சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ரூ.49.5 லட்சம் பணம் மோசடி: தலைமையாசிரியை மீது வழக்கு

Updated : மார் 03, 2021 | Added : மார் 03, 2021
Share
Advertisement
கோவை:வெவ்வேறு காரணங்களை சொல்லி பலரிடம், 49.50 லட்சம் ரூபாய் பணம் பெற்று தலைமறைவான அரசு பள்ளி தலைமையாசிரியை மீது மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிந்து தேடி வருகின்றனர். கோவை, சர்க்கார் சாமக்குளம், குரும்பபாளையத்தை சேர்ந்தவர் கார்த்திக்குமார், 32. இவர் தனியார் பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவருக்கும் அன்னுார், பொன்னேகவுண்டன் புதுார் அரசு

கோவை:வெவ்வேறு காரணங்களை சொல்லி பலரிடம், 49.50 லட்சம் ரூபாய் பணம் பெற்று தலைமறைவான அரசு பள்ளி தலைமையாசிரியை மீது மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிந்து தேடி வருகின்றனர்.

கோவை, சர்க்கார் சாமக்குளம், குரும்பபாளையத்தை சேர்ந்தவர் கார்த்திக்குமார், 32. இவர் தனியார் பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவருக்கும் அன்னுார், பொன்னேகவுண்டன் புதுார் அரசு பள்ளியில் தலைமையாசிரியராக பணியாற்றும் மாலதி, 54, என்பவருக்கும் ஏற்கனவே அறிமுகம் இருந்து வந்தது.இந்த பழக்கத்தை பயன்படுத்தி, கார்த்திக்குமாரிடம், 10 லட்சம் ரூபாயை கடனாக மாலதி கேட்டு பெற்றார்.பணம் பெற்று இரண்டு ஆண்டுகளாகியும் பணத்தை திருப்பி கொடுக்கவில்லை.

இதேபோன்று மகனை கல்லுாரியில் சேர்க்க வேண்டி, கணவர் உடல்நிலை சரியில்லை என்று சொல்லி மேலும், ஐந்து பேரிடம், 39.50 லட்சம் ரூபாய் பெற்றுள்ளார். ஆனால் பணத்தை யாருக்கும் திருப்பி கொடுக்காமல் காலம் கடத்தி வந்தார்.பணத்தை கொடுத்தவர்கள் மாலதி வீட்டுக்கு சென்று பணத்தை கேட்டு வந்ததால், அவர் யாருக்கும் தெரியாமல் வீட்டை காலி செய்துவிட்டு தலைமறைவாகிவிட்டார். மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் கார்த்திக்குமார் புகார் அளித்தார். மோசடி வழக்கு பதிந்த போலீசார் தலைமறைவான தலைமையாசிரியையை தேடி வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X