உயிருக்கு ஆபத்து! சுப்ரீம்கோர்டில் கங்கனா மனு

Updated : மார் 03, 2021 | Added : மார் 03, 2021 | கருத்துகள் (17)
Share
Advertisement
புதுடில்லி : உயிருக்கு ஆபத்து உள்ளதால், மஹாராஷ்டிராவில் உள்ள வழக்குகளை, ஹிமாச்சல பிரதேசத்தின், சிம்லாவுக்கு மாற்றும்படி, பிரபல பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத், உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.மஹாராஷ்டிராவில், முதல்வர் உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா, தேசியவாத காங்., மற்றும் காங்கிரஸ் கூட்டணி அரசு அமைந்துள்ளது. இங்கு, மும்பை உயர் நீதிமன்றத்தில்,

புதுடில்லி : உயிருக்கு ஆபத்து உள்ளதால், மஹாராஷ்டிராவில் உள்ள வழக்குகளை, ஹிமாச்சல பிரதேசத்தின், சிம்லாவுக்கு மாற்றும்படி, பிரபல பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத், உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.



latest tamil news



மஹாராஷ்டிராவில், முதல்வர் உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா, தேசியவாத காங்., மற்றும் காங்கிரஸ் கூட்டணி அரசு அமைந்துள்ளது. இங்கு, மும்பை உயர் நீதிமன்றத்தில், நடிகை கங்கனா, அவரது சகோதரி ரங்கோலி சந்தேல் ஆகியோர் மீது, பல வழக்குகள் நிலுவையில் உள்ளன.இந்நிலையில், இவர்கள் இருவரும் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:எங்கள் மீது, பல அவதுாறு வழக்குகள் மும்பை உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளன. சட்டத்தை மதித்து, இந்த வழக்குகளில் ஆஜராக தயாராக உள்ளோம். ஆனால், மஹாராஷ்டிராவில் ஆட்சியில் உள்ள சிவசேனா, தொடர்ந்து எங்களை அச்சுறுத்தி வருகிறது.


latest tamil news



முன் அனுமதியில்லாமல் கட்டியதாக, என் வீட்டின் ஒரு பகுதியை இடித்தனர். ஆனால், அது சட்டவிரோதம் என, உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.மஹாராஷ்டிரா அரசும், சிவசேனாவும், தொடர்ந்து எங்களுக்கு மிரட்டல் விடுத்து வருகின்றன. அதனால், வழக்குகள் விசாரணைக்காக மும்பை செல்வது, உயிருக்கு ஆபத்தாகிவிடும். அதனால், மஹாராஷ்டிராவில் எங்கள் மீதுள்ள வழக்குகளை, சிம்லாவுக்கு மாற்ற வேண்டும். இவ்வாறு, மனுவில் கூறப்பட்டுள்ளது.


Advertisement




வாசகர் கருத்து (17)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ellamman - Chennai,இந்தியா
03-மார்-202117:36:23 IST Report Abuse
Ellamman டெல்லி உயர்நீதிமன்றம் தேவையில்லையா???/ திஷா வழக்கில் மத்திய அரசின் டெல்லி போலீஸ் தோலை உரித்து தொங்கவிட்டதினாலா??
Rate this:
Cancel
Subramaniyam Veeranathan - Bangalore,இந்தியா
03-மார்-202114:52:20 IST Report Abuse
Subramaniyam Veeranathan இவர்கள் மற்றும் அரசியல் வாதிகள் புதுசு புதுசா கேஸ் போட்டோக்கொண்டே இருப்பதால் நம் நாட்டில் நீதிமன்றங்கள் இவர்களின் கேஸ கவனிக்கவே நேரம் போதாமல் மக்கலின் சாதாரண கேஸகூட வருடகனக்காக தீர்ப்பு சொல்லாமல் இழுக்கடித்து காக்க வைக்கிறார்கள். இவர்களுக்கு புபிளிசிட்டி வக்கீல்களுக்கு தொடர் வருமானம்................
Rate this:
Cancel
மனிதன் - riyadh,சவுதி அரேபியா
03-மார்-202113:06:40 IST Report Abuse
மனிதன் சினிமாவில் ஜோலி முடிந்ததும் கல்லா கட்ட, பாஜக கூட சேர்ந்து அரசியலுல இறங்கிரலாம்னு நினைத்து, மற்றவர்களைப்பற்றி துடுக்குத்தனமாக பேசியதால் வந்த வினை... ஆனா இவரையெல்லாம் யாருமே கண்டுக்கறதில்ல..,இவர் மட்டும்தான் உயிருக்கு ஆபத்து அப்படி இப்படின்னு நானும் ரவுடிதான்னு கூவிட்டிருக்கார்...
Rate this:
வல்வில் ஓரி - A Proud Sanghi,இந்தியா
03-மார்-202113:47:01 IST Report Abuse
வல்வில் ஓரிபேரை போட்டு கருத்தெழுத துணிவில்லை ....வந்துட்டானுங்க.....
Rate this:
வல்வில் ஓரி - A Proud Sanghi,இந்தியா
03-மார்-202114:12:19 IST Report Abuse
வல்வில் ஓரிஇவனுக்கு பிரச்சினை கங்கனா பேசினது இலை.. அது பிஜேபி யில சேர்ந்ததுதான்.....
Rate this:
NandaIndia, ஹிந்து என்று சொல்லி தலை நிமிர்வோம்அது மட்டுமல்ல. கிரிக்கெட்டில் 'பல' வழிகளில் கல்லா கட்டிய பின்னரும் கான்க்ராஸ் கட்சியில் சேர்ந்து எம் பி ஆன அஸாருதீனை பற்றி மட்டும் இவர்கள் வாயே திறக்க மாட்டார்கள். உத்தமர்கள் போல பேசும் இவர்கள் கண்களுக்கு இது மட்டும் தெரியாதது ஏன்....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X