பொது செய்தி

தமிழ்நாடு

இப்படித்தான் ஓட்டு போடணும் அதிகாரிகள் செயல் விளக்கம்

Updated : மார் 03, 2021 | Added : மார் 03, 2021
Share
Advertisement
சூலுார்:மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரத்தில் எப்படி ஓட்டளிப்பது என்பது குறித்து, சூலுாரில் செயல் விளக்கம் அளிக்கப்பட்டது. தமிழகத்தில் வரும், ஏப்., 6ம் தேதி சட்டசபை தேர்தலுக்கான ஓட்டுப்பதிவு நடக்கிறது. மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரத்தில் ஓட்டளிப்பது குறித்த செயல் விளக்கம், மக்கள் அதிகளவில் கூடும் இடங்களில் நடந்த வேண்டும் என, தேர்தல் ஆணையம்
 இப்படித்தான் ஓட்டு போடணும்  அதிகாரிகள் செயல் விளக்கம்

சூலுார்:மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரத்தில் எப்படி ஓட்டளிப்பது என்பது குறித்து, சூலுாரில் செயல் விளக்கம் அளிக்கப்பட்டது.

தமிழகத்தில் வரும், ஏப்., 6ம் தேதி சட்டசபை தேர்தலுக்கான ஓட்டுப்பதிவு நடக்கிறது. மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரத்தில் ஓட்டளிப்பது குறித்த செயல் விளக்கம், மக்கள் அதிகளவில் கூடும் இடங்களில் நடந்த வேண்டும் என, தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.இதையடுத்து, சூலுார் சட்டசபை தொகுதியில், செயல் விளக்கம் செய்து காண்பிக்க, 25 மாதிரி மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்களும், வி.வி.பாட் எனப்படும், நாம் சரியாக ஓட்டளித்து உள்ளோமா என அறிந்து கொள்ளும் இயந்திரங்கள், 25ம் கொண்டு வரப்பட்டன.

தேர்தல் பிரிவு அதிகாரிகள் அவற்றின் இயக்கத்தை சரிபார்த்து தயார்படுத்தினர்.நேற்று மாலை, சூலுார் பேரூராட்சி அலுவலகம் முன் பொதுமக்களுக்கு செயல் விளக்கம் அளிக்கப்பட்டது. தேர்தல் பிரிவு துணை தாசில்தார் மெர்சி மற்றும் தொழில்நுட்ப ஊழியர்கள் பங்கேற்றனர். முதல் முறையாக ஓட்டளிக்கும் இளம் வாக்காளர்கள் பலரும் ஆர்வத்துடன் மாதிரி ஓட்டுப்பதிவு செய்து நடைமுறைகளை அறிந்து கொண்டனர்.

தேர்தல் பிரிவு அதிகாரிகள் கூறுகையில், 'மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரத்தின் செயல்பாடுகள் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், தொகுதி முழுக்க செயல் விளக்கம் அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X