வெளியேறும் என்.ஆர்.காங்கிரஸ் ; துணை போகும் தி.மு.க.,: புதுச்சேரியில் அரங்கேறும் தடாலடி அரசியல்

Updated : மார் 03, 2021 | Added : மார் 03, 2021 | கருத்துகள் (59)
Share
Advertisement
புதுச்சேரி: பா.ஜ., கூட்டணியில் இருந்து வெளியேற, என்.ஆர். காங்கிரஸ் முடிவு செய்துள்ளதால், சுறுசுறுப்பு அடைந்துள்ள தி.மு.க.,வினர், ரகசிய பேச்சை துவக்கியுள்ளனர்.தமிழகத்தை பின்பற்றி, புதுச்சேரியிலும், காங்., - தி.மு.க., கட்சிகள் இடையே கூட்டணி உள்ளது. இருப்பினும், காங்., ஆட்சியாளர்களால், தாங்கள் புறக்கணிக்கப்பட்டதாக, தி.மு.க.,வினர் மிகுந்த அதிருப்தி அடைந்துள்ளனர்.சமீபத்தில், காங்.,
D.M.K,DMK,தி.மு.க,திராவிட முன்னேற்றக் கழகம், புதுச்சேரி, என்ஆர் காங்கிரஸ்,  ரங்கசாமி, திமுக,


புதுச்சேரி: பா.ஜ., கூட்டணியில் இருந்து வெளியேற, என்.ஆர். காங்கிரஸ் முடிவு செய்துள்ளதால், சுறுசுறுப்பு அடைந்துள்ள தி.மு.க.,வினர், ரகசிய பேச்சை துவக்கியுள்ளனர்.

தமிழகத்தை பின்பற்றி, புதுச்சேரியிலும், காங்., - தி.மு.க., கட்சிகள் இடையே கூட்டணி உள்ளது. இருப்பினும், காங்., ஆட்சியாளர்களால், தாங்கள் புறக்கணிக்கப்பட்டதாக, தி.மு.க.,வினர் மிகுந்த அதிருப்தி அடைந்துள்ளனர்.சமீபத்தில், காங்., கூட்டணியில் இருந்து விலக வேண்டும்; தனியாகவோ அல்லது வேறு கட்சிகளுடன் கூட்டணி அமைத்தோ, சட்டசபை தேர்தலை சந்திக்க வேண்டும் என, கட்சி தலைமையிடம், புதுச்சேரி தி.மு.க., நிர்வாகிகள் முறையிட்டனர்.

வெளியேறும் என்.ஆர். காங்கிரஸ் துணை போகும் தி.மு.க., புதுச்சேரியில் தடாலடி

புதுச்சேரி தி.மு.க.,வினரின் விருப்பத்திற்கு, கட்சி தலைமை சம்மதம் தெரிவித்ததை தொடர்ந்து, முன்னாள் மத்திய அமைச்சர் ஜெகத்ரட்சகன் தலைமையில், தி.மு.க.,வினர் புயல் வேகத்தில் தேர்தல் பணிகளை துவக்கினர். என்.ஆர். காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்து போட்டியிடும் திட்டத்துடன், அக்கட்சியின் தலைவர் ரங்கசாமியுடன் பேச்சு நடத்தினர். கூட்டணியில் ஏற்பட்டுள்ள மோதல் தொடர்பாக, தி.மு.க., தலைவர் ஸ்டாலினிடம் ராகுல் பேசினார். இதை தொடர்ந்து, தமிழகத்திலும், புதுச்சேரியிலும், காங்., - தி.மு.க., கூட்டணி தொடரும் எனக்கூறி, கூட்டணி உரசலுக்கு, ஸ்டாலின் முற்றுப்புள்ளி வைத்தார்.


latest tamil news




இந்நிலையில், புதுச்சேரியில், பா.ஜ., - அ.தி.மு.க., கூட்டணியில் இடம் பெற்றுள்ள, ரங்கசாமியின் என்.ஆர். காங்கிரஸ் கட்சி, முதல்வர் வேட்பாளர், தொகுதி பங்கீடு போன்ற விஷயங்களில் அதிருப்தி அடைந்துள்ளது. அதனால், கூட்டணியில் இருந்து வெளியேற, ரங்கசாமி முடிவு செய்துள்ளார். இந்த தகவல் வெளியானவுடன், புதுச்சேரி தி.மு.க., தரப்பு சுறுசுறுப்படைந்துள்ளது. என்.ஆர். காங்., தலைவர் ரங்கசாமியுடன் ரகசிய பேச்சை துவக்கி விட்டனர். தி.மு.க., தலைமை சம்மதிக்கும் பட்சத்தில், புதுச்சேரியில் புதிய கூட்டணி உருவாகும் வாய்ப்பு பிரகாசமாகி உள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (59)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தல புராணம் - மதுரை,இந்தியா
04-மார்-202102:56:17 IST Report Abuse
தல புராணம் நாராயணசாமி குலுங்கி குலுங்கி சிரிக்கிறார்.. ரங்கசாமி குலுங்கி குலுங்கி அழுறார்.. பண்டிசெரி ஹமாரான்னு கூவுன சகுனியோ, நல்லவேளை மீசை வளர்க்கலைன்னு கம்முன்னு இருக்காராம்..
Rate this:
Cancel
தல புராணம் - மதுரை,இந்தியா
04-மார்-202102:53:28 IST Report Abuse
தல புராணம் இது பாஜக மேலே காண்டானதாலே ரங்கசாமி விலகி போகல்லையாம்.. காங்கிரஸ் மேலே காண்டானதாலே திமுக இவரை இழுக்குதாம்..
Rate this:
Cancel
தல புராணம் - மதுரை,இந்தியா
04-மார்-202102:39:53 IST Report Abuse
தல புராணம் சொக்கா இதென்ன சோதனை.. பொங்ங்க வெக்கிறதுக்கு முன்னாடியே சட்டி ஒடைஞ்சி போச்சே சொக்கா
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X