சென்னை : 'தேர்தல் பொதுக் கூட்டங்களால் கொரோனா பரவ வாய்ப்பு அதிகமாக இருப்பதால் கண்காணிப்பு குழு அமைக்க வேண்டும்' என தேர்தல் கமிஷனிடம் சுகாதாரத்துறை வலியுறுத்தி உள்ளது.
தமிழகத்தில் கொரோனா தொற்று குறைந்து வருகிறது. சில வாரங்களாக சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் மட்டும் கொரோனா அறிகுறியுடன் அனுமதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகம்உள்ளது.ஒரு சில இடங்களில் டெங்கு காய்ச்சலின் தீவிரம் உள்ளது.
இந்நிலையில் சட்டசபை தேர்தல் அறிவிக்கப்பட்டு உள்ளது.கட்சிகள் நடத்தும் கூட்டங்களால் கொரோனா டெங்கு காய்ச்சல் அதிவேகமாக பரவும் வாய்ப்புள்ளது. குறிப்பாக அரசியல் கட்சிகள் நடத்தும் கூட்டங்களில் சமூக இடைவெளி முகக்கவசம் போன்றவை கேள்விக்குறியாகி உள்ளன.
தற்போது கேரளா, மஹாராஷ்டிரா, பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களில் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. இதேபோல் தமிழகத்திலும் பாதிப்பு அதிகரிக்கும் என சுகாதாரத்துறை கருதுகிறது.
இதுகுறித்து சுகாதாரத்துறை அதிகாரி கூறியதாவது: தமிழகத்தில் சமூக இடைவெளி முகக்கவசம் அணிவதில் மக்கள் தொடர்ந்து அலட்சியம் காட்டி வருகின்றனர். பொதுக் கூட்டங்களிலும் இதே நிலை நீடிக்கும் என தெரிகிறது. எனவே சட்டசபை தொகுதிக்கு உட்பட்டபகுதிகளில் தேர்தல் பிரசாரங்களை கண்காணிக்கும் வகையில் கொரோனா தடுப்பு கண்காணிப்பு குழு அமைக்க தேர்தல் கமிஷனிடம் தெரிவித்துள்ளோம்.
மேலும் அபராதம் மற்றும் சட்ட நடவடிக்கையை தீவிரப்படுத்தவும் வலியுறுத்தி உள்ளோம். இதுகுறித்து தேர்தல் கமிஷன் முறையான வழிகாட்டுதல் வழங்கும் என எதிர்பார்க்கிறோம். இவ்வாறு அவர்கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE