அரசியல் செய்தி

தமிழ்நாடு

'பழுத்த அனுபவம் உள்ளவர்கள் ஓட்டு, உங்கள் கட்சிக்கு கிடைக்காதுன்னு சொல்ல வர்றீங்களா...'

Updated : மார் 03, 2021 | Added : மார் 03, 2021 | கருத்துகள் (29)
Share
Advertisement
தமிழகத்தில், 80 வயதிற்கு மேற்பட்டோர், மாற்றுத்திறனாளிகள், 15 வகையான அரசு அலுவலர்கள் என, 30 லட்சம் பேர் தபால் ஓட்டுகள் அளிக்கலாம் என, தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இதை, அதிகாரிகள் துணையுடன், ஆளும்கட்சியினர் கைப்பற்ற முயற்சிக்கலாம்.-தி.மு.க., - எம்.பி., இளங்கோ'பழுத்த அனுபவம் உள்ளவர்கள் ஓட்டு, உங்கள் கட்சிக்கு கிடைக்காதுன்னு சொல்ல வர்றீங்களா... அதிகாரிகள் துணையோடு ஓட்டுச்
காங்., முன்னாள் நிதியமைச்சர், சிதம்பரம், விடுதலை சிறுத்தைகள்,திருமாவளவன், பா.ஜ.,  இல கணேசன், தமிழக வணிகர் சங்கங்கள் பேரமைப்பு, விக்ரமராஜா, தமிழக வருவாய்த் துறை, அமைச்சர் உதயகுமார், தி.மு.க., - எம்.பி., இளங்கோ

தமிழகத்தில், 80 வயதிற்கு மேற்பட்டோர், மாற்றுத்திறனாளிகள், 15 வகையான அரசு அலுவலர்கள் என, 30 லட்சம் பேர் தபால் ஓட்டுகள் அளிக்கலாம் என, தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இதை, அதிகாரிகள் துணையுடன், ஆளும்கட்சியினர் கைப்பற்ற முயற்சிக்கலாம்.
-தி.மு.க., - எம்.பி., இளங்கோ


'பழுத்த அனுபவம் உள்ளவர்கள் ஓட்டு, உங்கள் கட்சிக்கு கிடைக்காதுன்னு சொல்ல வர்றீங்களா... அதிகாரிகள் துணையோடு ஓட்டுச் சாவடியைக் கைப்பற்றுவாங்கன்னு உங்களுக்கு எப்படிங்க தெரியுது... பாம்பின் கால் பாம்பு அறியுமோ...' என, கூறத் தோன்றும் வகையில், தி.மு.க., - எம்.பி., இளங்கோ பேச்சு



வரும் தேர்தலில், அ.தி.மு.க., வெற்றியை தடுக்க, தி.மு.க.,வினர் பல தில்லுமுல்லுகளை செய்வர். அதை முறியடிக்க வேண்டும்.
-தமிழக வருவாய்த் துறை அமைச்சர் உதயகுமார்


'தில்லுமுல்லு செய்வர் என தெரிந்த உங்களுக்கு, அதை தடுக்கத் தெரியாதா...' என, கேட்கத் தோன்றும் வகையில், தமிழக வருவாய்த் துறை அமைச்சர் உதயகுமார் பேச்சு



தமிழகத்தில் மட்டும், ஒரு கோடி வியாபாரிகள் உள்ளனர். வரும் சட்டசபை தேர்தலில் தமிழகத்தின் வெற்றி, தோல்வியை நிர்ணயிப்பது வியாபாரிகள் தான் என்பதை, அரசியல் கட்சியினர் கருத்தில் கொள்ள வேண்டும்.
-தமிழக வணிகர் சங்கங்கள் பேரமைப்பு தலைவர் விக்ரமராஜா


'அப்போ, நெசவாளர்கள், கூலித் தொழிலாளர்கள், கல்லுாரி மாணவர்கள், நடுநிலையாளர்கள் ஓட்டுகள் எல்லாம், வீணாகத் தான் போகின்றனவா...' என, கிண்டலாக கேட்கத் தோன்றும் வகையில், தமிழக வணிகர் சங்கங்கள் பேரமைப்பு தலைவர் விக்ரமராஜா பேட்டி



தமிழகத்தின் மூத்த அரசியல் தலைவர் கருணாநிதியின் மகன் ஸ்டாலின், பிரதமர் பதவிக்கு உண்டான மரியாதை இன்றி பேசுகிறார். தமிழகத்திற்கு ஒரு முறை வந்த பிரதமர் மோடி, தி.மு.க., பற்றி மோடி சூசகமாக பேசினார். ஆனால், பிரதமர் குறித்து என்ன பேசுவது என தெரியாமல் பேசுகின்றனர்.
-பா.ஜ., முன்னாள் மாநில தலைவர் இல கணேசன்


