அரசியல் செய்தி

தமிழ்நாடு

சசிகலா முடிவு: தலைவர்கள் கருத்து

Updated : மார் 03, 2021 | Added : மார் 03, 2021 | கருத்துகள் (86)
Share
Advertisement
சென்னை: சசிகலா அறிவித்ததை போன்று தினகரனும் அரசியலை விட்டு ஒதுங்க வேண்டும் என பா.ஜ.,வின் தமிழக பொது செயலாளர் சீனிவாசன் தெரிவித்துள்ளார். சசிகலா அரசியலை விட்டு ஒதுங்குவதாக இன்று அறிக்கை மூலம் தெரிவித்து உள்ளார். இதனையடுத்து அவரின் முடிவு குறித்து பல்வேறு கட்சி தலைவர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். தமிழக பா.ஜ.,பொது செயலாளர் சீனிவாசன் வெளியிட்டுள்ள

சென்னை: சசிகலா அறிவித்ததை போன்று தினகரனும் அரசியலை விட்டு ஒதுங்க வேண்டும் என பா.ஜ.,வின் தமிழக பொது செயலாளர் சீனிவாசன் தெரிவித்துள்ளார்.



latest tamil news



சசிகலா அரசியலை விட்டு ஒதுங்குவதாக இன்று அறிக்கை மூலம் தெரிவித்து உள்ளார். இதனையடுத்து அவரின் முடிவு குறித்து பல்வேறு கட்சி தலைவர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

தமிழக பா.ஜ.,பொது செயலாளர் சீனிவாசன் வெளியிட்டுள்ள செய்தியில் சசிகலா அரசியலை விட்டு ஒதுங்குவதாக அறிவித்துள்ளதை வரவேற்கிறேன் அதே போன்று தினகரனும் அரசியலை விட்டு ஒதுங்கும் முடிவை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.


latest tamil news



காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர் அழகிரி கூறி இருப்பதாவது: அரசியலில் அனுபவம் வாய்ந்தவர் சசிகலா ஆனால் ஆளுமை கிடையாது. பீகாரில் முதல்வர் நிதிஷ்குமாரை இரண்டாம் இடத்திற்கு தள்ளிவிட்டுபா.ஜ.,முதலிடத்திற்கு வந்துள்ளது. பா.ஜ.,வின் சதி திட்டத்தில் சசிகலா சிக்காமல் முடிவை அறிவித்து இருப்பது வரவேற்கத்தக்கது. இவ்வாறு தெரிவித்துள்ளார்.


மேலும் தலைவர்கள் கருத்து



சசிகலா அறிக்கை மகிழ்ச்சி அளிக்கிறது: கே.பி. முனுசாமி


ஜெயலிதா ஆன்மா சாந்தி அடையும் வகையில் சசிகலா அறிக்கை வெளயிட்டு்ளளார். சசிகலாவின் இந்த முடிவு மகிழ்ச்சி அளிக்கிறது. சசிகலாவை அ.தி.மு.க.வில் சேர்த்து கொள்வது காலம் தான் பதில் சொல்லும். ஜெயலலிதா ஆட்சி வரக்கூடாது என நினைப்பவர் தினகரன்.


காங். கே.எஸ்.அழகிரி:

சசிகலா அரசியல் அனுபவம் பெற்றிருந்தாலும், அவர் ஆளுமை இல்லாதவர் . அவரின் இந்த முடிவை வரவேற்கிறேன்.


வருத்தம் அளிக்கிறது



சசிகலா அரசியலைவிட்டு ஒதுங்கியது வருத்தம் அளிக்கிறது: தனியரசு எம்.எல்.ஏ.,



Advertisement




வாசகர் கருத்து (86)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Rajagopal - Los Angeles,யூ.எஸ்.ஏ
04-மார்-202120:53:29 IST Report Abuse
Rajagopal அமித் ஷா என்ன சொன்னாரோ காதுல அம்மா சத்தம் போடாம ஒதுங்கிருச்சு. இன்னும் கொஞ்ச நாள்ல ஆராசாவும், கனியக்காவும் திடீருன்னு மொட்டையடிச்சிக்கிட்டு அரோகரா போட்டுக்கிட்டு ஓடினாலும் ஓடுவாங்க.
Rate this:
Cancel
P Ravindran - Chennai,இந்தியா
04-மார்-202120:47:21 IST Report Abuse
P Ravindran நீதிமன்றத்தில் இருக்கும் மனுவை திரும்பிப்பெறவில்லையே . நாடகமாகக்கூட இருக்கும்..
Rate this:
Cancel
Easwar Kamal - New York,யூ.எஸ்.ஏ
04-மார்-202119:01:04 IST Report Abuse
Easwar Kamal இது வேற யாரு பண்ணவேலை மக்களுக்கு தெரியாத. எல்லாம் பிஜேபி கைங்கரியம். மிரட்டி பணிய வைக்கிற பிஜேபி ஒன்னும் புதுசு இல்லையே. கண்டிப்பா மக்களுக்கு தெரியும் யாருக்கு ஒட்டு போடணும்னு.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X