அரசியல் செய்தி

தமிழ்நாடு

உங்க சுயநலத்துக்காகவா காங்., கட்சி? கோஷ்டிகளை விளாசிய ராகுல்!

Updated : மார் 03, 2021 | Added : மார் 03, 2021 | கருத்துகள் (40)
Share
Advertisement
தென் மாவட்டங்களில், மூன்று நாள் சுற்றுப்பயணம் செய்த ராகுல், இளைஞர்களின் வரவேற்பால் தெம்பாக காணப்படுகிறார்.'இனி அடிக்கடி வருவேன்; கட்சி அடித்தளத்தை பலப்படுத்தி, கட்டமைப்பை உருவாக்குவேன்' என, சபதம் செய்திருக்கிறார். இந்த நேரத்தில், மீண்டும் பேச வருமாறு, தி.மு.க., அழைத்துள்ளது. 20 தொகுதிகள் தருவதாகவும், உடன்பாட்டில் சீக்கிரம் கையெழுத்து போடும்படியும், 'பிரஷர்'

தென் மாவட்டங்களில், மூன்று நாள் சுற்றுப்பயணம் செய்த ராகுல், இளைஞர்களின் வரவேற்பால் தெம்பாக காணப்படுகிறார்.latest tamil news


தேர்தல் களம் உங்கள் சுயநலத்துக்காக கட்சியை அடகு வைப்பதா? தமிழக காங்கிரசாரை விளாசிய ராகுல்


'இனி அடிக்கடி வருவேன்; கட்சி அடித்தளத்தை பலப்படுத்தி, கட்டமைப்பை உருவாக்குவேன்' என, சபதம் செய்திருக்கிறார். இந்த நேரத்தில், மீண்டும் பேச வருமாறு, தி.மு.க., அழைத்துள்ளது. 20 தொகுதிகள் தருவதாகவும், உடன்பாட்டில் சீக்கிரம் கையெழுத்து போடும்படியும், 'பிரஷர்' கொடுக்கிறது. காங்கிரசில் பலர், இந்தளவு குறைவான தொகுதிகளை ஏற்காமல் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். கோஷ்டி தலைவர்கள் சிலர், உடனே கையெழுத்து போட்டு விடலாம் என்கின்றனர். அவர்களுக்கு தேவை, தங்கள் வாரிசுக்கும், ஆதரவாளர்களுக்கும், 'சீட்' மட்டுமே. எண்ணிக்கை குறைப்பு பற்றி, அவர்களுக்கு கவலை இல்லை. அறிவாலய நண்பர்கள் வாயிலாக, இதை ஸ்டாலினுக்கு, 'பாஸ்' செய்து விட்டனர்.

இந்த விஷயம் தெரிந்து, ராகுல், 'டென்ஷனாகி' விட்டார். மொத்த கோஷ்டி தலைவர்களையும் கூப்பிட்டு கண்டித்துள்ளார். 'என்னை பிரதமர் வேட்பாளராக அறிவித்த, முதல் தலைவர் என்பதால். ஸ்டாலின் முதல்வர் ஆவதில் எனக்கும் மகிழ்ச்சி. அதற்காக, கட்சி நலனை விட்டுத் தர முடியாது. என் பாட்டி காலத்தில், 104; அப்பா காலத்தில், 72; அம்மா காலத்தில், 63, 'சீட்' தி.மு.க.,விடம் வாங்கியிருக்கோம். என்னோட, 'பீரியடில்' 41 கிடைத்தது. இப்போ வெறும், 20 என்றால், எப்படி கட்சி நடத்த முடியும்?' என, கேட்டிருக்கிறார்.


latest tamil news'வாரிசுக்காகவும், ஆதரவாளர்களுக்காகவும், சிலர் தி.மு.க.,விடம், 'சரண்டர்' ஆகின்றனர். இனிமேல் அப்படி நடக்கக் கூடாது. பணம், லாபம் பார்க்க, இது, 'பிரைவேட்' கம்பெனி அல்ல. சுயநலத்துக்காக, கட்சியை அடகு வைக்காதீர்கள். பண பலம் இருந்தால்தான், 'சீட்' என்ற நிலை மாறட்டும். லோக்சபா தேர்தலில், பணம் பலமில்லாத ஜோதிமணி, மாணிக்தாகூர், ஜெயகுமாருக்கு வாய்ப்பு கொடுத்தோம்; வெற்றி பெற்றனர். இப்போதும் அப்படி கட்சிக்கு உழைத்தவர்களுக்கு, 'சீட்' கொடுங்கள்' என, கூறியுள்ளார்.

