பொது செய்தி

இந்தியா

'அமேசான் பிரைம்' தலைவர் ஜாமின் மனு இன்று விசாரணை

Added : மார் 03, 2021
Share
Advertisement
புதுடில்லி:சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள 'தாண்டவ்' என்ற ஹிந்தி தொடரை வெளியிடும், 'அமேசான் பிரைம்' எனப்படும், 'ஆன்லைன்' பொழுதுபோக்கு தளத்தின் இந்தியப் பிரிவு தலைவர், அபர்ணா புரோஹித் முன் ஜாமின் மனுவை, உச்ச நீதிமன்றம் இன்று விசாரிக்க உள்ளது.பிரபல பாலிவுட் நடிகர், சைப் அலிகான், நடிகை, டிம்பிள் கபாடியா உள்ளிட்டோர் நடித்துள்ள, 'தாண்டவ்' என்ற இணையத் தொடர், அமேசான்
 'அமேசான் பிரைம்' தலைவர் ஜாமின் மனு இன்று விசாரணை

புதுடில்லி:சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள 'தாண்டவ்' என்ற ஹிந்தி தொடரை வெளியிடும், 'அமேசான் பிரைம்' எனப்படும், 'ஆன்லைன்' பொழுதுபோக்கு தளத்தின் இந்தியப் பிரிவு தலைவர், அபர்ணா புரோஹித் முன் ஜாமின் மனுவை, உச்ச நீதிமன்றம் இன்று விசாரிக்க உள்ளது.

பிரபல பாலிவுட் நடிகர், சைப் அலிகான், நடிகை, டிம்பிள் கபாடியா உள்ளிட்டோர் நடித்துள்ள, 'தாண்டவ்' என்ற இணையத் தொடர், அமேசான் பிரைம், ஆன்லைன் பொழுதுபோக்கு தளத்திற்காக தயாரிக்கப்பட்டுள்ளது. இந்தத் தொடரில், ஹிந்துக் கடவுள்களை மோசமாக சித்தரித்துள்ளதாக, சர்ச்சை எழுந்து உள்ளது.
இது தொடர்பாக, உத்தர பிரதேசம் உட்பட பல மாநிலங்களில் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டு உள்ளன.இந்த இணையத் தொடரை வெளியிடும், அமேசான் பிரைம் ஆன்லைன் ஊடகத்தின் இந்தியப் பிரிவுத் தலைவர், அபர்ணா புரோஹித், முன் ஜாமின் கேட்டு, உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். அதன் மீது, இன்று விசாரணை நடக்க உள்ளது.

முன்னதாக, 'கைது நடவடிக்கைகளில் இருந்து பாதுகாப்பு அளிக்க வேண்டும்' என, அபர்ணா புரோஹித், இந்தத் தொடரின் இயக்குனர், அலி அப்பாஸ் ஜாபர் உள்ளிட்டோர் தாக்கல் செய்த மனுவை, உச்ச நீதிமன்றம் நிராகரித்திருந்தது.உரிய நீதிமன்றத்தில் முன்ஜாமின் கோரி மனு தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டது.அதன்படி, அபர்ணா புரோஹித் தாக்கல் செய்த முன்ஜாமின் மனுவை, அலகாபாத் உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. அதையடுத்து உச்ச நீதிமன்றத்தில் அவர் மனு தாக்கல் செய்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X