பொது செய்தி

இந்தியா

12,000 பேருக்கு அபராதம் போலீஸ் கமிஷனர் அதிரடி

Added : மார் 03, 2021
Share
Advertisement
மும்பை:மும்பையில், முக கவசம் அணியாமல், பொது இடங்களுக்கு வருவோரை கட்டுப்படுத்த, நாள்தோறும், 12 ஆயிரம் பேரிடம் அபராதம் வசூலிக்க வேண்டும் என, போலீஸ் கமிஷனர், இலக்கு நிர்ணயித்துள்ளார்.மஹாராஷ்டிராவில், முதல்வர் உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா, தேசியவாத காங்., மற்றும் காங்கிரஸ் கூட்டணி ஆட்சி அமைந்துள்ளது.கொரோனா பாதிப்பு எண்ணிக்கை மற்றும் உயிரிழப்பில், இம்மாநிலம்
 12,000 பேருக்கு அபராதம் போலீஸ் கமிஷனர் அதிரடி

மும்பை:மும்பையில், முக கவசம் அணியாமல், பொது இடங்களுக்கு வருவோரை கட்டுப்படுத்த, நாள்தோறும், 12 ஆயிரம் பேரிடம் அபராதம் வசூலிக்க வேண்டும் என, போலீஸ் கமிஷனர், இலக்கு நிர்ணயித்துள்ளார்.

மஹாராஷ்டிராவில், முதல்வர் உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா, தேசியவாத காங்., மற்றும் காங்கிரஸ் கூட்டணி ஆட்சி அமைந்துள்ளது.கொரோனா பாதிப்பு எண்ணிக்கை மற்றும் உயிரிழப்பில், இம்மாநிலம் முதலிடத்தில் உள்ளது. கடந்த சில மாதங்களாக குறைந்திருந்த வைரஸ் பரவல் வேகம், தற்போது மீண்டும் அதிகரித்துள்ளது.

இதற்கிடையே, மும்பையில், முக கவசம் அணியாமல், பொது இடங்களுக்கு வருவோருக்கு, போலீசார், 200 ரூபாய் அபராதம் விதித்து வருகின்றனர்.இந்த நடவடிக்கைகளை தீவிரப்படுத்த முடிவு செய்துள்ள, மும்பை போலீஸ் கமிஷனர் பரம்பீர் சிங், அவரது கட்டுப்பாட்டில் உள்ள, 12 மண்டலங்களின் போலீஸ் அதிகாரிகளுக்கு, சமீபத்தில் அதிரடி உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார்.

இதன்படி, 'ஒவ்வொரு மண்டலத்திலும், நாள்தோறும் முக கவசம் அணியாத, 1,000 பேருக்கு அபராதம் விதிக்க, இலக்கு நிர்ணயித்து செயல்பட வேண்டும்' என, கூறியுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X