அரசியல் செய்தி

தமிழ்நாடு

இது உங்கள் இடம் : தி.மு.க., ஆட்சியை மறக்கலாமா?

Updated : மார் 03, 2021 | Added : மார் 03, 2021 | கருத்துகள் (122)
Share
Advertisement
உலக, நாடு, தமிழக நடப்புகள் பற்றி, வாசகர்கள் தினமலர் நாளிதழில் எழுதிய கடிதம் :ஜெ.விநாயகமூர்த்தி, திருப்பூரிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: ஊருக்கே ஆடை வழங்கி அழகு பார்த்த நகரம், திருப்பூர். இந்நகரம், 2011ல் திக்கித்திணறி வழி தெரியாமல் தவித்தது. அதற்கு காரணம், சாயப்பட்டறையை மூடச்சொல்லி, நீதிமன்றம் உத்தரவிட்டது தான். தொழில்நுட்ப விஷயங்களை அறிந்துக் கொள்ளாமலும்,

உலக, நாடு, தமிழக நடப்புகள் பற்றி, வாசகர்கள் தினமலர் நாளிதழில் எழுதிய கடிதம் :
ஜெ.விநாயகமூர்த்தி, திருப்பூரிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: ஊருக்கே ஆடை வழங்கி அழகு பார்த்த நகரம், திருப்பூர். இந்நகரம், 2011ல் திக்கித்திணறி வழி தெரியாமல் தவித்தது. அதற்கு காரணம், சாயப்பட்டறையை மூடச்சொல்லி, நீதிமன்றம் உத்தரவிட்டது தான். தொழில்நுட்ப விஷயங்களை அறிந்துக் கொள்ளாமலும், அப்போது ஆட்சியில் இருந்த, தி.மு.க., அரசின் ஒத்துழைப்பு கிடைக்காமலும், தொழிலை மூடிவிட வேண்டிய அபாயகரமான சூழ்நிலையில், திருப்பூர் நகரம் திணறியது. இத்தொழிலை நம்பியிருந்த, எட்டு லட்சம் தொழிலாளர்களும் நிலைகுலைந்து போயினர்.latest tamil newsமத்தியிலும், மாநிலத்திலும், காங்கிரஸ் - தி.மு.க., கூட்டணி ஆட்சி நடந்தபோதும், திருப்பூர் மீது, ஆட்சியாளர்கள் கரிசனம் காட்டவில்லை; இதில், நான்கு மணி நேரம் முதல், ஆறு மணி நேரம் வரை, அறிவிக்கப்படாத மின் வெட்டு வேறு. இந்தச் சூழ்நிலையில், அ.தி.மு.க., அரசு பொறுப்பேற்றது. வட்டியில்லா கடன் தொகையாக, 200 கோடி ரூபாயை, திருப்பூர் சாயப்பட்டறை தொழில் துறையினருக்கு வழங்கியது; மின் வெட்டும் சீரானது. மறுசுழற்சி முறையில், சாயக்கழிவுநீர் சுத்திகரிப்புக்கு, 'பிள்ளையார் சுழி' போட, மாநில அரசு உதவியது; அரசு அதிகாரிகளும், தொழில் துறையினருக்கு ஒத்துழைத்தனர். தமிழகம் முழுதும், பல்வேறு திட்டங்களை, அ.தி.மு.க., அரசு செயல்படுத்தியது.


latest tamil newsலாட்டரி ஒழிப்பு, 100 யூனிட் இலவச மின்சாரம், 'அம்மா' உணவகம், மழை நீர் சேகரிப்பு, தொட்டில் குழந்தை திட்டம், மகளிர் போலீஸ் ஸ்டேஷன், உலகத்தமிழ் மாநாடு, பெண் கமாண்டோ படை, இலவச லேப் டாப், தாலிக்கு தங்கம், முல்லை பெரியாறு அணை நீர்மட்டத்தை, 142 அடியாக உயர்த்தியது, அரசு கேபிள் டிவி திட்டம் போன்றவை, அதில் குறிப்பிடத்தக்கவை. அதன் காரணமாகத் தான், மீண்டும், 2016ல், அ.தி.மு.க.,விற்கே ஆட்சிக்கான அரியணையை, தமிழக மக்கள் வழங்கினர். முதல்வர் ஜெயலலிதா மறைவுக்குப் பின், சசிகலாவின் கைப்பாவையாக மாற இருந்த, அ.தி.மு.க.வை, இ.பி.எஸ்., மற்றும் ஓ.பி.எஸ்., ஒன்றிணைந்து, கருத்து வேறுபாடுகளை மறந்து, எம்.எல்.ஏ.,க்களை ஒன்றிணைத்து, காப்பாற்றினர். மிக முக்கியமாக, மத்திய அரசுடன் மோதல் இல்லாமல், சாமர்த்தியமாக, மாநில அரசுக்குத் தேவையான திட்டங்களை பெற்று, ஆட்சி கவிழாமல் பாதுகாத்தனர்.

