மே.வங்கத்தில் பா.ஜ., வெற்றி பெற்றால் தொழிலை விட்டு விடுகிறேன்: பிரசாந்த் கிஷோர்

Added : மார் 03, 2021 | கருத்துகள் (113)
Share
Advertisement
கோல்கட்டா: மேற்குவங்கத்தில் பா.ஜ., 100 இடங்களுக்கும் மேல் வென்றால் நான் என் தொழிலையே விட்டு விடுகிறேன். ஐ-பேக்கையே விட்டு விடுகிறேன் என பிரபல அரசியல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர் விமர்சித்துள்ளார்.மேற்குவங்கம் முதல்வர் மம்தா, திமுக தலைவர் ஸ்டாலின் உள்ளிட்டோருக்கு தேர்தல் வியூகங்களை வகுத்து வருபவர், பிரபல அரசியல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர். இவரின் ஐ-பேக்
PrasanthKishor, பிரசாந்த் கிஷோர், பாஜக, கூட்டம், திரிணமுல், காங்கிரஸ்

கோல்கட்டா: மேற்குவங்கத்தில் பா.ஜ., 100 இடங்களுக்கும் மேல் வென்றால் நான் என் தொழிலையே விட்டு விடுகிறேன். ஐ-பேக்கையே விட்டு விடுகிறேன் என பிரபல அரசியல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர் விமர்சித்துள்ளார்.

மேற்குவங்கம் முதல்வர் மம்தா, திமுக தலைவர் ஸ்டாலின் உள்ளிட்டோருக்கு தேர்தல் வியூகங்களை வகுத்து வருபவர், பிரபல அரசியல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர். இவரின் ஐ-பேக் நிறுவனம் பல்வேறு தேர்தல் வியூகங்களை வகுத்து வருகிறார். இவர் தற்போது பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங்கின் முதன்மை ஆலோசகராகவும் நியமிக்கப்பட்டுள்ளார். இவர், இந்தியா டுடே டிவி சேனலுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது: மேற்குவங்கத்தில் பா.ஜ., 100 இடங்களுக்கும் மேல் வென்றால் நான் என் தொழிலையே விட்டு விடுகிறேன். ஐ-பேக்கையே விட்டு விடுகிறேன்.


latest tamil news


உங்கள் வியூகம் உ.பி.,யில் தோற்றது. அங்கு நாங்கள் என்ன செய்ய விரும்பினோமோ அதைச் செய்ய முடியவில்லை. ஆனால் மே.வங்கத்தில் மம்தா, எங்களுக்கு நிறைய சுதந்திரம் அளித்துள்ளார். பா.ஜ., போடும் சில கூட்டங்களில் 200-300 பேர் கூட தேறுவதில்லை, மோடி கூட்டத்துக்கு மட்டும்தான் கூட்டம் வருகிறது. நிறைய பேர் திரிணமுல் காங்.,லிருந்து பா.ஜ.,வுக்குத் தாவுவதும், மற்ற கட்சி தலைவர்களிடம் ஆசைவலை விரிப்பது பா.ஜ.,வின் உத்தி. பணம், டிக்கெட், பதவி, அதனால் வெளியேறுபவர்கள் குறித்து எந்த ஆச்சரியமும் இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (113)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Anbuselvan - Bahrain,பஹ்ரைன்
06-மார்-202117:26:15 IST Report Abuse
Anbuselvan இவர் ஏன் தமிழகத்தில் திமுக வெற்றி பெறா விட்டால் எனது தொழிலையே விடுகிறேன் என சொல்ல மாட்டேங்கிறார்? சொன்னால் அது திரு ஸ்டாலினுக்கும் கழக தொண்டர்களுக்கும் நல்ல ஒரு ஊக்க சக்தியாக இருக்கும் அல்லவா?
Rate this:
Cancel
karthikeyan - karur,இந்தியா
06-மார்-202114:38:45 IST Report Abuse
karthikeyan இப்பவே விட்ருங்க அண்ணாச்சி .......
Rate this:
Cancel
r.sundaram - tirunelveli,இந்தியா
05-மார்-202118:40:06 IST Report Abuse
r.sundaram அதை நீங்க l செய்து விட்டால் இந்தியாவே உங்களை போற்றும். உங்களைப்போல் தவறானவர்களுக்கு வழிகாட்டும் பேர்வழிகள் இந்தியால இல்லாமல் போவது நல்லதே.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X