எலக் ஷன் வருது துள்ளிக்கிட்டு... 'கலெக் ஷனை' கவலையின்றி அள்ளிக்கட்டு!

Added : மார் 03, 2021
Advertisement
கொளுத்திய வெயிலையும் பொருட்படுத்தாமல், மித்ராவின் வீட்டுக்கு வந்த, ''உஷ்... அப்பாடா, இப்பவே இப்படின்னா, ஏப்., மாசம் எப்படி இருக்கும்?'' என்றவாறே, ஹாலில் இருந்த சோபாவில் உட்கார்ந்தாள்.''வாங்கக்கா,'' என்ற மித்ரா, ஜில்லென மோர் கொடுத்து விட்டு, ''எரியற வீட்ல பிடுங்கிறது லாபம்ங்கற கதை மாதிரில்ல நடக்குது'' என ஆரம்பித்தாள்.''எதைப்பத்தி மித்து சொல்ற?'' என்றவாறு,
எலக் ஷன் வருது துள்ளிக்கிட்டு... 'கலெக் ஷனை' கவலையின்றி அள்ளிக்கட்டு!

கொளுத்திய வெயிலையும் பொருட்படுத்தாமல், மித்ராவின் வீட்டுக்கு வந்த, ''உஷ்... அப்பாடா, இப்பவே இப்படின்னா, ஏப்., மாசம் எப்படி இருக்கும்?'' என்றவாறே, ஹாலில் இருந்த சோபாவில் உட்கார்ந்தாள்.

''வாங்கக்கா,'' என்ற மித்ரா, ஜில்லென மோர் கொடுத்து விட்டு, ''எரியற வீட்ல
பிடுங்கிறது லாபம்ங்கற கதை மாதிரில்ல நடக்குது'' என ஆரம்பித்தாள்.

''எதைப்பத்தி மித்து சொல்ற?'' என்றவாறு, மோரை பருகினாள்.

''எலக்ஷன் தேதி அறிவிச்சு, நடத்தை விதி அமலுக்கு வந்த பின், அவிநாசி - தெக்கலுாரில் 'டாஸ்மாக்' கடை ஓபன் பண்ணியிருக்காங்க. இதுல, ஆளுங்கட்சிக்காரங்க, எதிர்க்கட்சிக்காரங்க கை கோர்த்து 'பிசினஸ்' பார்க்கறதால, போலீஸ்காரங்கனால எதுவும் பண்ண முடியலைன்னு பேசிக்கிறாங்க. மொத்தமா, 14 கடையில, ஆளுங்கட்சிக்காரங்க, நல்லா வசூல் வேட்டையாடறாங்கக்கா,''

''மித்து, பல்லடத்தில், கவர்மென்ட் சார்பா சிலருக்கு இலவச கோழி குடுத்தாங்க. ஆனா, ஏழைங்கற பேர்ல பணக்காரங்கதான் நிறைய பேர் வாங்கிட்டாங்க. இதுல கூட, எம்.எல்.ஏ., குடுத்த லிஸ்டை வச்சுத்தான், பைனல் பண்ணாங்களாம். எலக்ஷன் சமயத்துல நமக்கு எதுக்கு வம்புன்னு அதிகாரிகளும் கண்டுக்கலையாம்,''

''அதே ஊர்ல, கலெக்ஷன் மேட்டர்ல, சில ஆபீசர்ஸ் பயந்து போய் கிடக்காங்களாம்,'' என்றாள் மித்ரா.

''அக்ரி ஆபீஸ்ல, அசிஸ்டன்ட் வேல வாங்கி தர்றதா சொல்லி, லட்சக்கணக்குல பணம் வசூல் பண்ணியிருக்காங்க; பணம் குடுத்தவங்களோட பிரஷர் தாங்காமதான் 'வாட்ச்மேன்' சூைஸட் பண்ணிட்டார்னு பேசிக்கிட்டாங்க. ஆனா, கம்ப்ளைன்ட் கொடுக்க யாரும் வராததால, 'பேமிலி பிராப்ளம்'ன்னு சொல்லி, முடிச்சுட்டாங்க'' என்றாள் சித்ரா.

''அடக்கொடுமையே…''

''இதேபோல, சத்துணவு வேலைக்கு, ஆளுங்கட்சிக்காரங்க கிட்ட சில லகரங்களை பலரும் கொடுத்திருக்காங்க. எலக்ஷன் அறிவிச்சதால, பணம் கிடைக்குமாங்கற சந்தேகமாம். எலக்ஷன் டைம்ல, வாங்கின பணத்த கொடுக்கலைன்னா, கட்சிக்கு கெட்ட பெயர் வந்துடும்ங்கற பயம் வந்ததால, ஒரு சிலருக்கு மட்டும் திருப்பி குடுத்திட்டாங்களாம்,''

''இங்க இப்படின்னா, கூட்டுறவு டிபார்ட்மென்ட்ல அசிஸ்டென்ட் வேலைக்கு ஏழு லட்சம் ரூபாய் வரை 'ரேட்' பேசின விஷயம் ஊர் அறிஞ்சது. சிலரு பணம் தர்றாம இருந்திருக்காங்க. எலக்ஷன் வந்ததால, பணம் கொடுக்காதவங்களையும் கூப்பிட்டு, அவசர, அவசரமா அப்பாயின்மென்ட் ஆர்டர கையில கொடுத்து அனுப்பிட்டாங்க,'' சொன்ன சித்ரா, ''மித்து, கடை வீதிக்கு போயிட்டு வரலாம், வா,'' என்றதும், இருவரும்
கிளம்பினர்.

