கோல்கட்டா: மேற்குவங்கத்தில் பா.ஜ., 100 இடங்களுக்கும் மேல் வென்றால் நான் என் தொழிலையே விட்டு விடுகிறேன். ஐ-பேக்கையே விட்டு விடுகிறேன் என பிரபல அரசியல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர் விமர்சித்துள்ளார்.
மேற்குவங்கம் முதல்வர் மம்தா, திமுக தலைவர் ஸ்டாலின் உள்ளிட்டோருக்கு தேர்தல் வியூகங்களை வகுத்து வருபவர், பிரபல அரசியல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர். இவரின் ஐ-பேக் நிறுவனம் பல்வேறு தேர்தல் வியூகங்களை வகுத்து வருகிறார். இவர் தற்போது பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங்கின் முதன்மை ஆலோசகராகவும் நியமிக்கப்பட்டுள்ளார். இவர், இந்தியா டுடே டிவி சேனலுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது: மேற்குவங்கத்தில் பா.ஜ., 100 இடங்களுக்கும் மேல் வென்றால் நான் என் தொழிலையே விட்டு விடுகிறேன். ஐ-பேக்கையே விட்டு விடுகிறேன்.

உங்கள் வியூகம் உ.பி.,யில் தோற்றது. அங்கு நாங்கள் என்ன செய்ய விரும்பினோமோ அதைச் செய்ய முடியவில்லை. ஆனால் மே.வங்கத்தில் மம்தா, எங்களுக்கு நிறைய சுதந்திரம் அளித்துள்ளார். பா.ஜ., போடும் சில கூட்டங்களில் 200-300 பேர் கூட தேறுவதில்லை, மோடி கூட்டத்துக்கு மட்டும்தான் கூட்டம் வருகிறது. நிறைய பேர் திரிணமுல் காங்.,லிருந்து பா.ஜ.,வுக்குத் தாவுவதும், மற்ற கட்சி தலைவர்களிடம் ஆசைவலை விரிப்பது பா.ஜ.,வின் உத்தி. பணம், டிக்கெட், பதவி, அதனால் வெளியேறுபவர்கள் குறித்து எந்த ஆச்சரியமும் இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE