேக்கு சாப்பிடுறது.... அப்புறம் இந்துக்கள் thirunaal entraal வாழ்த்து சொல்லாமல் குடும்ப டிவிக்களில் விடுமுறை தின கொண்டாட்டமுன்னு சொல்லி இந்துக்கலாய் திருடன்னு சொல்லி ஒட்டு வாங்கிறது... இதுதான் மத நல்லிணக்கம்.....
Rate this:
Cancel
skv ,srinivasankrishnaveni - bangalore,இந்தியா
04-மார்-202113:15:20 IST Report Abuse
skv ,srinivasankrishnaveni எல்லோரும் வீட்டுக்கூறுகட்சி ஆரம்பிச்சுடுங்க நாடுவெளங்கிடும் ஜனமானதரா கழுத்தறுப்பா இருக்கு, எலெக்ஷன்வந்தாலே பயமாயிருக்கு தேவையோ இல்லியோ ஏதாவதுவீடுதேடிவந்து தந்துட்டு தனக்கே வோட்டுப்போடுங்க என்று மடிப்பிச்சை கேக்குறீங்க தலைக்கு ஒரு வோட்டுத்தானே இருந்து எவன் ஓட்டுகேக்கலீயோ அவனுக்கேதான் என் வோட்டு எப்போதும் இதுவரை நான் கான் கிரேஸ் ஆர் திமுக ஆர் அதிமுக ஆர் கம்யூனிஸ்டு க்கு வோட்டுப்போட்டதேஇல்லீங்க பிச்சையும் வாங்கினது இல்லீங்க தேவையே இல்லீங்க கடவுள் அருளால் வயத்துக்கு உணவும் உறங்க வீடும் இருக்கு கணவரின் பென்ஸான் லே நிம்மதியா முதுமைகளிக்கிறோம் அரசியல் தெரியாது இன்று அரசியல் கேவலமா தான் இருக்கு
Rate this:
Dr. Suriya - Adis Ababa,எத்தியோப்பியா
04-மார்-202115:19:52 IST Report Abuse
Dr. Suriyaஐயையோ... இப்படி உணர்ச்சி வசப்பட்டு உண்மையை பட்டுன்னு போட்டு ஒடைச்சிடீன்களே.... வீடனாவது பத்திரமா பாதுகாத்துக்குங்க...உடன் பிறப்புகள் தீயா வேலை செய்யிரத்துல விஞ்ஞானிகள்...ஆட்டைய போட்டு விடுவார்கள்........
Rate this:
Cancel
bal - chennai,இந்தியா
03-மார்-202123:56:06 IST Report Abuse
bal இந்த துரோகிகளை வளர விடக்கூடாது...அப்புறம் எல்லாருக்கும் தொப்பிதான்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X