ரோட்டில் போலீஸ் செக்கிங் சற்று அதிகமாகவே இருந்தது.

''காங்கயத்துக்கு பக்கத்தில, ஊதியூர் லிமிட்ல போன வாரம், பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள சொகுசு கார் கேட்பாரற்று இருந்தது. தகவல் கிடைச்சதும், லோக்கல் போலீஸ்
காரங்க, ஸ்டேஷனுக்கு கொண்டு போயிட்டாங்க,''

''என்கொயரில, காரோட ரிஜிஸ்டர் நம்பர் போலின்னு தெரிய வந்திருக்கு. இத தெரிஞ்சுகிட்ட சீனியர் ஆபீசர்ஸ், இந்த விஷயத்தை நாங்களே பாத்துக்கறோம்ன்னு சொல்லி, விஷயத்தையே மூடி மறைச்சுட்டாங்களாம். இதுல, ஏதோ பெரிய மர்மம் இருக்குதுனு ஸ்டேஷன் போலீஸ்காரங்க பேசிக்கிறாங்க,'' என்றாள் மித்ரா.

போலீசார் வாகன சோதனையில் தீவிரமாக இருக்க, அதைப்பார்த்த சித்ரா, ''நடுரோட்ல, ஒருத்தரை டிராபிக் எஸ்.ஐ., அடிச்சது தெரியுமா?'' என்றாள்.

''இது எங்கக்கா?''

''கார்ப்பரேஷன் சிக்னல் பக்கத்துல, 'நோ பார்க்கிங்ல' தெரியாம, காரை நிறுத்திட்டாங்க. அங்க வந்த, எஸ்.ஐ,. 'காரை எடுக்க சொன்னதும்,', அவரு பதட்டத்தில இன்னொரு வண்டி மேல மோதற மாதிரி போனதுக்கு, அவரோ முகத்தில குத்திட்டாரு. நுாத்துக்கணக்கான ஜனங்க முன்னாடி, இப்படி நடந்துக்கறாங்களே,'' ஆதங்கப்பட்ட சித்ரா, மொபைல்போனில் டயல் செய்து, ''முத்துசெல்வமா, உங்களை ஐயா நாளைக்கு வரச்சொன்னாரு,'' என பேசிவிட்டு, 'ஆப்' செய்து வைத்தாள்.

''பெரிய ஆபீசரோட கன்ட்ரோல் இல்லைன்னா, தனி ராஜாங்கமே நடத்துவாங்க போல,'' என்றாள் மித்ரா.

''அப்படி என்ன நடந்துச்சு?''

''அவர் வெளியூர் போன சமயத்துல, அடுத்ததாக உள்ளவர், ஒரே நைட்ல, 93 போலீஸ்காரங்களுக்கு 'டிரான்ஸ்பர்' போட்டுட்டாரு. டிரான்ஸ்பர் விஷயத்தில, அவரோட தலையீடு ரொம்ப அதிகமாம்ங்க்கா,'' சொன்ன மித்ரா, ''அக்கா, அடுத்த 'கட்'டில் உள்ள ஜெயச்சந்திரன் ஸ்டோர்ஸில் நிறுத்துங்க,'' என்றாள்.

சொன்னவாறே கடை முன் வண்டியை நிறுத்தினாள் சித்ரா. இருவரும் உள்ளே சென்று பொருள் வாங்கி திரும்பினர்.

''மித்து, கொஞ்ச நாள் அடக்கி வாசிச்ச பத்திரப்பதிவு துறையினர், திரும்பவும் வசூலை ஆரம்பிச்சிட்டாங்க,'' என அடுத்த மேட்டருக்கு தாவினாள்

''ஓ... '' என்றாள் மித்ரா.

''சமீபத்தில் பத்திரப்பதிவு துறைல ரசீது முறைகேடு, பூதாகரமாச்சுல்ல. இதனால, ஆபீசர்ங்க கொஞ்சம் அடக்கி வாசிச்சாங்க. ஆனா, இப்ப திரும்பவும் ஆரம்பிச்சிட்டாங்க. குறிப்பா சொல்லோணும்னா, ஜாயின்ட் -2, தொட்டிபாளையம் ஆபீசில், புதுசா வந்த ஆபீசர்ஸ், வெயிலை விட வசூலில் கொளுத்தி எடுக்கறாங்களாம்,''

டிராபிக் நெரிசலில் வண்டி மெதுவாக செல்லவே, அருகில் மொபட்டில் வந்தவரை பார்த்து, ''ஹலோ, பாஸ்கரன் அங்கிள் எப்படி இருக்கீங்க. போனவாரம் தான், உமாமகேஸ்வரி மேடம் உங்களை பத்தி கேட்டாங்க,'' என்ற மித்ரா, இரண்டு நிமிடம் பேசினாள்.

