பொது செய்தி

தமிழ்நாடு

'எங்களுக்கு தண்ணீர் வைக்க மறக்காதீங்க!'

Updated : மார் 03, 2021 | Added : மார் 03, 2021
Share
Advertisement
கோவை:வெயில் வறுத்தெடுப்பதால், வீடுகளில் பறவைகளுக்கு தண்ணீர் வைக்க, பறவை ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சிட்டுக்குருவியின் சத்தத்தை கேட்டு விடியலை அறிந்தது, அன்றைய மனித சமூகம். ஆனால், இன்றைய மனித சமூகத்துக்கு, அது மொபைல்போன் 'ரிங்டோன்' ஆக மட்டுமே பரிச்சயம். அன்று நமக்கு பரிச்சயமான பல பறவைகள், இன்று புகைப்படங்களில் மட்டுமே உள்ளன. வீடுகளில் பறவைகளுக்கு தண்ணீர்
 'எங்களுக்கு தண்ணீர் வைக்க  மறக்காதீங்க!'

கோவை:வெயில் வறுத்தெடுப்பதால், வீடுகளில் பறவைகளுக்கு தண்ணீர் வைக்க, பறவை ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சிட்டுக்குருவியின் சத்தத்தை கேட்டு விடியலை அறிந்தது, அன்றைய மனித சமூகம். ஆனால், இன்றைய மனித சமூகத்துக்கு, அது மொபைல்போன் 'ரிங்டோன்' ஆக மட்டுமே பரிச்சயம். அன்று நமக்கு பரிச்சயமான பல பறவைகள், இன்று புகைப்படங்களில் மட்டுமே உள்ளன. வீடுகளில் பறவைகளுக்கு தண்ணீர் வைப்பதன் வாயிலாக, அவை அழியாமல் பாதுகாக்கலாம் என்கின்றனர், பறவைகள் ஆர்வலர்கள்.

பறவைகள் ஆர்வலர் மோகன் கூறியதாவது:இந்தாண்டு பருவமழை அதிகளவு பொழிந்து உள்ளதால், குளங்கள் நிறைந்து காணப்படுகின்றன. இருப்பினும், அனைத்து பறவைகளும் குளத்தில் சென்று தண்ணீர் அருந்த கூடியவை அல்ல. அவை இருக்கும் பகுதிக்கு அருகில் தான் தண்ணீரை தேடும்.தண்ணீர் கிடைக்காத போது, அது நீண்ட துாரம் பயணிக்கும். வனப்பகுதியில் கோடை வெயிலின் காரணமாக தண்ணீர் எளிதில் வற்றிவிடும்.

எனவே பறவைகள் தண்ணீருக்காக அலையும் நிலை ஏற்படும்.பறவைகளுக்கு தண்ணீர் எளிதில் கிடைக்க, வீட்டு மொட்டை மாடிகளில் பாத்திரங்களில் தண்ணீர் வைக்கலாம். மண்ணாலான அகலமான பாத்திரங்களில், தண்ணீர் வைக்க வேண்டும். சில்வர், சிமென்ட் கொள்கலன்களில், வைக்கும் தண்ணீர் எளிதில் சூடாகி விடும். பறவைகள் அவற்றை குடிக்காது.இவ்வாறு, அவர்கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X