அரசியல் செய்தி

தமிழ்நாடு

சசிகலாவை அதிமுகவில் இணைக்க வாய்ப்பு இல்லை: அமைச்சர் ஜெயக்குமார் உறுதி

Updated : மார் 03, 2021 | Added : மார் 03, 2021 | கருத்துகள் (74)
Share
Advertisement
சென்னை: சசிகலாவை அதிமுகவில் இணைப்பதற்கான எந்த வாய்ப்பும் இல்லை என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.சென்னையில் நிருபர்களை சந்தித்த அமைச்சர் ஜெயக்குமார் கூறியதாவது: சட்டசபை தேர்தலில் போட்டியிடுவதற்கு விருப்ப மனு தாக்கல் கடைசி நாளான இன்று கூடிய கூட்டம் மூலம் கட்சி எழுச்சியாக உள்ளதை பார்க்கலாம். எம்.ஜி.ஆர், ஜெயலலிதா காலத்தில் இருந்த எழுச்சியை இப்போதும்
A.D.M.K, Sasikala, அ.தி.மு.க, சசிகலா, ஜெயக்குமார், admk,

சென்னை: சசிகலாவை அதிமுகவில் இணைப்பதற்கான எந்த வாய்ப்பும் இல்லை என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

சென்னையில் நிருபர்களை சந்தித்த அமைச்சர் ஜெயக்குமார் கூறியதாவது: சட்டசபை தேர்தலில் போட்டியிடுவதற்கு விருப்ப மனு தாக்கல் கடைசி நாளான இன்று கூடிய கூட்டம் மூலம் கட்சி எழுச்சியாக உள்ளதை பார்க்கலாம். எம்.ஜி.ஆர், ஜெயலலிதா காலத்தில் இருந்த எழுச்சியை இப்போதும் பார்க்க முடியும். எம்ஜிஆர், ஜெயலலிதா அலை காரணமாக எதிர்க்கட்சிகள் காணாமல் போகும். அனைத்து தொகுதிகளிலும் அதிமுக வெற்றி பெறும். அதிமுக ஆட்சி மீண்டும் மலர வேண்டும் என்ற நோக்கத்தில், தமிழக மக்களும், கட்சி தொண்டர்களும் செயல்படுகின்றனர்.


latest tamil news




எங்களை யாரும் நிர்பந்தம் செய்ய முடியாது. எங்கள் கட்சி உள்விவகாரங்களில் பா.ஜ., தலையிட்டது இல்லை. அமமுக, சசிகலாவையும் அதிமுகவில் இணைப்பதற்கான எந்த சாத்தியமும் இல்லை. இது தான் உறுதியான நிலை. எங்கள் தலைமையில் கூட்டணி என்பது எள்ளி நகையாடக்கூடியதாக உள்ளது. அதிமுக சிங்கங்கள் கூட்டம்.அமமுக குள்ளநரிகள் கூட்டம். தினகரன் கருத்தை நகைச்சுவையாக மக்கள் பார்ப்பார்கள்.

அதிமுக உள் விவகாரங்களில் தலையிடாத கொள்கையை தான் பா.ஜ., கடைபிடிக்கிறது. சசிகலா, தினகரனை சேர்ப்பது குறித்து யோசனையாக தெரிவித்திருக்கலாம். அதனை நாங்கள் நிராகரித்துவிட்டோம். சசிகலாவை இணைப்பது குறித்து முதல்வரிடம் அமித்ஷா எதையும் தெரிவிக்கவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (74)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Malick Raja - jeddah,சவுதி அரேபியா
04-மார்-202111:44:29 IST Report Abuse
Malick Raja யோக்கியனுக்கு அரசியலில் பணியாற்றவே முடியாது .. ஜெய குமார் போன்று அடிப்படை தகுதியாவது இருந்தால் மட்டுமே அரசியலில் கோலோச்சலாம் ..குறைந்த காலம் .. ஜெயகுமாரின் தந்தை சினிமா கொட்டகையில் டிக்கெட் கொடுக்கும் மேலாளர் .. இவரோ திரைப்படம் வீட்டில் திரையிட்டு வந்தவர் .. நள்ளிரவு காட்சிகளும் இருந்ததாம் .. இதெல்லாம் 1000% உண்மை.. வலைதள காணொளிகளில் வலைவீசாமலே காணமுடியும்.. கொயந்த எங்கேருக்குன்னு சொல்லிடுமான்னு செய்குமாரிடம் சொன்னால் போதும் எஸ்கேப்.
Rate this:
Cancel
Abdul Aleem - chennai,ஐக்கிய அரபு நாடுகள்
04-மார்-202110:40:13 IST Report Abuse
Abdul Aleem உன்னையே அம்மா அவர்கள் ஒதுக்கி வைத்தார்கள் நீ என் பின்ன உள்ள வந்தே
Rate this:
Cancel
Ram - Thanjavur,இந்தியா
04-மார்-202106:30:27 IST Report Abuse
Ram இவரோட குவா குவா ஸ்டோரி.... நாடே அறிஞ்ச விஷயம்
Rate this:
Srinivas - Chennai,இந்தியா
04-மார்-202110:45:41 IST Report Abuse
Srinivasசிரிப்பா சிரிச்சு வண்டவாளம் நாறியது. மானெங்கெட்ட கும்பல்...எந்த கேவலத்துக்கும் தயாரா இருக்கும் கூன்பாண்டி கொள்ளைக்கும்பல்....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X