சிறப்பு பகுதிகள்

சொல்கிறார்கள்

பெண்கள் முன்னேற்றம் அவசியம்!

Added : மார் 03, 2021
Share
Advertisement
பெண்கள் முன்னேற்றம் அவசியம்! பெண்களுக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தித் தருவதற்கான திறன்களை வழங்கும், 'புத்ரி' என்ற தொண்டு நிறுவனத்தை ஏற்படுத்தி, 6,000 மாணவியருக்கு திறன் மேம்பாட்டை வழங்கி வரும், 'அவ்தார்' என்ற மனிதவள மேம்பாட்டு அமைப்பை நடத்தி வருவது பற்றி, டாக்டர் சவுந்தர்யா ராஜேஷ்: பெரும்பாலான பெண்கள் தங்கள் குடும்ப பொருளாதாரம் அல்லது லட்சியத்திற்காகவே

சொல்கிறார்கள்


பெண்கள் முன்னேற்றம் அவசியம்!



பெண்களுக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தித் தருவதற்கான திறன்களை வழங்கும், 'புத்ரி' என்ற தொண்டு நிறுவனத்தை ஏற்படுத்தி, 6,000 மாணவியருக்கு திறன் மேம்பாட்டை வழங்கி வரும், 'அவ்தார்' என்ற மனிதவள மேம்பாட்டு அமைப்பை நடத்தி வருவது பற்றி, டாக்டர்
சவுந்தர்யா ராஜேஷ்: பெரும்பாலான பெண்கள் தங்கள் குடும்ப பொருளாதாரம் அல்லது லட்சியத்திற்காகவே வேலை செய்கின்றனர்.வேலை பார்க்கும் அலுவலகத்தில், தன் நிலையை எப்படி உயர்த்திக் கொள்வது; குடும்பத்தையும், வேலையையும் எப்படி சமாளிப்பது என்ற சூட்சுமம் தெரியாமல், தங்கள் சொந்த வளர்ச்சியை தவிர்த்து விடுகின்றனர். எனவே, பெண்கள் வேலைக்கு வர வேண்டும் என்ற முனைப்பில், நாட்டை முன்னிறுத்தி நாங்கள் செயல்படுகிறோம். 300 நிறுவனங்களில் வேலை பார்க்கும், ஐந்து லட்சம் பெண்கள், சொந்த காரணங்களுக்காக வேலையை விட்டு விடாமல் இருப்பதற்காக, வழி வகைகளை செய்து வருகிறோம்.
இது தவிர, மாற்றுத்திறனாளிகள் மற்றும் திருநங்கையருக்கும் வாய்ப்பு ஏற்படுத்தி தருவதிலும் எங்கள் பங்களிப்பு உள்ளது. பெண்கள் சாதிக்கவும், தன்னம்பிக்கையோடு பிரச்னைகளை சமாளிக்கவும், பிறவியிலேயே அவர்களுக்கு குணங்கள் அமைந்திருக்க வேண்டும் என்பது உண்மையில்லை.
இதெல்லாம்,

சொல்லிக்கொடுத்து, ஊக்கப்படுத்தி, வளர்க்கக் கூடிய திறன்பாடுகள் தான். அந்த வகையில் பொருளாதாரத்தில் கீழ்மட்டத்தில், வாய்ப்புகள் குறைவாக இருக்கும் பள்ளி மாணவியரை, உத்யோக நோக்கு தன்மையோடு மாற்ற வேண்டும் என்ற முயற்சி தான், புத்ரி!
கட்டணமின்றி பயிற்சி என்ற, நாங்கள் எடுத்திருக்கும் முயற்சி, நம் நாட்டின் தனி நபர் வருமானத்தை உயர்த்தும் வல்லமை படைத்தது. எங்களின் குடைக்குள், மாநகராட்சி பள்ளிகள், அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவியர் வருகின்றனர். எட்டு முதல், 12ம் வகுப்பு வரையிலான ஐந்து ஆண்டுகள் எங்களுடன் வளர்கின்றனர்.

அதன் பின், 'போஸ்ட் ஸ்கூல்' என்ற திட்டத்தில் கல்லுாரி படிப்பு வரை அவர்களுடன் பயணம் செய்கிறோம். பட்டம் வாங்கி, நல்ல உத்யோகத்தில் அவர்களை அமர்த்துவது தான் எங்கள் புத்ரியின் நோக்கம். இன்றைய தேதியில், 62 பள்ளிகளின், 6,000 மாணவியர்
பயனடைகின்றனர்.இதற்கான அனைத்து விபரங்களும், https://puthri.org/ என்ற எங்களின் இணையதளத்தில் இருக்கிறது.உத்யோகம் வேண்டுமா அல்லது குடும்பம் மட்டும் போதுமா என்ற முடிவின் அடிப்படையில் பெண்கள் முன்னேறுவது அவர்கள் கையில் தான் இருக்கிறது.
அதற்கான ஊக்கம், வழிமுறை, பயிற்சிகளை மட்டுமே நாங்கள் வழங்குகிறோம். பெண்கள் முன்னேற்றத்திற்கான படிக்கல்ஆக மட்டுமே நாங்கள் இருக்கிறோம்!

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X