பொது செய்தி

தமிழ்நாடு

தேர்வின்றி 10ம் வகுப்புக்கு மார்க் எப்படி? விதிமுறை தெரியாமல் பள்ளிகள் குழப்பம்!

Added : மார் 03, 2021 | கருத்துகள் (11)
Share
Advertisement
சென்னை: பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு, தேர்வு இன்றி மதிப்பெண் நிர்ணயிப்பது எப்படி என, உரிய விதிகளை முன்கூட்டியே அறிவிக்க வேண்டும் என, பெற்றோரும், பள்ளி நிர்வாகிகளும் வலியுறுத்தி உள்ளனர்.கொரோனா தொற்று பரவலால் மூடப்பட்ட பள்ளிகள், எட்டு மாதங்களுக்குப் பின், ஜனவரியில் மீண்டும் திறக்கப்பட்டன.ஆனால், பாடங்களை முடிக்கும் முன், சட்டசபை தேர்தல் வந்து விட்டதால், 10ம் வகுப்பு
தேர்வு, 10ம் வகுப்பு, மார்க், விதிமுறை, பள்ளிகள் குழப்பம்

சென்னை: பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு, தேர்வு இன்றி மதிப்பெண் நிர்ணயிப்பது எப்படி என, உரிய விதிகளை முன்கூட்டியே அறிவிக்க வேண்டும் என, பெற்றோரும், பள்ளி நிர்வாகிகளும் வலியுறுத்தி உள்ளனர்.

கொரோனா தொற்று பரவலால் மூடப்பட்ட பள்ளிகள், எட்டு மாதங்களுக்குப் பின், ஜனவரியில் மீண்டும் திறக்கப்பட்டன.ஆனால், பாடங்களை முடிக்கும் முன், சட்டசபை தேர்தல் வந்து விட்டதால், 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 1க்கு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது. தேர்வின்றி, மாணவர்கள் தேர்ச்சி பெற்றதாக சான்றிதழ் வழங்க, பள்ளி கல்வித்துறையை, அரசு அறிவுறுத்தியுள்ளது. இந்த உத்தரவை எப்படி செயல்படுத்துவது என்பதற்கான, வழிகாட்டுதல்கள் இன்னும் அறிவிக்கப்படவில்லை.

கடந்த கல்வி ஆண்டிலும், 10ம் வகுப்பு பொது தேர்வு ரத்தானது. அப்போது, காலாண்டு, அரையாண்டு மதிப்பெண்ணை கணக்கிட்டு, சான்றிதழ் வழங்கப்பட்டது.இந்த ஆண்டில், காலாண்டு, அரையாண்டு தேர்வோ, மாதிரி தேர்வோ நடத்தப்படவில்லை. தற்போது, எந்த தேர்வை வைத்து, 10ம் வகுப்பு மதிப்பெண்ணை நிர்ணயிப்பது என, பள்ளிகள் குழப்பம் அடைந்து உள்ளன.அசாதாரண சூழலால் தேர்வை நடத்த முடியாத நிலை உள்ளதாக, அரசாணை பிறப்பிக்கப்பட்டு உள்ளதால், பள்ளி அளவில் கூட தேர்வை நடத்த முடியாத நிலைஏற்பட்டுள்ளது.

ஒரு வேளை ஒன்பதாம் வகுப்பில், காலாண்டு, அரையாண்டு தேர்வு மதிப்பெண் கணக்கிடலாம் என்றால், அந்த தேர்வை, தற்போதைய கொரோனா பாதிப்பு கால அனுபவங்களுடன் ஒப்பிட முடியாது. சில மாணவர்கள் ஒன்பதாம் வகுப்பு தான் என, சாதாரணமாக படித்து தேர்வு எழுதியிருப்பர்.அவர்கள், 10ம் வகுப்பில் அதிக மதிப்பெண் எடுக்க வேண்டும் என, திட்டமிட்டு தயாராகியிருக்கலாம். அவர்களுக்கு, ஒன்பதாம் வகுப்பில் பெற்ற குறைந்த மதிப்பெண்ணை வழங்க முடியாது.


latest tamil news



இதுபோன்று பல்வேறு குழப்பங்கள் உள்ளதால், யாருக்கும் பாதிப்பு இல்லாத வகையில், மதிப்பெண்களை நிர்ணயிக்கும் முறையை சரியாக ஆய்வு செய்து அறிவிக்க வேண்டுமென, அரசு தேர்வு துறைக்கு பெற்றோரும், ஆசிரியர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement




வாசகர் கருத்து (11)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Arul. K - Hougang,சிங்கப்பூர்
04-மார்-202106:56:04 IST Report Abuse
Arul. K மாணவரின் வீட்டில் எத்தனை வாக்கு இருக்கிறதோ அதற்க்கு தகுந்தார் போல மதிப்பெண் (போடலாம்) போடுவார்கள்.
Rate this:
Cancel
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
03-மார்-202117:32:46 IST Report Abuse
J.V. Iyer வேறு என்ன லாட்டரி முறைதான். இல்லாவிட்டால் யார் அதிகம் பள்ளிக்கு பணம் தருகிறார்களோ அவர்களுக்கு நிறைய மார்க். தமிழ் நாட்டில் படித்த யாருக்கும் இனி வெளியில் வேலை கிடைப்பது குதிரைக்கொம்பு. தரம் தாழ்ந்த அரசு முடிவு.
Rate this:
Cancel
03-மார்-202117:25:11 IST Report Abuse
வாரணம் ஆயிரம் ஒரு வருடமாக பள்ளிக்கூடம் போகாமல் பாடமும் சொல்லிக் கொடுக்காமல் ஆசிரியர்கள் சம்பளம் வாங்கும்போது மார்க் போடுவது என்ன பெரிய கஷ்டம்???
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X