அரசியல் செய்தி

தமிழ்நாடு

மார்ச் 11ல் திமுக தேர்தல் அறிக்கை; ஸ்டாலின் அறிவிப்பு

Updated : மார் 03, 2021 | Added : மார் 03, 2021 | கருத்துகள் (44)
Share
Advertisement
சென்னை: திமுக.,வின் தேர்தல் அறிக்கை வரும் மார்ச் 11-ம் தேதி வெளியிடப்படும் என அக்கட்சி தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.தமிழகத்தில் வரும் ஏப்ரல் 6-ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதன் ஓட்டு எண்ணிக்கை மே 2-ல் நடக்கிறது. இதற்காக அரசியல் கட்சிகள் கூட்டணி பேச்சுவார்த்தை, பிரசாரம் என தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு உள்ளிட்ட விஷயங்களை
DMK, Stalin, ElectionPromise, திமுக, ஸ்டாலின், தேர்தல், வாக்குறுதி

சென்னை: திமுக.,வின் தேர்தல் அறிக்கை வரும் மார்ச் 11-ம் தேதி வெளியிடப்படும் என அக்கட்சி தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் வரும் ஏப்ரல் 6-ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதன் ஓட்டு எண்ணிக்கை மே 2-ல் நடக்கிறது. இதற்காக அரசியல் கட்சிகள் கூட்டணி பேச்சுவார்த்தை, பிரசாரம் என தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு உள்ளிட்ட விஷயங்களை முடிவு செய்ததும் தேர்தல் அறிக்கையை வெளியிட உள்ளன. இந்நிலையில் திமுக.,வின் தேர்தல் அறிக்கை வரும் மார்ச் 11-ம் தேதி வெளியிடப்படும் என அக்கட்சி தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.


latest tamil news


இது குறித்து அவர் மேலும் கூறியிருப்பதாவது: தமிழக மக்களின் மனங்களை கவரும் வகையில் தேர்தல் அறிக்கை இருக்கும். தமிழக மக்களின் விடியலுக்கான திட்டங்களுடன் தேர்தல் அறிக்கை உருவாக்கப்பட்டுள்ளது. மக்களால் மக்களுக்காவே உருவான திமுக.,வின் தேர்தல் அறிக்கை, தேர்தலில் கதாநாயகனாக விளங்கும். மக்களின் குறைகளை தீர்க்கவும், அவர்களின் வாழ்வை மேம்படுத்தும் வகையிலும் தயாரிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (44)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Modikumar - West Mambalam,இந்தியா
03-மார்-202120:28:24 IST Report Abuse
Modikumar என்னதான் ஆடினாலும் திருச்சபை முன்னேற்ற கழகமும், திராவிட முஸ்லீம் கழகமும் ஆட்சி அமைக்கவே முடியாது.
Rate this:
Cancel
03-மார்-202117:48:17 IST Report Abuse
theruvasagan ஆலோசகன் குடுக்குறதோ இல்ல யாரோட குயுக்தி புத்தியில உதிச்சுதோ.எல்லா ஐடியாவும் அறிவிச்ச உடனேயே எதிரணி அப்படியே ஹைஜாக் பண்ணி அத உடனடியா அமல் படுத்திடுது. இதுல எதுவும் பொறுப்பில்லாம காசை வாரிவிடற சமாசாரம் தவிர பொருளாதாரம் உயர உருப்படியான யோசனைகள் கிடையாது. ஆக ஆளும் கட்சி செஞ்சுட்டுவருகிற காரியம் என்னன்னா அவங்க அடுத்த தடவை ஆட்சியைப் பிடிக்க முடியாதுன்னு தெரியும் பட்சத்தில் வரப்போறவனுக்கு கஜானவ காலி செய்யற ஏகப்பட்ட கண்ணி வெடிகளை பொதைச்சுட்டு போகிற மாதிரி தெரியுது. எனவே வருபவன் எங்க கால வெச்சாலும் வெடிச்சு சின்னாபின்னம்தான். எப்படிப் பார்த்தாலும் தன் வினை தன்னையே சுடும் என்பது நிரூபணம் ஆகப்போகுது.
Rate this:
Cancel
Nellai tamilan - Tirunelveli,இந்தியா
03-மார்-202117:21:52 IST Report Abuse
Nellai tamilan 'காலைக்கடன், பெத்த கடன் & வளர்த்த கடன் அனைத்தும் தி மு க ஆட்ச்சிக்கு வந்தவுடன் தள்ளுபடி' னு பிகே எழுதி குடுக்காம இருக்கணும். சுடலை அதையும் யோசிக்காம வந்து வாசிப்பார்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X