அரசின் கருத்தை எதிர்ப்பது தேசத்துரோக குற்றமாகாது: உச்சநீதிமன்றம்

Updated : மார் 03, 2021 | Added : மார் 03, 2021 | கருத்துகள் (55)
Share
Advertisement
புதுடில்லி: மத்திய அரசின் கருத்துக்கு மாறாக குரல் கொடுப்பதும், எதிர்ப்பை தெரிவிப்பதும் தேசத்துரோக குற்றம் ஆகாது என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.ஜம்மு-காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தை 2019-ம் ஆண்டு ஆகஸ்ட் 5-ல் மத்திய அரசு ரத்து செய்து மாநிலத்தை இரு யூனியன் பிரதேசங்களாக பிரித்தது.இதற்கு அம்மாநில தேசிய மாநாட்டு கட்சி தலைவர் பரூக் அப்துல்லா, சீனா,
 அரசின் கருத்தை எதிர்ப்பது தேசத்துரோக குற்றமாகாது: உச்சநீதிமன்றம்

புதுடில்லி: மத்திய அரசின் கருத்துக்கு மாறாக குரல் கொடுப்பதும், எதிர்ப்பை தெரிவிப்பதும் தேசத்துரோக குற்றம் ஆகாது என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

ஜம்மு-காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தை 2019-ம் ஆண்டு ஆகஸ்ட் 5-ல் மத்திய அரசு ரத்து செய்து மாநிலத்தை இரு யூனியன் பிரதேசங்களாக பிரித்தது.

இதற்கு அம்மாநில தேசிய மாநாட்டு கட்சி தலைவர் பரூக் அப்துல்லா, சீனா, பாகிஸ்தான் உதவியுடன் காஷ்மீருக்கு மீண்டும் சிறப்பு அந்தஸ்தை வழங்க வைப்போம் என பேசி கண்டனம் தெரிவித்தார்.
இதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடரப்பட்டது. அதில் ஒரு அரசியல் கட்சி தலைவராக இருந்து கொண்டு நாட்டுக்கு விரோதமாக பேசுகிறார். இது தேசத் துரோகம். அவரது எம்.பி. பதவியை பறிக்க வேண்டும் என கூறப்பட்டது.


latest tamil news


மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம் கூறியது, அரசின் கருத்துக்கு எதிராக குரல் எழுப்புவதும், மாறுபட்ட கருத்து தெரிவிப்பதும் தேசத் துரோக குற்றம் ஆகாது. பரூக் அப்துல்லா பேசியதற்கான போதிய ஆதராங்களை மனு தாரர் தாக்கல் செய்வில்லை.. எனவே மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. இவ்வாறு உச்சநீதிமன்றம் தெரிவித்தது.

