பொது செய்தி

இந்தியா

திறமையுள்ள இளைஞர்களுக்கு கதவுகள் திறந்துள்ளன: பிரதமர்

Updated : மார் 05, 2021 | Added : மார் 03, 2021 | கருத்துகள் (18+ 47)
Share
Advertisement
புதுடில்லி:''விண்வெளி, அணுசக்தி, விவசாயம் உட்பட, பல்வேறு துறைகளிலும், திறமையுள்ள இளைஞர்களுக்கு, வாய்ப்பு எனும் கதவுகள், என்றைக்கும் திறந்தே உள்ளன,'' என, பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.கல்வித் துறை தொடர்பாக, டில்லியில் நடைபெற்ற, 'ஆன்லைன்' கருத்தரங்கில், பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது: புதிய தேசிய கல்விக் கொள்கையில், உள்ளூர் மொழிகளுக்கு முக்கியத்துவம்
திறமை, இளைஞர்கள், பிரதமர்,மோடி, நரேந்திர மோடி, பிரதம் நரேந்திர மோடி, பிரதமர் மோடி

புதுடில்லி:''விண்வெளி, அணுசக்தி, விவசாயம் உட்பட, பல்வேறு துறைகளிலும், திறமையுள்ள இளைஞர்களுக்கு, வாய்ப்பு எனும் கதவுகள், என்றைக்கும் திறந்தே உள்ளன,'' என, பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.

கல்வித் துறை தொடர்பாக, டில்லியில் நடைபெற்ற, 'ஆன்லைன்' கருத்தரங்கில், பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது: புதிய தேசிய கல்விக் கொள்கையில், உள்ளூர் மொழிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு உள்ளது. இந்த வாய்ப்பை பயன்படுத்தி, ஒவ்வொரு மொழியை சேர்ந்த நிபுணர்களும், உலக அளவில், தங்கள் மொழியில் உள்ள, சிறப்பான உள்ளடக்கங்களை, பாடத் திட்டத்தில் தர வேண்டும்.

மத்திய பட்ஜெட்டில், சுகாதாரத் துறைக்கு அடுத்தபடியாக, கல்வி, திறன், ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்புகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளன. ஆராய்ச்சிகளுக்கு கட்டுப்பாடு விதிப்பது, நாட்டின் வளர்ச்சிக்கு அநீதி இழைக்கும் செயலாகும்.எனவே, விண்வெளி, அணுசக்தி, ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம், விவசாயம் உட்பட, பல்வேறு துறைகளிலும், திறமையுள்ள இளைஞர்களுக்கு, வாய்ப்பு எனும் கதவு, என்றைக்கும் திறந்தே இருக்கும்.

சுயசார்பு இந்தியாவை கட்டியெழுப்ப, நாட்டின் இளைஞர்கள் மீதான நம்பிக்கை, முக்கியமானது. அந்த இளைஞர்கள், தங்கள் கல்வி மற்றும் அறிவு மீது, முழு நம்பிக்கை வைத்தால் மட்டுமே, இந்த வளர்ச்சி சாத்தியமாகும். இவ்வாறு அவர் பேசினார்.


வன விலங்கு தின வாழ்த்து!


உலக வன விலங்கு தினம், நேற்று கொண்டாடப்பட்டது.
இதையொட்டி, பிரதமர் மோடி, தன், 'டுவிட்டர்' சமூக வலைதள பக்கத்தில் குறிப்பிட்டு உள்ளதாவது: வன விலங்கு பாதுகாப்பில் ஈடுபட்டுள்ள அனைவருக்கும் என் வணக்கம். சிங்கம், புலி, சிறுத்தைகள் என, பல்வேறு வன விலங்குகளின் எண்ணிக்கை, நாட்டில் கணிசமாக உயர்ந்துள்ளன. நம் காடுகள் மற்றும் விலங்குகளை பாதுகாக்க, நம்மால் இயன்றதை நாம் செய்ய வேண்டும்.இவ்வாறு, அவர் அதில் குறிப்பிட்டுள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (18+ 47)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
திருஞானசம்பந்தமூர்த்திதாச ஞானதேசிகன் திறமை எல்லா சாதிகளிலும் உள்ளது என்று பறை சற்றும் விதமாக சைதை துரைசாமி தனது பயிற்சி மன்றத்தில் பயின்று சிவில் சர்விசஸ் பணி வேலை வாய்ப்பை பெற்றவர்களை சாதிவாரியாக பட்டியல் போட்டு வெளியிட்டுள்ளார் இனியாவது புத்திசாலிகள் கோட்டா கோட்டா என்று கோட்டா செய்யாதீங்கப்பா
Rate this:
Cancel
J.Isaac - bangalore,இந்தியா
04-மார்-202120:16:59 IST Report Abuse
J.Isaac திறமைமில்லாத இளைஞர்கள் குலத்தொழிலுக்கு செல்லவே புதிய கல்வி கொள்கை.
Rate this:
Cancel
iconoclast - Surrey,யுனைடெட் கிங்டம்
04-மார்-202119:36:32 IST Report Abuse
iconoclast மோடி நீ அடுத்த தடவை வோட்டு கேட்க வரத்தானே போற
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X