ஆஸி.யில் பஸ் டிரைவராக வேலை பார்க்கும் இலங்கை மாஜி கிரிக்கெட் வீரர்

Updated : மார் 03, 2021 | Added : மார் 03, 2021 | கருத்துகள் (30)
Share
Advertisement
மெல்போர்ன்: இலங்கை முன்னாள் கிரிக்கெட் வீரரும் , ப்ரீமியர் லீக் கிரிக்கெட் சென்னை அணி வீரருமான சூரஜ் ரந்திவ் ஆஸ்திரேலியாவில் பஸ் டிரைவராக பணியாற்றி வருகிறார்.இலங்கை கிரிக்கெட் அணி முன்னாள் சுழல் பந்து வீரர் சூரஜ் ரந்திவ்,37, இவர் ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் பஸ் ஓட்டிச்செல்லும் வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வைரலானது. இவர் ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில்
ex-Sri Lanka player drives bus in Australia to make ends meet

மெல்போர்ன்: இலங்கை முன்னாள் கிரிக்கெட் வீரரும் , ப்ரீமியர் லீக் கிரிக்கெட் சென்னை அணி வீரருமான சூரஜ் ரந்திவ் ஆஸ்திரேலியாவில் பஸ் டிரைவராக பணியாற்றி வருகிறார்.

இலங்கை கிரிக்கெட் அணி முன்னாள் சுழல் பந்து வீரர் சூரஜ் ரந்திவ்,37, இவர் ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் பஸ் ஓட்டிச்செல்லும் வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வைரலானது.
இவர் ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் பிரான்ஸ் நாட்டிற்கு சொந்தமான டிரன்ஸ்டெவ் என்ற பஸ் நிறுவனத்தில் டிரைவராக வேலை பார்த்து வருவது தெரியவந்தது. இவரை போன்று சிந்தகா ஜெயசிங்கே என்ற மற்றொரு இலங்கை வீரர், மற்றும் ஜிம்பாப்வே நாட்டின் வீரர் ஆகியோரும் பஸ் டிரைவர்களாக பணியாற்றி வருவது தெரியவந்தது.


latest tamil news



உலக கோப்பை வீரர்



சூரஜ் ரந்திவ் இலங்கை அணிக்காக 12 டெஸ்ட் போட்டிகளில் 43 விக்கெட்டுகள், 31 சர்வதேச ஒருநாள் போட்டிகளில் 36 விக்கெட்டுகள், மற்றும் 7 டுவனெ்டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார். பின்னர் ஐ.பி.எல். சென்னை அணியிலும் 2011-ம் ஆண்டு உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் இலங்கை அணிக்காக விளையாடியுள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (30)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Endrum Indian - Kolkata,இந்தியா
04-மார்-202116:19:07 IST Report Abuse
Endrum Indian இது தான் இவர்கள் உண்மையான லெவல் என்பது இதே போலத்தான் நடிகன் / நடிகை லெவல் ஆனால் இந்த ரசிக வெறியர்கள் கூட்டம் தான் இவர்களை ஆகாயத்தில் தூக்கி வைத்துள்ளது
Rate this:
Cancel
shyam - Bangalore,இந்தியா
04-மார்-202115:17:13 IST Report Abuse
shyam கொரோனா பலரது வாழ்க்கையில் இப்படி ஒரு மாற்றத்தை கொண்டு வந்துள்ளது என்பதற்கு இது வெகு சில உதாரணம் மட்டுமே...
Rate this:
Cancel
ponssasi - chennai,இந்தியா
04-மார்-202113:50:28 IST Report Abuse
ponssasi செல்வ செழிப்பில் பிறந்து வளர்ந்த அமரர் ராஜிவ் காந்தி வெளிநாட்டில் படிக்க போகும்போது அங்கே பகுதிநேரமாக வேலை பார்த்து வருவாய் ஈட்டியதாக படித்திருக்கிறேன். இங்கு பெரும் செல்வந்த குடும்பத்தை சேர்ந்தவர்கள் தான் அணியில் நிரந்தரமாக இடம் கிடைக்கும், மற்றவர்களுக்கு வெறும் பெயருக்கு மட்டுமே அணியில் இடம். இவர்கள் அணியில் ஒரு ஆட்டம் ஆடிவிட்டால் பிறகு இவர்களின் ஆட்டத்துக்கு அளவே இருக்காது. கோடிகளில் விளம்பரம், பார்ட்டி, டான்ஸ், இம்போர்ட்டட் பகுதிநேர காதலிகள், பாலிவுட் முன்னணி கதாநாயகி மனைவி. அடங்காப்பா
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X