Advertisement
வாசகர் கருத்து (55)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
RajanRajan - kerala,இந்தியா
05-மார்-202108:22:21 IST Report Abuse
RajanRajan 😍😍😍😍😍ஒரு நாடு. அங்கு ஒரு திருடன். அவன் பலே கெட்டிக்காரன். எந்த தவறை செய்தாலும் ஆதாரமில்லாமல் செய்வான். மாட்டிக் கொள்ள மாட்டான். அவனுக்கு எதிராக எந்த ஆதாரங்களும், சாட்சிகளும் இது நாள்வரை இல்லை. அதனால் ஊரில் பெரிய மனிதராக வலம் வந்து கொண்டிருந்தான். அவனுடன் சேர்ந்து ஆதாயங்களை அனுபவிக்க ஒரு கூட்டமும் இருந்தது. 'இவ்வளவு தைரியமாக உலவி வருகிறாயே உனக்கு பயமாக இல்லையா?' என்று எல்லோரும் கேட்பார்கள். 'நான் தவறு செய்வதை நிரூபிக்கும் ஆதாரம் இருந்தால் காண்பியுங்கள். பிறகு தண்டியுங்கள்', என்பான் திருடன். அந்த நாட்டு அரசனும் எதுவும் செய்ய முடியாமல் அமைதியாக இருந்தான். அந்த நாட்டிற்கு ஒரு சாது வந்தார். அவரிடம் திருடனை பற்றியும், அரசனின் அமைதியை பற்றியும் மக்கள் முறையிட்டனர். ஒலை ஒன்றை எடுத்தார் சாது. அதில் ஏதோ எழுதினார். அதை அரசனிடம் கொடுத்தனுப்பினார். அன்று மாலை, திருடனை விருந்திற்கு அழைத்தார் அரசர். விருந்திற்கு சென்ற திருடன் வீடு திரும்பவில்லை. அன்று இரவே திருடன் தூக்கிலிடப்பட்டான். அவனுடைய ஆதரவாளர்கள் நேராக அரசனிடம் சென்றனர். திருடனை தூக்கிலிட்டதற்கான காரணத்தை கேட்டனர். அரசர் அமைதியாக பதிலளித்தார். 'மக்களே உங்கள் நண்பரை நேற்று விருந்திற்கு அழைத்தேன். அப்போது அவன் ராஜ ரகசியத்தை திருடிவிட்டான். அதனால் அவன் தூக்கிலிடப்பட்டான்', என்றார் அரசர். 'அப்படி என்ன பொல்லாத ரகசியம்?' என்று கேட்டார்கள் ஆதரவாளர்கள். 'அது ராஜ ரகசியம். அதை தெரிந்து கொண்டவர்கள் யாரும் உயிருடன் இருக்க முடியாது. நீங்கள் யாராவது தெரிந்து கொள்ள வேண்டுமா?', என்று கேட்டார் அரசர். அவ்வளவுதான். அனைவரும் ஓட்டம் பிடித்தனர். நடப்பவற்றையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த அரசி பேசினார். 'அரசே அதென்ன ராஜ ரகசியம்? என்னிடமாவது சொல்லுங்கள்', என்று கேட்டார் அரசி. சாது தனக்கு அனுப்பிய ஓலைச் சுவடியை காண்பித்தார் அரசர். அதில் பின்வரும் வரிகள் எழுதப்பட்டிருந்தது. "நியாயத்தை கடைபிடித்து, சட்டத்தின் விதிகளையும் மேற்கோள் காட்டி பிறகு தண்டிக்க வேண்டும் என்பது நியாயத்தின் மீதும், தர்மத்தின் மீதும் நம்பிக்கை உள்ளவர்களுக்கு மட்டுமே பொருந்தும். அநியாயக்காரர்களுக்கு பொருந்தாது. அநியாயக்காரர்களுக்கு முதலில் தண்டனையை கொடுங்கள். பிறகு அதை நியாயப்படுத்தும் விதிகளை தேடுங்கள். தண்ணீரில் வாழும் மீன்களுக்கு தண்டனையை தண்ணீரிலேயே தேடுவது புத்திசாலித்தனமல்ல." என்று எழுதியிருந்தது ..
Rate this:
Cancel
Darmavan - Chennai,இந்தியா
04-மார்-202116:58:31 IST Report Abuse
Darmavan உச்ச நீதி மீதான நம்பிக்கை இழக்கிறது.இது போன்ற தீர்ப்பினால்.
Rate this:
Dubuk U - Chennai,இந்தியா
05-மார்-202115:00:17 IST Report Abuse
Dubuk Uஅப்போ கோயில் ?...
Rate this:
Cancel
Anand - chennai,இந்தியா
04-மார்-202114:43:54 IST Report Abuse
Anand அந்நிய நாட்டின் துணையுடன் நம் நாட்டை பிரிப்பேன் என கூறுவது தேசத்துரோக குற்றம்.... இவனை கைது செய்யாமல் அந்த நொடியே சுட்டுக்கொன்றிருக்க வேண்டும்........கோர்ட்டுக்கு சென்றால் இப்படித்தான்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X