கிடைத்த இடைவெளியில் வண்டி ஓட்டிய சித்ரா,
''வீரபாண்டில கட்டீருக்கிற
அடுக்குமாடி வீடுகளில்,
ஆளுங்கட்சியினருக்கு, ஒரு வார்டுக்கு, 10 வீடு குடுத்திருக்காங்க. ஆனா, கார்ப்ரேஷனில் இருக்கற பல்லடம் தொகுதில இருக்க கட்சிக்காரங்களுக்கு
வீடு ஒதுக்கலைன்னு, விரக்தில
இருக்காங்களாம்,''

''இதேபோல, திருப்பூர் யூனியன்ல இருக்கற பஞ்சாயத்துக்களையும் புறக்கணிச்சுட்டாங்கன்னு கட்சிக்குள்ள அதிருப்தி அலை பலமா வீசுதாம். அதிலும், மாவட்ட நிர்வாகிங்க சிலரு, தலா, ஒரு லட்சம் ரூபாய் வரைக்கும் வாங்கிட்டுத்தான், கட்சிக்காரங்களுக்கு வீடு ஒதுக்கியதாக ஒரு பேச்சு,'' என்றாள் மித்ரா.

''ஆட்களை பிடிக்க முடியாம சூரிய கட்சிக்காரங்க திக்குமுக்காடிய காமெடி தெரியுமாடி,''

''அதென்னங்க்கா, கூத்து?''

''காங்கயம் ரோட்டுல, அக்கட்சி தலைவரோட கூட்டம் நடந்தது தெரியும்தானே. இதுக்கு கூட்டம் சேர்க்க, ராயபுரம் பகுதியில் மக்களை தயார் செய்து இருந்தாங்க. ஆனா, தலைக்கு, 500 ரூபாய் கொடுத்தாதான் வேனில் ஏறுவோம்னு, அடம் பிடிச்சிருக்காங்க,''

''கூட்டம் முடிஞ்சதும் தரோம்னு, நிர்வாகிகள் சொன்னதுக்கு, 'உங்களை எல்லாம் நம்ப முடியாதுனு,' கறாராக சொன்னதால, 300 ரூபா கொடுத்துட்டு கூட்டிட்டு போனாங்களாம். அதிலயும், சிலர் பணம் கம்மியா இருக்குதுன்னு, 'ரிவர்ஸ் கீர்' எடுத்து போயிட்டாங்களாம்,'' சிரித்தாள் சித்ரா.

''எலக் ஷன் முடியறதுக்குள் இன்னும் என்னனென்ன கூத்து நடக்கப்போகுதோ...'' சொன்ன மித்ரா, ''அக்கா, காங்கயம் முனிசிபாலிட்டியில, 'உங்க பில்டிங் வரியை 'ரிவைஸ்' பண்ணனும்னு சொல்லி, பல ஆயிரங்களை கறந்திடறாங்களாம். இதுல, கட்சி பாகுபாடு ஏதும் பார்க்காமல் எல்லார்த்துக்கிட்டயும், 'வரி' போட்டுத்தள்றாங்க,''

''இதனால, காங்கயத்தில எங்க பார்த்தாலும், இந்த புலம்பல் சத்தம் ஓவரா கேட்குது. அதிகாரிக்கும் பங்கு போறதால, அவரும் கண்டுக்கறதில்லையாம். அதிலும், 'வருண'மான ஒருத்தர், ஓவரா ஆட்டம் போடறாராம்,'' என்றாள்.

''ஏன், ஒருத்தரும் கேட்க மாட்டாங்களா... இதேமாதிரி, அவிநாசி, பழங்கரையில, டி.டி.சி.பி., அப்ரூவல் செய்ய இஷ்டத்துக்கு பணம் வாங்கினாங்க. ஆவேசப்பட்ட ஒருத்தர், கிளார்க்கை, லஞ்ச ஒழிப்பு துறையில மாட்டி விட்டுட்டாரு,''

''ஆனா, அதுக்கு மூல காரணமாக இருந்த அதிகாரி 'எஸ்கேப்' ஆயிட்டார். அதே பஞ்சாயத்தில 'நிழல்' அதிகாரம் நடப்பதால, மக்கள் 'செம காண்டுல' இருக்காங்களாம்,'' என்றாள் சித்ரா

''அக்கா... அங்க மட்டுமில்ல, எங்கெல்லம் லேடீஸ் தலைவராக இருக்காங்களோ, அங்கெல்லாம் இதே நிலைமைதான்,''

''இட ஒதுக்கீடு வந்தும், இப்படி பண்ணினா, அப்புறம் எப்படி?'' சலித்து கொண்ட சித்ரா, ''ஓ.கே., மித்து, இறங்கிக்கோ,'' என அவள் வீட்டு முன்
வண்டியை நிறுத்தினாள்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X