24 மணி நேரமும் தடுப்பூசி போடலாம்: மத்திய அரசு அதிரடி அறிவிப்பு

Updated : மார் 04, 2021 | Added : மார் 03, 2021 | கருத்துகள் (2) | |
Advertisement
புதுடில்லி:'கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ள, குறிப்பிட்ட நாள், நேரம் ஆகியவை பின்பற்ற தேவை இல்லை; பொது மக்கள் தங்கள் வசதிக்கு ஏற்ப, 24 மணி நேரத்தில் எப்போது வேண்டுமானாலும் வந்து தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம்' என, மத்திய அரசு அறிவித்துள்ளது.கொரோனா தடுப்பூசி போடும் இரண்டாம் கட்ட பணி, சமீபத்தில் துவங்கியது. இதில், 60 வயதுக்கு மேற்பட்டவர்கள், 'கார்மாபிடைடிஸ்' எனப்படும்,
தடுப்பூசி, கொரோனா, கொரோனா வைரஸ், கோவிட்19, மத்திய அரசு, ஹர்ஷ்வர்தன், சுகாதாரத்துறை அமைச்சர்

புதுடில்லி:'கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ள, குறிப்பிட்ட நாள், நேரம் ஆகியவை பின்பற்ற தேவை இல்லை; பொது மக்கள் தங்கள் வசதிக்கு ஏற்ப, 24 மணி நேரத்தில் எப்போது வேண்டுமானாலும் வந்து தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம்' என, மத்திய அரசு அறிவித்துள்ளது.

கொரோனா தடுப்பூசி போடும் இரண்டாம் கட்ட பணி, சமீபத்தில் துவங்கியது. இதில், 60 வயதுக்கு மேற்பட்டவர்கள், 'கார்மாபிடைடிஸ்' எனப்படும், இரண்டுக்கும் மேற்பட்ட நோய்கள் உள்ள, 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடப்படுகிறது. தடுப்பூசி போடும் பணி தொடர்பான மத்திய அரசின் ஆய்வுக் கூட்டம், நடந்தது.

அப்போது, மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத், பிரதமர் மருத்துவ காப்பீடு திட்டம், மத்திய அரசு மருத்துவ திட்டம் மற்றும் மாநில அரசுகளின் மருத்துவ காப்பீடு திட்டத்தில் பதிவு பெற்றுள்ள அனைத்து தனியார் மருத்துவமனைகளும், தடுப்பூசி போடும் பணியை மேற்கொள்ள, மத்திய சுகாதாரத்துறை அனுமதி அளித்தது.

மேலும், அனைத்து அரசு மற்றும் தனியார் மருத்துவ மனைகளுக்கு தேவையான தடுப்பு மருந்துகள் தடையின்றி சென்று சேருவதை, மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகள் உறுதி செய்ய, மத்திய அரசு அறிவுறுத்தியது.மத்திய அரசிடம் தேவையான அளவு தடுப்பு மருந்துகள் கைவசம் இருப்பதால், மருந்துகளை சேமித்து வைக்க வேண்டிய அவசியம் இல்லை என, மாநில அரசுகளுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.


latest tamil news
இந்நிலையில், மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் தன், 'டுவிட்டர்' சமூக வலைதள பக்கத்தில் குறிப்பிட்டுள்ளதாவது: பொது மக்களின் ஆரோக்கியம் மற்றும் நேரத்தின் மதிப்பை அறிந்தவர் பிரதமர் நரேந்திர மோடி. எனவே, கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ள, குறிப்பிட்ட நாள், நேரம் ஆகியவற்றை, மருத்துவமனைகள் பின்பற்ற தேவையில்லை.தடுப்பூசி போட்டுக் கொள்பவர்கள் தங்கள் வசதிக்கு ஏற்ப, 24 மணி நேரத்தில் எப்போது வேண்டுமானாலும் வந்து தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம். இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Nemam Natarajan Pasupathy - Hyderabad,இந்தியா
04-மார்-202112:22:24 IST Report Abuse
Nemam Natarajan Pasupathy I registered in Cowin portal. When I entered the details for Scheduling after filling the State, District, Block and Pin Code and click the "search" for the Centre for vaccination, a pop up comes up No schedule for this week 04/3 to 10/3 . No list of Centres are displayed . If you click the Next week button, nothing happens The Health Minister must go to this portal and fill up his details to check for himself
Rate this:
Cancel
Ramesh Sargam - Back in Bengaluru, India.,இந்தியா
04-மார்-202111:49:04 IST Report Abuse
Ramesh Sargam இந்தியாவின் 130 கோடி மக்களுக்கு தடுப்பூசி போட இந்த 24 மணி நேர முடிவு மிகவும் சரியானது. மக்களின் மீது உண்மையான அக்கறையுள்ள மத்திய அரசு.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X