சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ஏ.டி.எம்., இயந்திரம் பெயர்த்து சென்ற வட மாநில கொள்ளையர் 6 பேர் கைது

Updated : மார் 03, 2021 | Added : மார் 03, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
திருப்பூர்: திருப்பூர் அருகே ஏ.டி.எம்., இயந்திரத்தை கொள்ளையடித்த, ஹரியானா மாநிலத்தை சேர்ந்த, ஆறு பேர் கொண்ட கும்பலை போலீசார் கைது செய்தனர். திருப்பூரை அடுத்த கூலிபாளையம் நால் ரோடு பகுதியில், 'பேங்க் ஆப் பரோடா' வங்கி செயல்படுகிறது. அதே வளாகத்தில், ஏ.டி.எம்., மையம் உள்ளது. கடந்த, 28ம் தேதி அதிகாலை, 4:30 மணியளவில் காரில் கயிறு கட்டி, ஏ.டி.எம்., இயந்திரத்தை பெயர்த்து சென்றனர்.
 ஏ.டி.எம்., இயந்திரம் பெயர்த்து சென்ற வட மாநில கொள்ளையர் 6 பேர் கைது

திருப்பூர்: திருப்பூர் அருகே ஏ.டி.எம்., இயந்திரத்தை கொள்ளையடித்த, ஹரியானா மாநிலத்தை சேர்ந்த, ஆறு பேர் கொண்ட கும்பலை போலீசார் கைது செய்தனர்.

திருப்பூரை அடுத்த கூலிபாளையம் நால் ரோடு பகுதியில், 'பேங்க் ஆப் பரோடா' வங்கி செயல்படுகிறது. அதே வளாகத்தில், ஏ.டி.எம்., மையம் உள்ளது. கடந்த, 28ம் தேதி அதிகாலை, 4:30 மணியளவில் காரில் கயிறு கட்டி, ஏ.டி.எம்., இயந்திரத்தை பெயர்த்து சென்றனர். ஏ.டி.எம்.,ல், ஒரு லட்சத்து, 100 ரூபாய் இருந்தது.கொள்ளையரை பிடிக்க காங்கயம் டி.எஸ்.பி., தனராஜ் தலைமையில், ஏழு தனிப்படை அமைக்கப்பட்டு, தீவிர தேடுதல் வேட்டை நடந்தது. ஈரோடு மாவட்டம், ஈங்கூர், பெருந்துறை பகுதியில், 'ட்ரோன்' கேமரா வாயிலாக, போலீசார் தேடினர்.

பெருந்துறை அருகே சரளை ஏரி கருப்பராயன் கோவில் பின், ஏ.டி.எம்., இயந்திரம் உடைந்த நிலையிலும், விஜயமங்கலம் அருகே தனியாக நின்ற காரும் மீட்கப்பட்டது.சிக்கியது கும்பல்இந்நிலையில், ஈரோடு, கருங்கல்பாளையம், திருநகர் காலனி பகுதியில், ஹரியானா மாநிலத்தை சேர்ந்த கன்டெய்னர் லாரி குறித்து போலீசாருக்கு தகவல் கிடைத்தது. விசாரணையில், இந்த கன்டெய்னர் லாரியில் கொள்ளையர் பயணம் செய்தது தெரிந்தது. அதன் தொடர்ச்சியாக, அதே பகுதியில் பதுங்கியிருந்த, ஹரியானா மாநிலத்தை சேர்ந்த ராகுல், 24, ரபீக், 24, ஷாகித், 25, ஷாஜித், 21, இர்ஷாத், 38 மற்றும் காசிம் கான், 45 ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

கைதானவர்களிடம் இருந்து, 69 ஆயிரத்து 120 ரூபாய் ரொக்கம், கன்டெய்னர் லாரி, இரண்டு நாட்டு துப்பாக்கி, ஒன்பது தோட்டா, வெல்டிங் மெஷின், காஸ் சிலிண்டர், பெயின்டிங் ஸ்பிரே உட்பட பொருட்கள் கைப்பற்றப்பட்டன.நள்ளிரவில் திட்டம்ஊத்துக்குளி போலீசார் கூறியதாவது: கொள்ளையில் ஈடுபட்ட, ஆறு பேர் கும்பல், ஹரியானா மாநிலத்தில் இருந்து ஈரோட்டுக்கு துணி லோடு ஏற்றி செல்ல, 27ம் தேதி வந்தது. அன்று நள்ளிரவு திருப்பூரில் உள்ள ஏ.டி.எம்., ஏதாவது ஒன்றில் கொள்ளையடிக்க திட்டமிட்டனர்.

ஏற்கனவே, திருப்பூருக்கு வந்து சென்றுள்ள கொள்ளை கும்பல், ஒதுக்குப்புறமாக இருந்த கூலிபாளையம் பாங்க் ஆப் பரோடா ஏ.டி.எம்.,ஐ குறி வைத்து கொள்ளையடித்தனர். இதற்காக, பெருந்துறையில், ஒரு காரையும் திருடியுள்ளனர்.அதன்பின், விஜயமங்கலத்தில், காரை ரோட்டோரம் நிறுத்தி விட்டு, கன்டெய்னர் லாரியில், ஏ.டி.எம்., இயந்திரத்தை ஏற்றி கொண்டு தப்பினர். அதன்பின், பெருந்துறை அருகே காஸ் வெல்டிங் மூலம், இயந்திரத்தை அறுத்து, பணத்தை எடுத்துள்ளனர். இந்த கொள்ளையில் ஈடுபட்டது இவர்கள் மட்டும்தானா அல்லது வேறு ஏதாவது கும்பலுக்கு தொடர்பு உள்ளதா என்றும் விசாரிக்கிறோம்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Rajalakshmi - Kuwait City,குவைத்
03-மார்-202114:11:25 IST Report Abuse
Rajalakshmi குற்றவாளிகள் போலி ஆதார் அட்டைகள் வைத்திருக்கும் ரோஹிங்கிய , பங்களாதேஷி முஸ்லிம்கள். இவர்கள்தான் இன்று இந்தியா முழுவதும் பரவியுள்ளனர் .
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X