புத்தகங்களே உயர்வதற்கான ஏணிப்படிகள்: ஐ.ஏ.எஸ் அதிகாரி உதயச்சந்திரன் பெருமிதம்

Updated : மார் 03, 2021 | Added : மார் 03, 2021
Share
Advertisement
அரசு பள்ளி மாணவர்களின் உயர்வுக்காக, புத்தக உருவாக்கத்தில் புரட்சி செய்தவர்; தமிழர்களின் வரலாற்றை தோண்டி எடுக்கும், கீழடி அகழாய்வில், தொழில்நுட்பத்தை துணைக்கு அழைத்தவர், தேர்ந்த வாசகர், எழுத்தாளர், தமிழக தொல்லியல் துறையின் கமிஷனர் உதயச்சந்திரன் ஐ.ஏ.எஸ்., அவரிடம் உரையாடியதில் இருந்து…உங்களின் முதல் வாசிப்பு எது?நான், ஐந்து வயது சிறுவனாக இருந்த போது, என் அப்பா,
புத்தகங்களே உயர்வதற்கான  ஏணிப்படிகள்: ஐ.ஏ.எஸ் அதிகாரி உதயச்சந்திரன் பெருமிதம்

அரசு பள்ளி மாணவர்களின் உயர்வுக்காக, புத்தக உருவாக்கத்தில் புரட்சி செய்தவர்; தமிழர்களின் வரலாற்றை தோண்டி எடுக்கும், கீழடி அகழாய்வில், தொழில்நுட்பத்தை துணைக்கு அழைத்தவர், தேர்ந்த வாசகர், எழுத்தாளர், தமிழக தொல்லியல் துறையின் கமிஷனர் உதயச்சந்திரன் ஐ.ஏ.எஸ்., அவரிடம் உரையாடியதில் இருந்து…


உங்களின் முதல் வாசிப்பு எது?

நான், ஐந்து வயது சிறுவனாக இருந்த போது, என் அப்பா, 'ரத்னபாலா' என்ற, ஒரு, மாத இதழை வாங்கித் தந்தார். அதன் அட்டைப்படம் கூட இன்னும் நினைவில் இருக்கிறது. அதைத் தொடர்ந்து, அம்புலி மாமா, பாலமித்ரா என, வாசிப்பு விரிந்தது. புலமைப்பித்தன், கி.ரா., கு.அழகிரிசாமி, ஜெயகாந்தன் என, பலரின் படைப்புகளை தேடிப் படித்துள்ளேன். ராமாயணம், மகாபாரதத்தையும் வாசிக்க மறந்ததில்லை.


ங்கள் புத்தக சேகரிப்பு பற்றி, வாசகர்களுடன் பகிர்ந்து கொள்ளலாமே.

ஒவ்வொரு ஆண்டும், செமஸ்டர் விடுமுறையில், சென்னைக்கு வந்துவிடுவேன். ஆண்டு முழுதும் நான் சேர்த்து வைத்தது, நண்பர்களிடம் கடன் வாங்கியது, அம்மா கொடுத்தது என, அனைத்து தொகைக்கும், காயிதே மில்லத் கல்லுாரியில் நடக்கும் புத்தகக் காட்சியில், புத்தகங்களை வாங்கிச் செல்வேன். இதை, ஒரு புனிதப் பயணமாகவே கருதினேன்.


போட்டித் தேர்வுகளுக்கு, புத்தக வாசிப்பு கை கொடுத்ததா?

நிச்சயம் கை கொடுத்தது. நான், பொறியியல் பட்டதாரி. ஆனாலும், வரலாறு, சமூகவியல், இலக்கியம் சார்த என் புரிதலுக்கு, புத்தக வாசிப்பு தான் துணைபுரிந்தது. புத்தகங்களே மனிதன் உயர்வதற்கான ஏணிப்படிகள் என்பதை மறுக்க முடியாது.


ஆட்சிப் பணியில் புத்தக வாசிப்பு துணை செய்ததா?

கண்டிப்பாக. நான், கு.அழகிரிசாமியையோ, கி.ராஜநாராயணனையோ படித்திருக்காவிட்டால், கரிசல் மண் சார்ந்த ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களையும், அங்குள்ள மக்களையும் புரிந்துகொண்டிருக்க முடியாது. பாப்பாப்பட்டி போன்ற இடங்களில், தேர்தல் நடத்தி இருக்க முடியாது. வாடிவாசல் படித்திருக்காவிட்டால், ஜல்லிக்கட்டு நடத்தியிருக்க முடியாது.


மதுரையில் புத்தகக்காட்சி நடத்திய அனுபவம் குறித்து?

சென்னையைத் தவிர்த்து, தென்மாவட்டத்தில் புத்தகக் காட்சியை நடத்துவதில், பதிப்பாளர்கள் கூட ஆர்வம் காட்டவில்லை. ஆனாலும், 2006ல், எங்களின் தொடர் முயற்சியால், பாப்பாப்பட்டி தேர்தலுக்கு இடையில், மதுரை தமுக்கம் மைதானத்தில், மிகச் சிறப்பாக புத்தகக் காட்சியை நடத்தி முடித்தோம்.


இலக்கிய ஆர்வமுள்ள உங்களுக்கு, பொறியியலும், ஆட்சிப் பணியும் எவ்வகையில் உதவு கின்றன?

பொறியியல் பின்புலம் இருப்பதால் தான், அரசு பள்ளி மாணவர்களுக்கான புத்தக உருவாக்கத்தில், 'கியூ.ஆர்., கோடு' அறிமுகப்படுத்த முடிந்தது. கீழடி அகழாய்வில், புவி மேற்பரப்பாய்வு, கார்பன் சோதனை உள்ளிட்ட பல்வேறு ஆய்வுகளில், தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த முடிந்தது. அதே போல், 9ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரையிலான தமிழ் புத்தகங்களில், மிகச்சிறந்த, தமிழ் இலக்கியவாதிகளைப் பற்றிய குறிப்பைத் தரமுடிந்தது.


தற்போது நடக்கும் சென்னை புத்தகக் காட்சி பற்றி...

கொரோனா ஊரடங்குக்குப் பின், நடக்கும் முதல் புத்தகக் காட்சி. வாசகர்கள், பதிப்பாளர்கள், எழுத்தாளர்கள் எதிர்நோக்கும் திருவிழா. இது, வெறும் புத்தகக் காட்சியாக அமையாமல், பண்பாட்டு, கலாசார விழாவாக மாற வேண்டும் என்பதே என் விருப்பம்.


தற்போது உங்கள் வாசிப்பில் உள்ள புத்தகங்கள் என்னென்ன?

நான் அதிகமுறை வாசித்தது, 'சேப்பியன்ஸ்' எனும் புத்தகம். அது தற்போது, சிறுவர்களுக்கான வரைபடமாகவும் வந்துள்ளது. அடுத்தது, பாலகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ்., எழுதிய, 'ஜர்னி ஆப் எ சிவிலைசேசன்' எனும் நுால். இதில், சிந்துவெளிக்கு சொந்தம் கொண்டாடும் உரிமை, தமிழர்களுக்கே உடையது என்பது பற்றி, பல்வேறு ஆதாரங்கள் இடம் பெற்றுள்ளன. வாசகர்களைப் போலவே, பல அரிய நுால்களை, தேடித் தேடி வாங்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளேன்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X