முன்னதாக ப.சிதம்பரத்துடன் பேசியதில் இருந்தே, ராகுல் கடுப்பாக இருந்ததாக, சத்தியமூர்த்தி, பவன் வட்டாரங்கள் கூறின. எத்தனை இடங்களில் வெற்றி வாய்ப்பு உள்ளது என, அவரிடம் ராகுல் கேட்டுள்ளார். '15 முதல் 20 தொகுதிகளில் கட்டாயம் வெற்றி பெறுவோம்' என, சிதம்பரம் பதில் சொன்னாராம். 'அப்படி என்றால், தி.மு.க.,விடம் எத்தனை, 'சீட்' கேட்கலாம்' என, ராகுல் விசாரித்துள்ளார். 'இந்த தடவை எந்த கட்சிக்கும் அதிக, 'சீட்' தர தி.மு.க., தயாரில்லை; அவர்களோடு மல்லுக்கட்டி, கூடுதல், 'சீட்' பெற்றாலும் கசப்புதான் மிஞ்சும். அது தேர்தலில் உதவாது.

எனவே, நிச்சயமாக நாம் ஜெயிக்க கூடிய தொகுதிகளை மட்டும் கேட்டுப் பெறலாம். பீஹார் போல, அதிக, 'சீட்' கேட்டு வாங்கி, அதிக இடங்களில் தோற்கவும் வேண்டாம்' என, சிதம்பரம் தெளிவாக சொல்லி இருக்கிறார். இதனால், ராகுல், 'அப்செட்' ஆனாராம். 'அவ்வளவு குறைந்த சீட் வாங்கினால், தொண்டர்களை எப்படி சமாதானப்படுத்துவது? தலைவர்களுக்கு மட்டும், 'சீட்' வாங்கினால் போதும் என நீங்கள் நினைக்கலாம். நான், தொண்டர்களுக்காக கவலைப் படுகிறேன்.

'முதலில், இங்குள்ள தலைவர்கள் தலைவர் என்ற மனநிலையில் இருந்து மாறி, தொண்டர் என்ற மனநிலைக்கு வரவேண்டும்' என, கூறியுள்ளார். அதில் சிதம்பரம், 'அப்செட்'. தென்காசி ரிசார்ட்டில் சந்தித்த தலைவர்களிடமும் ராகுல் குமுறியிருக்கிறார். 'தி.மு.க., 35 தொகுதி தராவிட்டால், தனித்தே நிற்போம். நாம் ஆட்சிக்கு வரப் போவதில்லை. தி.மு.க.,தான் ஆட்சிக்கு வந்தாகணும். அதனால், கூட்டணி கட்சிகளை அனுசரித்து போக வேண்டும். ஆனால், இங்கே எல்லா தலைவர்களும், தி.மு.க.,வுக்கு ஆதரவாகவே பேசுகிறீர்கள். தொண்டர்கள் கருத்து இதற்கு நேர் மாறாக இருக்கிறது' என்றாராம்.

நடுவில் கே.எஸ்.அழகிரியை அழைத்த ராகுல், 'தமிழக காங்கிரஸ் தலைவர்கள் பலர், தி.மு.க.,வுக்கு காலம் காலமாக சேவகம் செய்து வருகிறீர்கள் போலிருக்கிறதே'என, சொல்லியிருக்கிறார். தி.மு.க.,வுடன் முரண்டு பிடிக்காமல் தொகுதிப் பங்கீட்டை முடிக்குமாறு இளங்கோவன், பீட்டர், சிதம்பரம் ஆகியோர் தொடர்ச்சியாக சொன்ன அறிவுரை தான் ராகுல், 'கமென்டு'க்கு காரணம் என்கிறார்கள்.

அதே சமயம், தங்கபாலு, திருநாவுக்கரசர், அழகிரி ஆகியோர், தி.மு.க., கூட்டணி வேண்டாம் என்று சொன்னதையும், ராகுல் ஏற்கவில்லையாம்.

Advertisement
வாசகர் கருத்து (40)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Aarkay - Pondy,இந்தியா
04-மார்-202101:20:55 IST Report Abuse
Aarkay கட்சி நடத்துவதே சுரண்டல் லாட்டரி போலத்தானே நாட்டு நலனுக்காகவே நடத்துகிறோம்? குடும்ப நலனுக்காகத்தானே? கொடுத்ததை வாங்கிக்கொண்டு, ஒன்றிரண்டில் முடிந்தால் வென்று, முகவரியை காப்பாற்றிக்கொள்வோம்.
Rate this:
Cancel
ராஜவேலு ஏழுமலை (ஜாதி மத அரசியலை எதிர்ப்போம்.) காங்கிரஸ் தனித்து நின்றால் மகிழ்ச்சி. இங்கு மட்டுமல்ல பாரத தேசத்தில் எல்லா இடங்களிலும் தனித்தே நிற்க வேண்டும்.
Rate this:
Cancel
Bhaskaran - Chennai,இந்தியா
03-மார்-202117:16:54 IST Report Abuse
Bhaskaran Thimukavin sleepercellkal congiresil niraya irukaanga
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X