சென்னை : தொகுதி பங்கீட்டில் முரண்டு பிடித்த தே.மு.தி.க.விடம் 'மாஜி' அமைச்சர் பேசியதால் சமரசம் ஏற்பட்டுள்ளது.
தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்தை அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி, முன்னாள் அமைச்சர் முனுசாமி ஆகியோர் சந்தித்து கூட்டணியை உறுதி செய்தனர். அதைத் தொடர்ந்து அமைச்சர் தங்கமணி வீட்டுக்கு தே.மு.தி.க.வினர் சென்று பேச்சு நடத்தினர்; 23 தொகுதிகள் கேட்டனர்.
ஆனால் 12 தொகுதிகளை மட்டுமே தர அ.தி.மு.க. முன்வந்தது. இதனால் பேச்சில் முட்டுக்கட்டை ஏற்பட்டது. நேற்று முன்தினம் நடக்க இருந்த பேச்சும் ரத்தானது. தனித்து போட்டியிடவும் தயாராக இருப்பதாக தே.மு.தி.க. தரப்பில் கருத்து வெளியானது.

இதையடுத்து முன்னாள் அமைச்சர் முனுசாமி நேற்று காலை விஜயகாந்த் மைத்துனர் சுதீஷிடம் பேசினார். கூட்டணி பேச்சை தொடர தே.மு.தி.க. முன்வந்தது. 'தொகுதி பங்கீடு முடியும் வரை கூட்டணி குறித்து எந்த கருத்தையும் யாரும் வெளியிட வேண்டாம்' என தே.மு.தி.க.வினருக்கு தலைமை அறிவுறுத்தியுள்ளது.இந்நிலையில் அ.தி.மு.க. - தே.மு.தி.க. இடையே 5ம் தேதி உடன்பாடு கையெழுத்தாகும் என கூறப்படுகிறது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE