சசிகலா முடிவு: தலைவர்கள் கருத்து| Dinamalar

சசிகலா முடிவு: தலைவர்கள் கருத்து

Updated : மார் 03, 2021 | Added : மார் 03, 2021 | கருத்துகள் (86) | |
சென்னை: சசிகலா அறிவித்ததை போன்று தினகரனும் அரசியலை விட்டு ஒதுங்க வேண்டும் என பா.ஜ.,வின் தமிழக பொது செயலாளர் சீனிவாசன் தெரிவித்துள்ளார். சசிகலா அரசியலை விட்டு ஒதுங்குவதாக இன்று அறிக்கை மூலம் தெரிவித்து உள்ளார். இதனையடுத்து அவரின் முடிவு குறித்து பல்வேறு கட்சி தலைவர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். தமிழக பா.ஜ.,பொது செயலாளர் சீனிவாசன் வெளியிட்டுள்ள

சென்னை: சசிகலா அறிவித்ததை போன்று தினகரனும் அரசியலை விட்டு ஒதுங்க வேண்டும் என பா.ஜ.,வின் தமிழக பொது செயலாளர் சீனிவாசன் தெரிவித்துள்ளார்.



latest tamil news



சசிகலா அரசியலை விட்டு ஒதுங்குவதாக இன்று அறிக்கை மூலம் தெரிவித்து உள்ளார். இதனையடுத்து அவரின் முடிவு குறித்து பல்வேறு கட்சி தலைவர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

தமிழக பா.ஜ.,பொது செயலாளர் சீனிவாசன் வெளியிட்டுள்ள செய்தியில் சசிகலா அரசியலை விட்டு ஒதுங்குவதாக அறிவித்துள்ளதை வரவேற்கிறேன் அதே போன்று தினகரனும் அரசியலை விட்டு ஒதுங்கும் முடிவை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.


latest tamil news



காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர் அழகிரி கூறி இருப்பதாவது: அரசியலில் அனுபவம் வாய்ந்தவர் சசிகலா ஆனால் ஆளுமை கிடையாது. பீகாரில் முதல்வர் நிதிஷ்குமாரை இரண்டாம் இடத்திற்கு தள்ளிவிட்டுபா.ஜ.,முதலிடத்திற்கு வந்துள்ளது. பா.ஜ.,வின் சதி திட்டத்தில் சசிகலா சிக்காமல் முடிவை அறிவித்து இருப்பது வரவேற்கத்தக்கது. இவ்வாறு தெரிவித்துள்ளார்.


மேலும் தலைவர்கள் கருத்து



சசிகலா அறிக்கை மகிழ்ச்சி அளிக்கிறது: கே.பி. முனுசாமி


ஜெயலிதா ஆன்மா சாந்தி அடையும் வகையில் சசிகலா அறிக்கை வெளயிட்டு்ளளார். சசிகலாவின் இந்த முடிவு மகிழ்ச்சி அளிக்கிறது. சசிகலாவை அ.தி.மு.க.வில் சேர்த்து கொள்வது காலம் தான் பதில் சொல்லும். ஜெயலலிதா ஆட்சி வரக்கூடாது என நினைப்பவர் தினகரன்.


காங். கே.எஸ்.அழகிரி:

சசிகலா அரசியல் அனுபவம் பெற்றிருந்தாலும், அவர் ஆளுமை இல்லாதவர் . அவரின் இந்த முடிவை வரவேற்கிறேன்.


வருத்தம் அளிக்கிறது



சசிகலா அரசியலைவிட்டு ஒதுங்கியது வருத்தம் அளிக்கிறது: தனியரசு எம்.எல்.ஏ.,


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X