'அ.தி.மு.க., தலைமையிலான ஆட்சி, இன்று கவிழ்ந்து விடும்; நாளை கதை முடிந்துவிடும்' என்ற, எதிர்கட்சியின் பிரசாரத்தை துாள் துாளாக்கினர். இ.பி.எஸ்., ஆட்சியிலும் கல்வி, விளையாட்டு, மின்சாரம், கொரோனா கால சுகாதாரப்பணி உள்ளிட்டவை சிறப்பாக மேற்கொள்ளப்பட்டன. மத்திய அரசுடன் இணக்கமாக உள்ள, அ.தி.மு.க.,வே மீண்டும் ஆட்சியில் அமர வேண்டும். அது, தமிழகத்திற்கு நன்மை பயக்கும். ஏனென்றால், தி.மு.க., அரசின் செயல்பாடுகளை, நாம் ஏற்கனவே பார்த்துள்ளோம். மின்வெட்டு, அடாவடி அரசியல், போலீசாரை மிரட்டுதல், கட்டப்பஞ்சாயத்து, சினிமாத்துறையில் அத்துமீறல், நில அபகரிப்பு போன்ற, தி.மு.க., ஆட்சியின், அவலட்சணத்தை, நாம் கண்டோம்.

Advertisement
வாசகர் கருத்து (122)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Truth Triumph - Coimbatore,இந்தியா
03-மார்-202123:26:49 IST Report Abuse
Truth Triumph எப்படியோ மக்களை ஏமாற்றி ஒட்டு வாங்கும் யுக்தியை அப்பன் கண்டு பிடித்தான் அதற்க்கு ஒரு பெரும் கூட்டம் விலை போனது .. அந்த குறுக்கு வழியை இன்னும் அகலமாக்கினான் மற்றொரு மகன் அதில் அவன் பயன்பெற முடியாமல் அடுத்தவன் போகவிட்டுவிட்டு ...அப்பன் போன பின்னாலே போலும்புறான் .. சின்னவன் அராஜக கும்பல்களை உடன் வைத்து எப்படியோ ஜெய்கிறான் ... மக்கள் இதை உணர்ந்து விட்டார்கள் இனி தொல்லைதான் ...
Rate this:
Cancel
Dr.T.Senthilsigamani - Srivilliputtur,இந்தியா
03-மார்-202121:55:49 IST Report Abuse
Dr.T.Senthilsigamani அருமையான கட்டுரை .ஆனாலும் திராவிட சார்பு சமூக மற்றும் வெகு ஜன ஊடகங்கள் திட்டமிட்டு திமுக மற்றும் திமுக கூட்டணி கட்சிகள் பற்றிய எதிர்மறையான செய்திகளை வெளியிடாமல் இருட்டடிப்பு செய்கின்றன.அதனால் தான் போன நாடாளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணி வெற்றி பெற்றது .தற்போது வரை இதனை அந்த ஊடகங்கள் செய்து வருகின்றன .இப்படி திராவிட சார்பு வெகு ஜன சமூக ஊடகங்களால் மறைக்கப்பட்ட /இருட்டடிப்பு செய்யப்பட்ட சமீபத்திய செய்திகள் - 1 தி.மு.க., கீழையூர் ஒன்றிய செயலரும், வேளாங்கண்ணி முன்னாள் பேரூராட்சி தலைவருமான, தாமஸ் ஆல்வா எடிசன் எனது குடும்பத்திற்கு சொந்தமான நிலத்தை அபகரித்து விட்டார் என ஒரு பெண்மணி ஸ்டாலினிடம் கொடுத்த மனு பற்றிய செய்தி 2 தி.மு.க அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, பிச்சை, விபசார விடுதி, நாய்’ ,மூதேவி,, ஆண்மை..