பொது செய்தி

இந்தியா

காப்பீடு சேவைகளிலுள்ள புகார்களுக்கு விரைவில் தீர்வு - புதிய சட்ட திருத்தம்

Updated : மார் 03, 2021 | Added : மார் 03, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
புது டில்லி: காப்பீட்டு சேவைகளில் உள்ள குறைபாடுகள், புகார்களை சரியான நேரத்தில், குறைந்த செலவில் தீர்ப்பதற்கு வசதியாக காப்பீடு குறைதீர் அதிகாரிக்கான 2017 சட்ட விதிகளில் மத்திய அரசு விரிவான திருத்தங்களை அறிவித்துள்ளது. திருத்தப்பட்ட விதிகள் குறைதீர்வு அதிகாரியிடம் புகார் அளிப்பதற்கான வாய்ப்பை அதிகப்படுத்தியுள்ளன. இதன் மூலம் ஆரம்பகட்ட பிரச்னைகள் மட்டுமின்றி

புது டில்லி: காப்பீட்டு சேவைகளில் உள்ள குறைபாடுகள், புகார்களை சரியான நேரத்தில், குறைந்த செலவில் தீர்ப்பதற்கு வசதியாக காப்பீடு குறைதீர் அதிகாரிக்கான 2017 சட்ட விதிகளில் மத்திய அரசு விரிவான திருத்தங்களை அறிவித்துள்ளது.



latest tamil news



திருத்தப்பட்ட விதிகள் குறைதீர்வு அதிகாரியிடம் புகார் அளிப்பதற்கான வாய்ப்பை அதிகப்படுத்தியுள்ளன. இதன் மூலம் ஆரம்பகட்ட பிரச்னைகள் மட்டுமின்றி காப்பீடு நிறுவனம், ஏஜென்ட்கள், புரோக்கர்கள் மற்றும் பிற இடைத்தரகர்களின் சேவையில் உள்ள குறைபாடுகளையும் இனி புகாரளிக்க முடியும். அதற்காக காப்பீடு தரகர்களும் குறைவுதீர்வு செயல்முறைக்குள் கொண்டு வரப்பட்டுள்ளனர். பாலிசிதாரர்கள் இனி ஆன்லைன் மூலம் புகார்களை அளிக்கலாம். புகாரின் அவ்வப்போதைய நிலையை அறியும் வசதியும் ஏற்படுத்தப்படுத்த உள்ளனர்.


latest tamil news


மேலும், குறைவுதீர்வு அதிகாரி வீடியோ கான்பரன்சிங்கை விசாரணைகளுக்குப் பயன்படுத்தலாம். ஒரு குறைவுதீர்வு அதிகாரியின் பணியிடம் காலியாக இருக்கும் போது, மற்றொரு அதிகாரிக்கு உடனடியாக கூடுதல் பொறுப்பு ஒதுக்கப்படும். குறைவுதீர்வு அதிகாரி சுதந்திரமாக தேர்ந்தெடுக்கப்படுவதை சட்ட திருத்தம் உறுதிப்படுத்துகிறது. அதே போல் தேர்ந்தெடுக்கப்படும் அதிகாரியின் சேவையில் சுதந்திரம் மற்றும் பாரப்பட்சமின்மையை பாதுகாக்கவும் சட்ட திருத்தம் உதவும்.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Amirthalingam Shanmugam - Trichy,இந்தியா
03-மார்-202123:06:24 IST Report Abuse
Amirthalingam Shanmugam நல்ல செய்தி உண்மையில் பாராட்டப்படவேண்டிய ஓன்று.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X