பொது செய்தி

இந்தியா

1.70 லட்சம் பேருக்கு கொரோனா சிகிச்சை

Added : மார் 03, 2021
Share
Advertisement
புதுடில்லி:நாட்டில், 1.11 கோடிக்கும் மேலானோர், கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில், 97.06 சதவீதத்தினர் குணமடைந்துள்ள நிலையில், 1.70 லட்சம் பேர் சிகிச்சை பெறுகின்றனர்.கொரோனா பாதிப்பு நிலவரம் குறித்து, மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை: கடந்த, 24 மணி நேரத்தில், 7.85 லட்சம் பேருக்கு நடந்த பரிசோதனைகளின் முடிவில், 14 ஆயிரத்து, 989 பேரிடம் வைரஸ் பாதிப்பு உறுதியானது.

புதுடில்லி:நாட்டில், 1.11 கோடிக்கும் மேலானோர், கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில், 97.06 சதவீதத்தினர் குணமடைந்துள்ள நிலையில், 1.70 லட்சம் பேர் சிகிச்சை பெறுகின்றனர்.

கொரோனா பாதிப்பு நிலவரம் குறித்து, மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை: கடந்த, 24 மணி நேரத்தில், 7.85 லட்சம் பேருக்கு நடந்த பரிசோதனைகளின் முடிவில், 14 ஆயிரத்து, 989 பேரிடம் வைரஸ் பாதிப்பு உறுதியானது. இதையடுத்து, கொரோனா தொற்றுக்கு உள்ளானோர் எண்ணிக்கை, ஒரு கோடியே, 11 லட்சத்து, 39 ஆயிரத்து, 516 ஆக அதிகரித்து உள்ளது.வைரஸ் பாதிப்பில் இருந்து, ஒரு கோடியே, எட்டு லட்சத்து, 12 ஆயிரத்து, 44 பேர் குணமடைந்து உள்ளனர்; மீட்பு விகிதம், 97.06 சதவீதமாக பதிவாகி உள்ளது.

கொரோனா பாதிப்பிற்கு உள்ளானவர்களில், 1.70 லட்சம் பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஒட்டுமொத்த பாதிப்பில், இவர்களின் விகிதம், 1.53 சதவீதமாகும்.கொரோனா பலி எண்ணிக்கை குறைந்து வரும் நிலையில், கடந்த, 24 மணி நேரத்தில், 98 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் அதிகபட்சமாக மஹாராஷ்டிராவில், 54 பேர்; கேரளாவில் 16 மற்றும் பஞ்சாபில், 10 பேர் பலியாயினர்.

ஒட்டுமொத்த கொரோனா பலி எண்ணிக்கை, ஒரு லட்சத்து, 57 ஆயிரத்து, 346 ஆக உயர்ந்து உள்ளது; இறப்பு விகிதம், 1.4 சதவீதமாக இருக்கிறது.கொரோனா பலியில், 52 ஆயிரத்து, 238 பேருடன், மஹாராஷ்டிரா முதலிடத்தில் தொடர்கிறது. தமிழகத்தில், 12 ஆயிரத்து, 502 பேரும்; கர்நாடகாவில், 12 ஆயிரத்து, 343 பேரும் இதுவரை உயிரிழந்துள்ளனர்.இவ்வாறு, அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X