பொது செய்தி

தமிழ்நாடு

தேர்தல் ஆணையத்திற்கு பெட்ரோலிய டீலர் கோரிக்கை

Added : மார் 03, 2021
Share
Advertisement
சென்னை:எண்ணெய் நிறுவனங்களுக்கு செலுத்துவதற்காக, வங்கிகளுக்கு, ஆவணங்களுடன் எடுத்து செல்லும் பணத்தை, பறிமுதல் செய்யக்கூடாது என, தமிழக பெட்ரோலிய டீலர்கள் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்து உள்ளது.கூட்டமைப்பின் தலைவர் முரளி கூறியதாவது:தமிழகத்தில், பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களின், 4,570 பெட்ரோல் பங்க்குகளை, டீலர்கள் நடத்தி வருகின்றனர். அவற்றில், 90 சதவீதம், ரொக்க பணப்

சென்னை:எண்ணெய் நிறுவனங்களுக்கு செலுத்துவதற்காக, வங்கிகளுக்கு, ஆவணங்களுடன் எடுத்து செல்லும் பணத்தை, பறிமுதல் செய்யக்கூடாது என, தமிழக பெட்ரோலிய டீலர்கள் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்து உள்ளது.

கூட்டமைப்பின் தலைவர் முரளி கூறியதாவது:தமிழகத்தில், பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களின், 4,570 பெட்ரோல் பங்க்குகளை, டீலர்கள் நடத்தி வருகின்றனர். அவற்றில், 90 சதவீதம், ரொக்க பணப் பரிவர்த்தனை நடக்கிறது. ஒவ்வொரு பங்கிலும், தினமும், 5 லட்சம் ரூபாய் முதல், 25 லட்சம் ரூபாய் வரை வசூலாகிறது.

பெட்ரோல், டீசல் சப்ளை செய்வதற்காக, எண்ணெய் நிறுவனங்களுக்கு வழங்க வேண்டிய பணத்தை, தினமும் வங்கியில் செலுத்த வேண்டும். இல்லையெனில், பெட்ரோல், டீசல் சப்ளை செய்யப்படாது. தற்போது, தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளன.

எனவே, 'ஆதார்' கார்டு, வங்கி சார்பில் அளிக்கப்பட்டுள்ள பரிந்துரை கடிதம் உள்ளிட்ட, உரிய ஆவணங் களுடன் எடுத்து செல்லும் பணத்தை, பறிமுதல் செய்யக்கூடாது என, பறக்கும் படை அதிகாரிகளை அறிவுறுத்துமாறு, தேர்தல் ஆணையரிடம், கடிதம் அளிக்கப்பட்டு உள்ளது.இவ்வாறு, முரளி கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X