தமிழக நிகழ்வுகள்
1. சேத்தூர் அருகே ரூ.1.10 லட்சம் பறிமுதல்
சேத்துார் : தேர்தலை தொடர்ந்து சேத்துார் அருகே நடந்த சோதனையில் உரிய ஆவணங்களின்றி காரில் கொண்டு சென்ற ரூ. 1 .10 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.

2. கோயில் கதவை உடைத்து நகை, பணம் கொள்ளை
தளவாய்புரம் : தளவாய்புரம் அருகே கோயில் கதவை உடைத்துஅம்மனுக்கு சாத்தியிருந்த தங்க ஆபரணங்கள் , உண்டியல் பணம் கொள்ளை அடிக்கப்பட்டது. பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியிருந்த அம்மன் தாலி, மூக்குத்தி, காது அணிகலன்கள் என ரூ. 4 லட்சம் மதிப்புள்ள 9 பவுன் தங்க ஆபரணங்கள், உண்டியல் பணம் ரூ. 15 ஆயிரம், பீரோவில் இருந்து ரூ. ஆயிரம் என ரூ. 16 ஆயிரம் ரொக்கம், வெள்ளி பூஜை பொருட்களும் திருடு போயிருப்பது தெரிந்தது.

3. அரிசி ஆலை உரிமையாளர் சரமாரியாக வெட்டி கொலை
திருப்போரூர்: பொன்மார் பகுதியில், அரிசி ஆலை உரிமையாளரை சரமாரியாக வெட்டி கொலை செய்த மர்ம நபர்களை, போலீசார் தேடுகின்றனர். பின், சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார், மர்ம நபர்கள் விட்டுச் சென்ற, போர்வையுடன் இருந்த பையை பறிமுதல் செய்தனர்.அப்பகுதி, 'சிசிடிவி' கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். நான்கு தனிப்படை அமைக்கப்பட்டு, பெண்கள் உட்பட, 10 பேரை பிடித்து, போலீசார் விசாரிக்கின்றனர்.
4. ரூ.49.5 லட்சம் பணம் மோசடி: தலைமையாசிரியை மீது வழக்கு
கோவை:வெவ்வேறு காரணங்களை சொல்லி பலரிடம், 49.50 லட்சம் ரூபாய் பணம் பெற்று தலைமறைவான அரசு பள்ளி தலைமையாசிரியை மீது மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிந்து தேடி வருகின்றனர்.

5. ஏ.டி.எம்., இயந்திரம் பெயர்த்து சென்ற வட மாநில கொள்ளையர் 6 பேர் கைது
திருப்பூர்: திருப்பூர் அருகே ஏ.டி.எம்., இயந்திரத்தை கொள்ளையடித்த, ஹரியானா மாநிலத்தை சேர்ந்த, ஆறு பேர் கொண்ட கும்பலை போலீசார் கைது செய்தனர். கைதானவர்களிடம் இருந்து, 69 ஆயிரத்து 120 ரூபாய் ரொக்கம், கன்டெய்னர் லாரி, இரண்டு நாட்டு துப்பாக்கி, ஒன்பது தோட்டா, வெல்டிங் மெஷின், காஸ் சிலிண்டர், பெயின்டிங் ஸ்பிரே உட்பட பொருட்கள் கைப்பற்றப்பட்டன. ஊத்துக்குளி போலீசார் கூறியதாவது: கொள்ளையில் ஈடுபட்ட, ஆறு பேர் கும்பல், ஹரியானா மாநிலத்தில் இருந்து ஈரோட்டுக்கு துணி லோடு ஏற்றி செல்ல, 27ம் தேதி வந்தது. அன்று நள்ளிரவு திருப்பூரில் உள்ள ஏ.டி.எம்., ஏதாவது ஒன்றில் கொள்ளையடிக்க திட்டமிட்டனர்.

6. அரசு வேலை வாங்கி தருவதாக மோசடி
சென்னை : அரசு வேலை வாங்கித் தருவதாக, 3.28 கோடி ரூபாய் மோசடி செய்த வழக்கில், அண்ணா பல்கலை துணை பதிவாளரை, மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கில் பார்த்தசாரதி என்பவர், நேற்று கைது செய்யப்பட்டார். அவரது கூட்டாளிகள் ரவீந்திர ராஜா, வள்ளி இளங்கோ உள்ளிட்ட நான்கு பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

இந்தியாவில் குற்றம் :
கேரளாவில் 'ஸ்டிரைக்'
திருவனந்தபுரம்: பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து, கேரளாவில் பல்வேறு தொழிற்சங்களின் கூட்டமைப்பு சார்பில், நேற்று வேலை நிறுத்தப் போராட்டம் நடந்தது. அரசு, தனியார் பஸ்கள், லாரி, ஆட்டோ, வாடகை கார் உள்ளிட்டவை, இதில் பங்கேற்றன. இதனால், சாலைகள் வெறிச்சோடியதுடன், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. பள்ளி, கல்லுாரி மாணவர்களின் நேற்றைய தேர்வுகள், ஒத்திவைக்கப்பட்டன.

உலக நடப்பு
நகைக் கடை கொள்ளை: துாங்கி வழிந்த நாய்!
பாங்காக் : தாய்லாந்தில், நகை கடை ஒன்றில் பாதுகாப்புக்காக நிறுத்தியிருந்த நாய், கொள்ளை நாடகத்தை தடுக்காமல் துாங்கி வழிந்த காட்சி, சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE