அரசியல் செய்தி

தமிழ்நாடு

மாற்றத்தை விரும்பும் நல்லவர்களுடன் கூட்டணி: கமல்

Updated : மார் 03, 2021 | Added : மார் 03, 2021 | கருத்துகள் (46)
Share
Advertisement
சென்னை: தமிழகத்தில் மாற்றத்தை விரும்பும் நல்லவர்கள் கூட்டணிக்கு வரலாம் என்றும், அவர்களுடன் கூட்டணி அமைப்பதாகவும் மக்கள் நீதி மையம் கட்சித்தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.மக்கள் நீதி மையம் கட்சித் தலைவர் கமல்ஹாசன், தேர்தல் பிரசாரத்தை துவங்கும் முன், செய்தியாளர்களிடம் கூறியதாவது: கூட்டணியில் தொகுதி பங்கீடு தொடர்பாக கட்சிகளுடன் பேசி வருகிறோம். இதுவரை 400க்கும்
MNM, KamalHaasan, Kamal, Ponraj, மக்கள் நீதி மய்யம், கமல்ஹாசன், கமல், பொன்ராஜ்

சென்னை: தமிழகத்தில் மாற்றத்தை விரும்பும் நல்லவர்கள் கூட்டணிக்கு வரலாம் என்றும், அவர்களுடன் கூட்டணி அமைப்பதாகவும் மக்கள் நீதி மையம் கட்சித்தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

மக்கள் நீதி மையம் கட்சித் தலைவர் கமல்ஹாசன், தேர்தல் பிரசாரத்தை துவங்கும் முன், செய்தியாளர்களிடம் கூறியதாவது: கூட்டணியில் தொகுதி பங்கீடு தொடர்பாக கட்சிகளுடன் பேசி வருகிறோம். இதுவரை 400க்கும் மேற்பட்ட விருப்ப மனுக்கள் வந்துள்ளன. இன்னும் மனுக்கள் வந்துக்கொண்டிருக்கின்றன. கூட்டணிக்கு இன்னும் கட்சிகள் வருகின்றன. முழுவதுமாக வந்ததும் கூட்டணிக்கான பெயர் வைக்கப்படும். ஆம்ஆத்மி உடனான கூட்டணி குறித்து அக்கட்சி தலைவர் கெஜ்ரிவாலுடனே பேசிவிடலாம். மாற்றத்தை விரும்பும் நல்லவர்கள் கூட்டணிக்கு வரலாம். எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவிக்க திட்டமிட்டது அனுமதி கிடைக்காமல் போனது.


latest tamil news


மக்கள் நீதி மையம் கட்சியின் துணைத்தலைவராக பொன்ராஜ் நியமிக்கப்பட்டுள்ளார். பின்னர், பொன்ராஜ் பேசியதாவது: இந்தியாவும், தமிழகமும் பல்வேறு பிரச்னைகளில் சிக்கியுள்ளன. 20 ஆண்டுகளுக்கு முன்னதாகவே அப்துல்கலாம் கண்ட கனவு நிறைவேறாமல் போனதற்கு மத்திய, மாநில அரசுகள் தான். அவரது கனவை நிறைவேற்ற அப்துல்கலாம் லட்சிய இந்தியா என்ற இயக்கத்தை துவங்கினோம். பின்னர் அதே பெயரில் இளைஞர்கள் சேர்ந்து கட்சியாக உருவாக்கினர். ஆனால், இன்றுவரையில் அந்த கட்சியை பதிவு செய்ய விடாமல் மத்திய அரசு செயல்பட்டு வருகிறது.


latest tamil news


ரஜினியோடு இணைந்து 3 ஆண்டுகளாக கொள்கை உருவாக்கத்தில் ஈடுபட்டேன். கமலை அரசியலுக்கு அழைத்ததாக அப்துல்கலாமே கூறினார். அப்போதும் கமல் அரசியலுக்கு வரவில்லை. சீரழிந்த தமிழகத்தை சீரமைப்பதற்காக தற்போது அரசியலுக்கு வந்துள்ளார். வரிக்கு இணையாக வருமானத்தை உருவாக்கும் செயல்திட்டங்களை செயல்படுத்த கமல் உறுதியளித்துள்ளார். சமூக நீதி, அரசியல் நீதி, பொருளாதார நீதி போன்றவைகளை வென்றால் தான் மக்களாட்சி வரும் என அப்துல்கலாம் கூறியது ம.நீ.மை கட்சிக்கு பொருந்தும். அனைத்து இளைஞர்களும் வாருங்கள் மாற்றத்தை உருவாக்குவோம். இவ்வாறு அவர் பேசினார்.

முன்னதாக மக்கள் நீதி மையத்தின் பெண்கள் நல்வாழ்வுக்கான செயல்திட்டங்கள், விளையாட்டு மேம்பாட்டிற்கான செயல்திட்டங்கள், இளைஞர் நலனுக்கான செயல்திட்டங்களை கமல்ஹாசன் வெளியிட்டார். அதில் உள்ள அம்சங்கள்:

Advertisement




வாசகர் கருத்து (46)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sankaseshan - mumbai,இந்தியா
05-மார்-202121:06:47 IST Report Abuse
sankaseshan இவன் காதல் மன்னன் இல்லை
Rate this:
Cancel
meenakshisundaram - bangalore,இந்தியா
04-மார்-202106:04:50 IST Report Abuse
meenakshisundaram அரசியலில் .நல்லவர் ' எங்கே இருக்கிறார்கள் இவருடன் கூட்டு சேர .அதெல்லாம் சினிமாலேதான் -நல்லவர் மற்றும் நம்மவர்
Rate this:
Cancel
Aarkay - Pondy,இந்தியா
04-மார்-202100:46:10 IST Report Abuse
Aarkay அண்டப்புளுகு ஆகாசப்புளுகு கலாம் ஐயா உயிரோடிருந்தால், எதனாலோ அடித்திருப்பார் அவர் பெயர் சொல்லி இவர்கள் புளுகும் புரட்டல்களை கேட்டால்...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X