ஆம்ஆத்மி தொடரவே மக்கள் விருப்பம்: கெஜ்ரிவால்

Updated : மார் 03, 2021 | Added : மார் 03, 2021 | கருத்துகள் (12)
Share
Advertisement
புதுடில்லி: டில்லி மாநகராட்சியின் 5 வார்டு இடைத்தேர்தலில் ஆம்ஆத்மி 4 இடங்களில் வெற்றி பெற்றது. இது மாநிலத்தில் ஆம்ஆத்மியே தொடர மக்கள் விரும்புவதை காட்டுவதாக அக்கட்சி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறியுள்ளார்.டில்லி மாநகராட்சியில் உள்ள சவுகான் பங்கர், ரோகினி, ஷாலிமர்பாக், திரிலோக்புரி மற்றும் கல்யாணபுரி ஆகிய 5 வார்டுகளில் கடந்த பிப்.,28ல் இடைத்தேர்தல் நடைபெற்றது. இந்த
AAP, ArvindKejriwal, MCD, Victory, ஆம்ஆத்மி, அரவிந்த் கெஜ்ரிவால், மாநகராட்சி தேர்தல், வெற்றி

புதுடில்லி: டில்லி மாநகராட்சியின் 5 வார்டு இடைத்தேர்தலில் ஆம்ஆத்மி 4 இடங்களில் வெற்றி பெற்றது. இது மாநிலத்தில் ஆம்ஆத்மியே தொடர மக்கள் விரும்புவதை காட்டுவதாக அக்கட்சி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறியுள்ளார்.

டில்லி மாநகராட்சியில் உள்ள சவுகான் பங்கர், ரோகினி, ஷாலிமர்பாக், திரிலோக்புரி மற்றும் கல்யாணபுரி ஆகிய 5 வார்டுகளில் கடந்த பிப்.,28ல் இடைத்தேர்தல் நடைபெற்றது. இந்த இடைத்தேர்தலின் ஓட்டு எண்ணிக்கை இன்று காலை துவங்கி, முடிவுகள் வெளியானது. இதில், 4 இடங்களில் ஆம்ஆத்மி கட்சியும், ஒரு இடத்தில் காங்கிரஸ் கட்சியும் வெற்றி பெற்றன. பா.ஜ., 5 இடத்திலும் தோல்வியை தழுவியது. வெற்றி குறித்து ஆம்ஆத்மி கட்சித் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் பேசியதாவது:


latest tamil news


இந்த வெற்றி, ஆம் ஆத்மி கட்சியின் பணியால் மக்கள் மகிழ்ச்சி அடைந்திருப்பதை காட்டுகிறது. 2015ம் ஆண்டு பொதுத்தேர்தலில் 70க்கு 67 இடங்களில் வென்றோம். 2020 தேர்தலில் 62 இடங்களில் வென்றோம். இப்போது மாநகராட்சி இடைத்தேர்தலில் 5ல் 4 இடங்களில் வென்றுள்ளோம். இதன்மூலம் ஆம்ஆத்மியே மாநிலத்தில் தொடர வேண்டும் என மக்கள் விரும்புவது தெரிகிறது. பா.ஜ., அனைத்து இடங்களில் தோற்றது, அவர்களின் 15 ஆண்டு பணியில் மக்கள் மிகவும் கவலை அடைந்ததை காட்டுகிறது. இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement




வாசகர் கருத்து (12)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தல புராணம் - மதுரை,இந்தியா
05-மார்-202103:40:52 IST Report Abuse
தல புராணம் அஞ்சுலே நாலு ஆம் ஆத்மீ, அஞ்சுலே ஒண்ணு காங்கிரஸ்.. அஞ்சுக்கு அஞ்சு முட்டை பாஜக.. கொக், கொக், கொக்,கொக், கொக் , முட்டை..
Rate this:
Cancel
P.MANIMARAN - keeranur,இந்தியா
04-மார்-202115:55:35 IST Report Abuse
P.MANIMARAN உங்களை போல் தமிழ் நாட்டுக்கு ஒருவர் வேண்டும் ஐயா . தமிழ்நாடு சரியில்லை .. வீட்டுக்கு ஒருவருக்கு வேலை இல்லை. நீங்கள் தான் தெய்வம்.
Rate this:
Cancel
Pandiyan - Chennai,இந்தியா
04-மார்-202109:07:38 IST Report Abuse
Pandiyan பிஜேபியின் விக்கட்டுகள் விழா ஆரம்பித்து விட்டன ...மக்கள் பிஜேபி தலைவர்கள் வாயால் வடைசுடுகிறார்கள் என்பதனை புரிய ஆரம்பித்து விட்டார்கள் ..
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X