'கருணாநிதியின் மகனாக இருப்பதால் தான் அப்படி பேசுகிறாரோ என்ற சந்தேகம் வருகிறது...' என, கூறத் தோன்றும் வகையில், பா.ஜ., முன்னாள் மாநில தலைவர் இல கணேசன் பேச்சு



தமிழகத்தை விட, மேற்கு வங்கத்தில், 60 இடங்கள் தான் அதிகம். ஆனால், தமிழகத்தில், ஒரு கட்டமாக தேர்தல்; மேற்கு வங்கத்தில், எட்டு கட்டங்களாக நடத்தப்படுகிறது. இதைப் பார்க்கும்போது, மத்திய அரசின் கைப்பாவையாக, தேர்தல் ஆணையம் செயல்படுகிறதோ என்ற ஐயம் ஏற்படுகிறது.
-விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன்


'உங்களைப் போன்ற அறிவுஜீவிகளுக்கு கூட, மேற்கு வங்கத்தில் ஏன், எட்டு கட்டங்களாக தேர்தல் நடத்தப்படுகிறது என்பது தெரியவில்லை என்றால், உங்கள் கட்சியினர் பாடு கஷ்டம் தான்...' என, சொல்லத் தோன்றும் வகையில், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் பேச்சு



இட ஒதுக்கீடு என்ற முறையை முதலில் கொண்டு வந்தது காங்கிரஸ் தான். அதனால், இட ஒதுக்கீட்டை ஆதரிக்கிறோம்; உள் ஒதுக்கீட்டை எதிர்க்கிறோம்.
காங்., முன்னாள் நிதியமைச்சர் சிதம்பரம்


latest tamil news




'நீங்கள் ஆதரித்தாலும், எதிர்த்தாலும், இட ஒதுக்கீடு, உள் ஒதுக்கீடு தவிர்க்க முடியாததாகி விட்டது...' என, சொல்லத் துாண்டும் வகையில், காங்., முன்னாள் நிதியமைச்சர் சிதம்பரம் பேச்சு

Advertisement




வாசகர் கருத்து (29)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
iconoclast - Surrey,யுனைடெட் கிங்டம்
04-மார்-202105:57:55 IST Report Abuse
iconoclast அவங்களுக்குக்காவது பரவாயில்லை பழுத்த அனுபவம் உள்ளவர்கள் வாக்கு தான் கிடைக்காது 🤣🤣
Rate this:
NandaIndia, ஹிந்து என்று சொல்லி தலை நிமிர்வோம்உங்களுக்கு டெபொசிட்டே கிடைக்காதே. அப்புறம் என்ன. ஹா ஹா ஹா....
Rate this:
iconoclast - Surrey,யுனைடெட் கிங்டம்
04-மார்-202117:25:26 IST Report Abuse
iconoclastயாரு பிஜேபியை தானே சொல்ற..ஏன் உண்மையை வெளிப்படையா சொல்ற 🤣🤣🤣...
Rate this:
NandaIndia, ஹிந்து என்று சொல்லி தலை நிமிர்வோம்நா சொன்னதை புரிஞ்சுக்கற அளவுக்கு கூட உங்களுக்கு அறிவு இல்லன்னு எனக்கு தெரியாம போச்சே. இப்பிடி வெளிப்படையா அத காமிச்சு ஏன் அசிங்கப்படுறீங்க. ஹா ஹா ஹா....
Rate this:
Cancel
r.sundaram - tirunelveli,இந்தியா
03-மார்-202118:21:40 IST Report Abuse
r.sundaram , சென்னையில் திமுக போட்ட ஆட்டம். எல்லோரும் பயந்து ஓடினார்கள் நினைவில்லை. காலம் மாறிவிட்டதால் ஞாபகம் இல்லையோ என்னவோ.
Rate this:
Cancel
periasamy - Doha,கத்தார்
03-மார்-202114:36:20 IST Report Abuse
periasamy பா.ஜ., முன்னாள் மாநில தலைவர் இல கணேசன், மோடி திமுகாவினரை மிக மிக மோசமான வார்த்தைகளில் பேசியுள்ளார் வட இந்தியர்கள் தமிழர்களை பற்றி தரக்குறைவாக பேச மோடிக்கு அருகதை கிடையாது தமிழகம் அமைதி பூங்கா என்றால் திமுகாவினர் உள்படத்தான்
Rate this:
M Ramachandran - Chennai,இந்தியா
03-மார்-202116:43:54 IST Report Abuse
M  Ramachandranஏன் திருட்டு தீமூக்கா மட்டும் வடஇந்தியரான மோடியை கண்டபடி பேச உங்களுக்கு பட்டயம் எழுதி கொடுத்துள்ளதா?...
Rate this:
Balaji - Chennai,இந்தியா
04-மார்-202110:43:31 IST Report Abuse
Balajiஇல கணேசன் அப்புடி என்ன பேசுனார்னு ஒரு சாம்பிள் ப்ரூப்வோட உடு நாயனா.. அப்பத்தா மக்களுக்கு புரியும்.....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X