அரசியல் செய்தி

தமிழ்நாடு

எம்.ஜி.ஆர்., வாரிசு அ.தி.மு.க.,வில் மனு

Added : மார் 02, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
சென்னை : எம்.ஜி.ஆரின் வளர்ப்பு மகளின் மகன் ராமச்சந்திரன், மூன்று சட்டசபை தொகுதிகளில், அ.தி.மு.க., சார்பில் போட்டியிட, விருப்ப மனு கொடுத்துள்ளார். அ.தி.மு.க., நிறுவனர், எம்.ஜி.ஆரின் வளர்ப்பு மகள் சுதா. இவரது மகன் ராமச்சந்திரன், பி.இ., - எம்.எஸ்., படித்துள்ளார். இவர், நேற்று, எம்.ஜி.ஆர்., நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார். பின், கட்சியினர் புடைச்சூழ, அ.தி.மு.க., தலைமை அலுவலகம் சென்றார்.

சென்னை : எம்.ஜி.ஆரின் வளர்ப்பு மகளின் மகன் ராமச்சந்திரன், மூன்று சட்டசபை தொகுதிகளில், அ.தி.மு.க., சார்பில் போட்டியிட, விருப்ப மனு கொடுத்துள்ளார்.

அ.தி.மு.க., நிறுவனர், எம்.ஜி.ஆரின் வளர்ப்பு மகள் சுதா. இவரது மகன் ராமச்சந்திரன், பி.இ., - எம்.எஸ்., படித்துள்ளார். இவர், நேற்று, எம்.ஜி.ஆர்., நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார். பின், கட்சியினர் புடைச்சூழ, அ.தி.மு.க., தலைமை அலுவலகம் சென்றார். அங்கு, ஆலந்துார், பல்லாவரம், ஆண்டிபட்டி தொகுதிகளில், அ.தி.மு.க., சார்பில் போட்டியிட, விருப்ப மனு அளித்தார். அ.தி.மு.க., முன்னாள் ராஜ்யசபா எம்.பி., மைத்ரேயன், மயிலாப்பூர் மற்றும் வேளச்சேரி தொகுதிகளில் போட்டியிட, விருப்பம் தெரிவித்து, மனு அளித்தார். துாத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரம் தொகுதிக்கு, ஆறாவது முறையாக, முன்னாள் கவுன்சிலர் பெருமாள், விருப்ப மனு தாக்கல் செய்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Baskar - Paris,பிரான்ஸ்
03-மார்-202103:03:51 IST Report Abuse
Baskar எம்.ஜி.ஆர் பெயரை சொல்லி கட்சி நடத்தும் பழனியும் பண்ணிரும் நன்றாக யோசனை செய்து தலைவரின் வாரிசுக்கு சீட் கொடுக்க வேண்டும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X