பொது செய்தி

தமிழ்நாடு

தேர்தல் பணப் பட்டுவாடா கட்டுப்பாட்டு அறை திறப்பு

Updated : மார் 04, 2021 | Added : மார் 02, 2021 | கருத்துகள் (12)
Share
Advertisement
சென்னை : தேர்தல் பணப் பட்டுவாடா தொடர்பாக புகார் அளிக்க, வருமான வரித் துறை அலுவலகத்தில், 24 மணி நேர கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளது.நடவடிக்கை சென்னை வருமான வரித் துறை, கூடுதல் இயக்குனர் சிவசங்கரன் வெளியிட்ட செய்திக்குறிப்பு:தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநிலங்களுக்கான சட்டசபை தேர்தலும், கன்னியாகுமரி லோக்சபா தொகுதி இடைத்தேர்தலும், ஏப்., 6ம் தேதி
 தேர்தல், பணப்பட்டுவாடா, கட்டுப்பாட்டு அறை

சென்னை : தேர்தல் பணப் பட்டுவாடா தொடர்பாக புகார் அளிக்க, வருமான வரித் துறை அலுவலகத்தில், 24 மணி நேர கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளது.


நடவடிக்கை

சென்னை வருமான வரித் துறை, கூடுதல் இயக்குனர் சிவசங்கரன் வெளியிட்ட செய்திக்குறிப்பு:தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநிலங்களுக்கான சட்டசபை தேர்தலும், கன்னியாகுமரி லோக்சபா தொகுதி இடைத்தேர்தலும், ஏப்., 6ம் தேதி நடைபெறுகிறது.இந்தத் தேர்தலில், தேர்தல் செலவுகளை கண்காணிக்கவும், கணக்கில் வராத பணத்தை கண்டுபிடிக்கவும், தேர்தலின் போது, அப்பணத்தை பயன்படுத்துவதை தடுக்கவும், வருமான வரித் துறையிடம், தேர்தல் ஆணையம் உதவி கோரியது.

அதன்படி, கணக்கில் வராத பணத்தை கண்டுபிடிக்கவும், அப்பணத்தை பயன்படுத்துவதை தடுக்கவும், பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. இதற்காக, தமிழகம் மற்றும் புதுச்சேரி வருமான வரித் துறை மண்டலத்தின், புலனாய்வு பிரிவு இயக்குனரகம், இலவச தொலைபேசி எண்களுடன், 24 மணி நேர கட்டுப்பாட்டு அறையை அமைத்துள்ளது.


இ - மெயில்

மக்களுக்கு பட்டுவாடா செய்ய, பணம், பொருட்கள் எடுத்து சென்றாலோ அல்லது பதுக்கி வைத்திருப்பது தெரிய வந்தாலோ, உடனடியாக புகார் அளிக்கலாம்.தகவல் தெரிவிக்க விரும்புவோர், இலவச தொலைபேசி எண், 1800 425 6669; 'பேக்ஸ்' எண், 044- 2827 1915; இ - மெயில் முகவரி, itcontrol.chn@gov.in; 'வாட்ஸ் ஆப்' மொபைல் எண், 94453 94453 வாயிலாக தெரிவிக்கலாம். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (12)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
J.Isaac - bangalore,இந்தியா
03-மார்-202120:16:17 IST Report Abuse
J.Isaac இந்த கட்ட்ப்பாட்டால் அரசியல் கட்சிகள் பாதிப்படுவதில்லை.
Rate this:
Cancel
Visu Iyer - chennai,இந்தியா
03-மார்-202117:40:11 IST Report Abuse
Visu Iyer கருப்பு பணம் இந்தியா முழுவதும் ஒழிக்க பட்டு விட்டது.. தமிழகத்தில் மட்டும் எப்படி கருப்பு பணம் வரும்... சரி.. ... கருப்பு பணம் தான் இருக்குதுன்னு மோடி ஜி பதவி விலகிவிடுவாரா
Rate this:
Cancel
Visu Iyer - chennai,இந்தியா
03-மார்-202114:26:51 IST Report Abuse
Visu Iyer எல்லா வாகன விபத்தும் சாலை விபத்து அல்ல... சமீபத்தில் குஷ்பூ வாகன விபத்தில்.. இதே போல முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவும்.. இப்படி பட்டியலிட்டால்... .............................................(அம்மா மரணத்திற்கு பின்னால் கூட என ) நிறையா இருக்குதுங்க... இவுங்க என்னடான்னனா.. டண்டணங்கனா...ன்னு என்று சின்ன கவுண்டர் படத்தில் கவுண்டமணி வசனம் பேசுவது போல தான் நினைவு வருகிறது..
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X