எனப் பல வார்த்தைகளை பேசிய செய்தி 3 முருகனுக்கும் ,பிள்ளையாருக்கும் ஒரு தந்தை கிடையாது என்று சொன்ன திருமா,கிருஸ்துவ கூட்டத்தில் ஹிந்து ஜாதிகள் குறித்து பேசிய திருமா, 4 திமுக பொதுக்கூட்டத்தில் ,திமுகவினர் வேல் கொடுத்ததை கனிமொழிவாங்க மறுத்ததை /முகம் சுளித்ததை பற்றிய செய்தி என அடுக்கிக்கொண்டே போகலாம்.இத்தகைய செய்திகளை மக்கள் அறிய முடியாத நிலையில் இதனை சமூக ஊடகங்கள் திட்டம் போட்டு தவிர்க்கின்றன .கோ பேக் மோடி என சொல்லும் ஊடகங்கள் மேற்கொண்ட செய்திகளை முற்றிலும் தவிர்க்கின்றன .ஆனால் ,நடுநிலை என்ற பெயரில் மோடிஜி பற்றிய ஒருதலை பட்சமான செய்திகளை தினமும் செய்துவருவார்கள் .இது தான் நிதர்சனம் .இதுதான் உண்மை .நடுநிலை ஊடகங்கள் தங்களின் நிலைப்பாடு குறித்து சீர்தூக்கி ஆராய்ந்து உண்மை செய்திகளை பாரபட்சமின்றி வெளியிடவேண்டும் .இதுதான் பாமர மக்களின் எதிர்பார்ப்பு. இதுதான் சாதாரண குடிமகனின் எதிர்பார்ப்பு .இதுதான் சராசரி மக்களின் எதிர்பார்ப்பு.1971 திக திராவிட மாநாட்டில் ஈ வே ராமசாமி நாயக்கர் அயோத்தி ராமரை இழிவு செய்தார் .மற்ற ஹிந்து தெய்வங்களையும் கேவலங்கள் செய்தார் .ஆனால் அதனை துக்ளக் மற்றும் சில ஊடகங்கள் மட்டுமே அதனை பிரசுரித்தன. மற்ற ஊடகங்கள் குறிப்பாக மற்ற மொழி பேசும் நடிகையர் தமிழ் கற்றுக்கொள்ள உதவும் ஊடகங்கள் என தங்கள் மார் தட்டி கொள்ளும் வெகு ஜன ஊடகங்கள் கள்ள மௌனம் சாதித்தன. ஏனென்றால் அப்போது தமிழகத்தை ஆண்டது ஹிந்து விரோதி கருணாநிதி. அவரால் ஆதாயம் கிடைக்கும் என கருதிய ஊடகங்கள் பெரியாரின் இழிசெயலை பிரசுரிக்கவில்லை. விளைவு அடுத்த வருடமும் கருணாநிதி முதல்வராக பதவியேற்றார் நாற்பது வருடங்களாகியும் அந்த மொண்ணை விவாத ஊடகங்கள் திருந்தவில்லை.என்ன கொடுமை சரவணன் இது ? ஒருவேளை இந்த தேர்தலில் ஹிந்து விரோத திமுக கணிசமான தொகுதிகளை வென்றால் அதற்க்கு முழுமுதற்காரணம் திராவிட சார்பு சமூக ஊடங்கங்கள் மட்டுமே பொறுப்பு .தமிழகத்தை இருண்ட காலத்திற்கு அழைத்து செல்ல திமுக கூட்டணிக்கு வக்காலத்து வாங்கும் சமூக ஊடகங்கள் தங்களின் பார்வையை சரி செய்து கொண்டால் தமிழகத்திற்கு நல்லது
Rate this:
Cancel
Narayanan - chennai,இந்தியா
03-மார்-202121:31:34 IST Report Abuse
Narayanan இப்பவும் அதே அடாவடி அரசியல்தானே தி மு க நடத்துகிறது .உதயநிதி ஸ்டாலின் என்ன சொல்கிறார் போலீஸ் அதிகாரியை பார்த்து சொல்கிறார் உங்கள் பெயரை குறித்துக் கொண்டதாகவும் நடவடிக்கை கடுமையாக இருக்கும் என்கிறார் . அதையே அவரின் தந்தை ஸ்டாலினும் சொல்கிறார் . அதுபோகட்டும் ஹிந்துக்களையும் அவர்களின் புனிதமான சடங்குகளையும் அசிங்கப்படுத்தி பேசும் இவர்களை இனியும் அரசியலில் தலை தூக்க விடக்கூடாது
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X