உத்தர பிரதேசத்தில், தலித்துகள் மற்றும் பெண்களுக்கு எதிரான வன்முறைகள், தொடர்ந்து அரங்கேறி வருகின்றன. எனினும், அவற்றை மாநில அரசு, கண்டுகொள்ளாமல் இருந்து வருகிறது. இதிலிருந்து, பா.ஜ., ஆட்சியில், தலித்துகளுக்கு பாதுகாப்பு இல்லை என்பது தெளிவாகிறது.
மாயாவதி
தலைவர், பகுஜன் சமாஜ்
நீதி கேட்டு கதறல்!
ஹத்ராஸில், மகளை வன்கொடுமை செய்தவருக்கு எதிரான வழக்கை திரும்பப்பெறாததால், தந்தை கொலை செய்யப்பட்டுள்ளார். மற்றொரு பகுதியில், மாயமான சிறுமி, ஒரு வீட்டில் அடக்கம் செய்யப்பட்டுள்ளார். உத்தர பிரதேசத்தில், தினமும் ஒரு குடும்பம், நீதி கேட்டு கதறுகிறது.
பிரியங்கா
பொதுச் செயலர், காங்.,
மீண்டும் மம்தா ஆட்சி!
மேற்கு வங்கத்தில், முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான, திரிணமுல் காங்., கட்சி, மீண்டும் ஆட்சி அமைக்கும். மாநிலத்தில், 100 இடங்களுக்கு மேல் பா.ஜ., கைப்பற்றினால், நான் தேர்தல் வியூக பணியை விட்டுவிடுகிறேன். 'ஐபேக்' நிறுவனத்தில் இருந்தும் விலகிவிடுகிறேன்.
பிரசாந்த் கிஷோர்
தேர்தல் வியூக நிபுணர், ஐபேக்