முயல் வேட்டையில் வாலிபர் காயம் 4 பேர் கைது; 3 துப்பாக்கி பறிமுதல்| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

முயல் வேட்டையில் வாலிபர் காயம் 4 பேர் கைது; 3 துப்பாக்கி பறிமுதல்

Added : மார் 03, 2021
Share
திருப்பூர்:திருப்பூர் அருகே உரிமம் இல்லாமல் நாட்டு துப்பாக்கியை வேட்டைக்கு பயன்படுத்திய, நான்கு பேரை போலீசார் கைது செய்தனர். மூன்று துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டன.திருப்பூர் ஒன்றியம், ஈட்டிவீரம்பாளையம் ஊராட்சி, கருப்பராயன் தோட்டத்தை சேர்ந்தவர் முருகேசன், 29. பழங்கரை ஊராட்சி வேலுார் பகுதியை சேர்ந்த மகேந்திரன், 33, சந்துரு, 29, ஈட்டி வீரம்பாளையம் ராக்கியாபட்டியை
 முயல் வேட்டையில் வாலிபர் காயம் 4 பேர் கைது; 3 துப்பாக்கி பறிமுதல்

திருப்பூர்:திருப்பூர் அருகே உரிமம் இல்லாமல் நாட்டு துப்பாக்கியை வேட்டைக்கு பயன்படுத்திய, நான்கு பேரை போலீசார் கைது செய்தனர். மூன்று துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டன.திருப்பூர் ஒன்றியம், ஈட்டிவீரம்பாளையம் ஊராட்சி, கருப்பராயன் தோட்டத்தை சேர்ந்தவர் முருகேசன், 29. பழங்கரை ஊராட்சி வேலுார் பகுதியை சேர்ந்த மகேந்திரன், 33, சந்துரு, 29, ஈட்டி வீரம்பாளையம் ராக்கியாபட்டியை சேர்ந்த மனோகரன், 39 மற்றும் பெருந்துறை கருக்கம்பாளையத்தை சேர்ந்த ராஜ்குமார், 38, ஆகியோர் இவரது நண்பர்கள். கடந்த 28ல் நாட்டு துப்பாக்கியுடன் முயல் வேட்டைக்கு, நியூ திருப்பூர் காட்டு பகுதிக்கு சென்றனர்.வேட்டையின்போது, தவறான கையாளுதலால், துப்பாக்கி வெடித்து, முருகேசன், தோள் பட்டையில் படுகாயம் ஏற்பட்டது. இதனால் அவர் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து, பெருமாநல்லுார் போலீசார் வழக்கு பதிந்து, தப்பியோடியவர்களை தேடினர்.சந்துரு, மனோகரன், மகேந்திரன், ராஜ்குமார் ஆகியோரை நேற்று கைது செய்த போலீசார், மூன்று நாட்டு துப்பாக்கிகளையும் பறிமுதல் செய்தனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X