'எமர்ஜென்சி' தவறு : ராகுல் ஒப்புதல் : டுவிட்டரில் டிரெண்டிங்

Updated : மார் 03, 2021 | Added : மார் 03, 2021 | கருத்துகள் (25)
Share
Advertisement
புதுடில்லி : காங்கிரஸ் ஆட்சியில் பாட்டி இந்திராவால் கொண்டுவரப்பட்ட ‛எமர்ஜென்சி' தவறானது என ராகுல் பேசிய விஷயம் டுவிட்டரில் டிரெண்ட் ஆனது. அமெரிக்காவில் உள்ள ‛கார்னெல்' பல்கலைக்கழக பேராசிரியரும், இந்தியாவின் முன்னாள் தலைமை பொருளாதார ஆலோசகருமான கவுசிக் பாசுவுடன் காங்., முன்னாள் தலைவரும், எம்.பி.யுமான ராகுல் ‛வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக கலந்துரையாடினார். அப்போது
Emergency, Rahul, KaushikBasu,

புதுடில்லி : காங்கிரஸ் ஆட்சியில் பாட்டி இந்திராவால் கொண்டுவரப்பட்ட ‛எமர்ஜென்சி' தவறானது என ராகுல் பேசிய விஷயம் டுவிட்டரில் டிரெண்ட் ஆனது.

அமெரிக்காவில் உள்ள ‛கார்னெல்' பல்கலைக்கழக பேராசிரியரும், இந்தியாவின் முன்னாள் தலைமை பொருளாதார ஆலோசகருமான கவுசிக் பாசுவுடன் காங்., முன்னாள் தலைவரும், எம்.பி.யுமான ராகுல் ‛வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக கலந்துரையாடினார். அப்போது ராகுல் கூறுகையில், 1975ல் என் பாட்டி இந்திராவால் அமல்படுத்தப்பட்ட ‛எமர்ஜென்சி' தவறானது. அது, முற்றிலும் பிழை. அது குறித்து, பாட்டி என்னிடம் பல முறை கூறி இருக்கிறார். எனினும் எமர்ஜென்சி காலத்தில் நடந்ததற்கும், தற்போது நம் நாட்டில் நடப்பதற்கும் இடையே, பல அடிப்படை வேறுபாடுகள் உள்ளன என்றார்.

'எமர்ஜென்சி' தவறு என்பதை காங்கிரஸின் ராகுலே ஒப்புக் கொண்டுள்ளார் என பலரும் அவரின் கருத்தை குறிப்பிட்டு டிரெண்ட் செய்தனர். இதனால் டுவிட்டரில் #Emergency, #Rahul, KaushikBasu ஆகிய ஹேஷ்டாக்குகளில் டிரெண்ட் ஆகின. இதுதொடர்பாக டுவிட்டரில் பதிவிட்ட சிலரின் கருத்து...


latest tamil news
கோடியில் ஒருமுறை, ராகுல் சரியாக பேசியிருக்கிறார். நம்ப முடியவில்லை, என்ன ஒரு மாற்றம்.

'எமர்ஜென்சி' தவறு என்பதை காங்கிரஸ் ஒப்புக் கொள்ள கிட்டத்தட்ட அரை நூற்றாண்டு ஆகி உள்ளது. பரவாயில்லை, இப்போதாவது ஒப்புக் கொண்டார்களே...

யாரும் செய்யாத தவறை ஏற்றுக் கொள்வதும், அதற்காக பகிரங்கமாக வருத்தப்படுவதும் எளிதல்ல. ஒருவர் அதைச் செய்யும்போது அவர்களின் ஈகோவை ஒதுக்கி வைக்க வேண்டும். முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கும் ஒரு சம்பவத்திற்கு பகிரங்கமாக மன்னிப்பு கேட்ட மற்றொரு சம்பவம் எனக்கு நினைவிருக்கிறது.

நேரு காலத்தில் தொடங்கி உங்கள் குடும்பம் மற்றும் உங்கள் கட்சியின் அதிக தவறுகளை ஏற்றுக் கொள்வதற்கான நேரம் இது ராகுல். நீங்கள் இந்த நாட்டை குழப்பம் செய்ததாக ஒப்புக் கொண்ட நேரம். அவசரநிலை என்பது உங்கள் "தவறுகளின்" நீண்ட வரிசையில் ஒன்றாகும்.

1976ல் ஏற்படுத்தப்பட்ட அவசர நிலை தவறு என இந்த நபர் இப்போது கூறியுள்ளதால் 1976ல் நமது அரசியலமைப்பில் செலுத்தப்பட்ட தவறுகளை சரி செய்ய அவர் பார்லிமென்ட்டின் இரு அவைகளிலும் ஒரு ஆதரவுடன் முன்வர வேண்டும்.

அவசரநிலை என்பது காங்கிரஸால் கொண்டு வரப்பட்ட மனித உரிமை மீறலாகும்.

நல்ல நகைச்சுவை. அவசரநிலையை இந்திரா எவ்வாறு விதித்தார் என்பது எங்களுக்கு இன்னும் நினைவிருக்கிறது. மறக்க மாட்டோம்.

இதுபோன்று பலரும் தங்களது கருத்துக்களை டுவிட்டரில் பதிவிட்டு வருவதால் #Emergency என்ற ஹேஷ்டாக் தேசிய அளவில் டிரெண்ட் ஆனது.

Advertisement
வாசகர் கருத்து (25)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Anand - chennai,இந்தியா
04-மார்-202114:39:52 IST Report Abuse
Anand அதைவிட நீயும் உன் கூட்டமும் இந்தியாவில் இருப்பது எமர்ஜென்சியை விட கொடுமை, மாபெரும் தவறு....
Rate this:
Cancel
M.COM.N.K.K. - Vedaranyam ,இந்தியா
04-மார்-202113:37:53 IST Report Abuse
M.COM.N.K.K. அன்றே மன்னித்தோம் அன்றே மறந்தோம்
Rate this:
Cancel
Srivilliputtur S Ramesh - Srivilliputtur,இந்தியா
04-மார்-202111:41:27 IST Report Abuse
Srivilliputtur S Ramesh முன்னாள் பிரதமர் சர்வாதிகாரி இந்திரா காந்தி கொண்டு வந்தது "மிசா" எமர்ஜென்சி அவசர சட்டம். இதே எமர்ஜென்ஸியை எதிர்த்து போராடிய "கட்டுமரம்" கருணாநிதி தான், அதைக்கொண்டு வந்த இந்திரா காந்தியோடு கூட்டு சேர்ந்து கொண்டு, "நேருவின் மகளே வருக நிலையான ஆட்சியை தருக "என்று இந்திரா காந்தியின் கால்களில் சாஷ்டாங்கமாக விழுந்து சேவித்து, காங்கிரஸோடு தேர்தல் கூட்டு வைத்துக்கொண்டு வைத்துக்கொண்டார்... பழைய வரலாறை யார் மறந்து போவார் ??
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X