அரசியல் செய்தி

தமிழ்நாடு

அடுத்த தலைவர் உதயநிதி : துரைமுருகன் சூசக பேச்சு

Updated : மார் 03, 2021 | Added : மார் 02, 2021 | கருத்துகள் (44)
Share
Advertisement
சென்னை : ''நேற்று கருணாநிதி அமைச்சரவையில் இருந்தேன்; நாளை ஸ்டாலின் அமைச்சரவையில் இருப்பேன்; அதற்கடுத்து உதயநிதி அமைச்சரவையிலும் இருப்பேன்,'' என, தி.மு.க., பொதுச்செயலர் துரைமுருகன், கட்சியின் அடுத்த தலைவர் குறித்து, சூசகமாக பேசினார். சென்னை, பெரவள்ளூர் சதுக்கம் அருகே, நேற்று முன்தினம் நடந்த, தி.மு.க., பொதுக் கூட்டத்தில், அவர் பேசியதாவது:தலைவர் மகன் என்ற தனிச்சலுகை
 அடுத்த தலைவர் உதயநிதி : துரைமுருகன் சூசக பேச்சு

சென்னை : ''நேற்று கருணாநிதி அமைச்சரவையில் இருந்தேன்; நாளை ஸ்டாலின் அமைச்சரவையில் இருப்பேன்; அதற்கடுத்து உதயநிதி அமைச்சரவையிலும் இருப்பேன்,'' என, தி.மு.க., பொதுச்செயலர் துரைமுருகன், கட்சியின் அடுத்த தலைவர் குறித்து, சூசகமாக பேசினார்.

சென்னை, பெரவள்ளூர் சதுக்கம் அருகே, நேற்று முன்தினம் நடந்த, தி.மு.க., பொதுக் கூட்டத்தில், அவர் பேசியதாவது:தலைவர் மகன் என்ற தனிச்சலுகை பெற்று, தலைவராக வேண்டும் என, முயற்சித்தவர் அல்ல ஸ்டாலின்.'என்னால் கூட ஸ்டாலின் அளவிற்கு சுற்று பயணம் செய்ய முடியவில்லை' என, ஸ்டாலினை புகழ்ந்தார் கருணாநிதி.தி.மு.க., தலைவர் என்ற நிலையில் இருந்து அதிர வைத்ததால், டில்லி பயப்படுகிறது. இல்லையேல், தி.மு.க.,வை இந்த அளவிற்கு, அமித் ஷா விமர்சித்து இருக்க மாட்டார். கருணாநிதி, 1971ல் வெற்றி பெற்ற தொகுதிகளை விட, ஒரு தொகுதியாவது அதிகம் வெல்ல வேண்டும் என்கிற முனைப்போடு, ஸ்டாலின் செயல்படுகிறார்.

என்னோடு தோழனாக இருந்தவர், இப்போது, என் தலைவராகி இருக்கிறார். நேற்று கருணாநிதி அமைச்சரவையில் இருந்தேன்; நாளை ஸ்டாலின் அமைச்சரவையில் இருப்பேன்; அதற்கடுத்து உதயநிதி அமைச்சரவையிலும் இருப்பேன்.இவ்வாறு, அவர் பேசினார். அவர் பேச்சில், தி.மு.க., வின் அடுத்த தலைவர் உதயநிதிதான் என, சூசகமாக தெரிவித்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து (44)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
karutthu - nainital,இந்தியா
04-மார்-202109:16:24 IST Report Abuse
karutthu ஏன் நிறுத்தி விட்டீர்கள் நேற்று கருணாநிதி அமைச்சரவை ...இன்று ஸ்டாலின் அமைச்சரவை ...நாளை உதயநிதியின் அமைச்சரவை ....அடுத்து இன்ப அண்ணா அமைச்சரவை ......ஆக வாழ்நாள் முழுவதும் அமைச்சராக இருக்கனும் என்பது உங்கள் ஆசை??? .
Rate this:
Cancel
Suresh Pandian - Madurai,யூ.எஸ்.ஏ
04-மார்-202100:55:11 IST Report Abuse
Suresh Pandian Puthusa yethavathu iruntha sollu
Rate this:
Cancel
DARMHAR - Los Angeles,யூ.எஸ்.ஏ
04-மார்-202100:28:42 IST Report Abuse
DARMHAR பேஷ் பேஷ் ஜால்றா ஜால்றா
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X