தெலுங்கானாவில் சீனா அத்துமீறல்: மாநிலத்தையே முடக்க முயற்சி

Updated : மார் 05, 2021 | Added : மார் 03, 2021 | கருத்துகள் (14)
Share
Advertisement
ஐதராபாத்: தெலுங்கானா முழுதும், மின்சார சேவையை அளித்து வரும் இரு பெரும் மின் நிறுவனங்களின் கணினிகளில் ஊடுருவி தகவல்களை திருடவும், மாநிலம் முழுதும் மின்சார சேவையை முடக்கவும், சீனா முயற்சித்தது தெரியவந்துள்ளது. சரியான நேரத்தில் உஷார்படுத்தப்பட்டதால், மிகப் பெரிய, 'சைபர்' தாக்குதல் முயற்சி முறியடிக்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.தெலுங்கானாவில், முதல்வர்
தெலுங்கானா, சீனா,அத்துமீறல், முடக்க முயற்சி,

ஐதராபாத்: தெலுங்கானா முழுதும், மின்சார சேவையை அளித்து வரும் இரு பெரும் மின் நிறுவனங்களின் கணினிகளில் ஊடுருவி தகவல்களை திருடவும், மாநிலம் முழுதும் மின்சார சேவையை முடக்கவும், சீனா முயற்சித்தது தெரியவந்துள்ளது. சரியான நேரத்தில்
உஷார்படுத்தப்பட்டதால், மிகப் பெரிய, 'சைபர்' தாக்குதல் முயற்சி முறியடிக்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

தெலுங்கானாவில், முதல்வர் சந்திரசேகர ராவ் தலைமையில், தெலுங்கானாராஷ்ட்ரீய சமிதி ஆட்சிநடக்கிறது. இம்மாநிலத்தின் மின்சார சேவையினை, டிஎஸ் டிரான்ஸ்கோ மற்றும் டிஎஸ் ஜென்கோ என்ற இரு அரசு பொதுத்துறை நிறுவனங்கள் நிர்வகித்து வருகின்றன.

இந்நிறுவனங்களின் தலைவரும், நிர்வாக இயக்குனருமான, டி.பிரபாகர் ராவ், செய்தியாளர்களிடம் கூறியதாவது: தெலுங்கானாவின் மின் துறைகளான, டிரான்ஸ்கோ மற்றும் ஜென்கோவின் மின் பகிர்மான நிலையங்களில் உள்ள கணினிகளுக்கு, சந்தேகத்திற்கு இடமான புதிய கணினிகளில் இருந்து தகவல்கள் வரத்துவங்கின. இது தொடர்பாக, இந்திய கணினி அவசரகால நடவடிக்கை குழுவினர், எங்களை எச்சரித்தனர். உடனடியாக, அந்த புதிய கணினி தொடர்புகளை துண்டித்து, மின்சார துறையின் கணினிகளில் அவர்கள் ஊடுருவ முடியாமல் செய்தோம்.

சீனாவை சேர்ந்த சில, 'ஹேக்கர்கள்' மின்துறையின் கணினிகளில் ஊடுருவி, தகவல்களை திருடவும், கணினிகளை முடக்கி, மாநிலம் முழுவதும் மின் தடை ஏற்படுத்தவும் முயன்றுள்ளனர். சரியான நேரத்தில் தகவல் கிடைத்ததால், சீனாவின் மிகப் பெரிய சைபர் தாக்குதல் முறியடிக்கப்பட்டுள்ளது. அனைத்து மின் பகிர்மான நிலையங்களும் உரிய பாதுகாப்பு நடவடிக்கையுடன் செயல்பட அறிவுறுத்தப்பட்டுள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.

இந்த சைபர் தாக்குதல் முயற்சியும், கடந்த ஆண்டு நாட்டின் பல முக்கிய மின் நிலையங்களை, சீனா முடக்க முயன்ற முயற்சிகளும், ஒரே விதமாக செயல்படுத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

டில்லி, மஹாராஷ்டிரா உட்பட, பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த, தேசிய நீர் மின் நிலையங்கள், தமிழகத்தின் துாத்துக்குடி, மும்பை துறைமுகங்கள் உட்பட, 12 மத்திய அரசு நிறுவனங்கள் மீது, சைபர் தாக்குதல் நடத்த, சீனா கடந்த ஆண்டு முயன்றது. இதன் காரணமாக, மஹாராஷ்டிராவின் மும்பை, நவி மும்பை, தானே உள்ளிட்ட மாவட்டங்களில், கடந்த ஆண்டு அக்டோபர், 13ல், மிகப் பெரிய மின் தடை ஏற்பட்டது. இது, மும்பை பங்கு சந்தையை முடக்கியது. புறநகர் ரயில் சேவை மற்றும் அலுவலக பணிகள் பாதிக்கப்பட்டன.சீன உளவுத் துறை மற்றும் ராணுவ ஆதரவு பெற்ற ஹேக்கர்கள், மத்திய அரசு நிறுவன கணினிகளை முடக்கி, மிகப் பெரிய அழிவை ஏற்படுத்த முயன்ற தகவலை, அமெரிக்காவை சேர்ந்த, 'ரிக்கார்டட் பியூச்சர்' என்ற நிறுவனம், சமீபத்தில் வெளியிட்டது.


மத்திய அரசின் கோழைத்தனம்- ராகுல் குற்றச்சாட்டுசீன அத்துமீறல்கள் குறித்து, காங்கிரஸ்எம்.பி., ராகுல் நேற்று கூறியதாவது:லடாக்கின் உண்மையான எல்லைக் கட்டுப்பாடு அருகே உள்ள தெப்சங்பகுதியில், சீன படையினர் கட்டுமானங்களை உருவாக்கியுள்ளனர். இது தொடர்பாக, இரவில் எடுக்கப்பட்ட செயற்கைக்கோள் புகைபடங்கள் குறித்து, சில பத்திரிகைகள் செய்தி வெளியிட்டுள்ளன. தெப்சங் பகுதி, நம் கையை விட்டு போய்விட்டது. டி.பி.ஓ., எனப்படும், தவுலத் பெக் ஓல்டி பகுதியின் நிலையும் மிக மோசமாகவே உள்ளது.சீனா தங்கள் வழக்கமான உத்திகளாலும், சைபர் சக்திகளாலும், நம்மை அச்சுறுத்தி வருகின்றது. மத்திய அரசின் கோழைத்தனத்தால், நாம் மிகப் பெரிய விபரீதத்தை எதிர்காலத்தில் சந்திக்க நேரிடும்.இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement
வாசகர் கருத்து (14)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sankaseshan - mumbai,இந்தியா
04-மார்-202122:58:53 IST Report Abuse
sankaseshan There are people like papi pappu and communists and Those opposed to modi are lining up to support our enemies Pakistan and China . They are signing agreement with China. Farook abdulla ly says he will take help of China to restore special status for Kashmir . All are traitors of the nation Pak was given surgical attack treatment .China has been stopped on L O C and pushed back in to Chinese border . Had Congress in power they would not have done anything .appu vidiyatha tamilan Aravon shoud SHUT up their mouths .
Rate this:
Cancel
visu - Pondicherry,இந்தியா
04-மார்-202122:13:19 IST Report Abuse
visu இந்த ராகுல் கொசு தொல்லை தங்க முடியல
Rate this:
Cancel
visu - Pondicherry,இந்தியா
04-மார்-202122:13:19 IST Report Abuse
visu இந்த ராகுல் கொசு தொல்லை தங்க முடியல
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X